விடுதலைப் புலிகள் சரணடையவேண்டும் இலங்கை காவல்துறை - சரணடைய முடியாது புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன்
இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார் விடுதலைப் புலிகள் சிலர் அகதிகள் முகாம்களில் ஊடுருவியிருப்பதாகவும், சிலர் வன்னிக் காடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் மேலும் சிலர் கிழக்கே சிறு குழுக்களாக இருப்பதாகவும் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக
கூறியஅவர், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும்விடுதலைப் புலி உறுப்பினர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சரணடைய முடியாது -விடுதலைப் புலிகள்
காவல் துறை கேட்டுக் கொண்டது போல தாம் சரணடைய முடியாது என்று பிபிசி தமிழோசையிடம் கூறிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன், நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் சிறு சிறு குழுக்களாக விடுதலைப் புலிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
தமது துப்பாக்கிகளை மவுனிப்பது என்ற நிலை நீடித்தாலும் கூட, மக்களின் தேவைகளுக்காக அரசியல் முன்னெடுப்புக்களில் பங்கு பெறுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளதாகவும் தயா மோகன் கூறினார்.

Comments