வவுனியாவில் இருந்து மன்னார் செல்லும் வீதிப் பக்க முகாமருகே கால்வாயில் யுவதிகளின் சடலம்--ராணுவம் கைவரிசை

விடுதலைப்புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்றதாக தெரிவிக்கப்படும் பெண்களில் சர்ச்சைக்குரியதாக கரையொதிங்கியதாகத் தெரிவிக்கப்படும் சடலங்கள் குறித்து அச்ச சூழ்நிலையொன்று முகாம்களிடையே பரவி உள்ளதாக எமக்கு தெரிய வந்துள்ளது.
வவுனியாவில் இருந்து மன்னார் செல்லும் வீதிப் பக்கம் அமைக்கப்பட்டிருந்த பரிய முகாம் ஒன்றில் தங்கியுள்ள மக்கள் அருகில் உள்ள குளம் அல்லது கால்வாய் ஒன்றில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இன்று அவ்வாறு குளித்துக் னொண்டிருக்கும் போது 3க்கும் அதிகமான இளம் யுவதிகளின் சடலங்கள் குறித்த கால்வாய் அல்லது குளம் வளியே மிதந்து சென்றதனை பொதுமக்கள் கண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் முகாம்களுக்குப் பொறுப்பாக இருந்த படையதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று மாலை வரை குறித்த ஆற்றுப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கான குளிப்பதற்கான தண்ணீர் வசதிகள் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தாக முகாம் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கால்வாயை அண்தித்த பின்புறம் காட்டுப் பகுதி எனவும் கூறப்படுகிறது.

சுமார் 18க்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட யுவதிகளின் சடலங்களே இவை என குளிப்பதற்காக சென்றவர்கள் தெரிவித்ததாக அங்கு இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரக் கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக புதிய காணிகள் துப்பரவு செய்யப்பட்டு குடியமர்த்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே இவ்வாறு கரையொதுங்கிய சடலங்கள் எவருடையது என்பது தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. எனினும் இச்சம்பவம் முகாம்களில் உள்ள மக்களிடையே பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இன்றைய தினம் வவுனியாவிலுள்ள முகாம் ஒன்றில் மதிய உணவுக்காக காத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நெரிசலால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடைய நபர் எனவும் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://d.yimg.com/a/p/afp/20090503/capt.photo_1241340090666-1-0.jpg?x=400&y=328&q=85&sig=NLkFhiXdg8F7Hovi_23FMg--
கணிசமான நேரம் கடும் வெய்யிலின் மத்தியில் காத்திருந்த நிலையில் நெரிசலில் தள்ளுப்பட்ட நிலையில் நிலத்தில் வீழ்ந்ததாகவும் வாந்தியின் பின் மூச்சிரைந்து மயக்கமுற்றதாகவும் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இவரது பெயர் விபரங்கள் தொடர்பாக எந்தத் தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை.

இதனிடையே அரசினால் வழங்கப்படும் உணவு விநியோகம் மிக மோசமான கட்டத்தை எய்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நாள் தோறும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேருக்கு உணவு கிடைக்காத நிலையே நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்ள் உணவைப் பெற்றுக் கொள்ள பெரும் நெருக்கதலுக்குள்ளும் தள்ளுமுள்ளுகளுக்கும் உள்ளாகின்றனர்.
http://d.yimg.com/a/p/rids/20090504/i/r3149703498.jpg?x=400&y=325&q=85&sig=Ff1adSeZALjpk2zCM6.4YA--

சமைத்த உணவு பார ஊர்திகளில் எடுத்து வரப்படும் நிலையில் தராதரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அங்கு சென்று திரும்பிய அரச சார்பற்ற அமைப்புகள் கவலை தெரிவித்துளள்ன.
உருளைக் கிழங்கை தோலுரித்து தூளுக்குள் கரைத்து ஒரு கறி கிடைப்பதாகவும் அதிஸ்ட லாபச் சீட்டு விழுவது போல் 100 அல்லது 200 பாசலுக்கு ஒரு பாசலில் முட்டை அல்லது மீனை மக்கள் காணபதாகவும் அவ்வாறு கிடைப்பது அதிஸ்ட்டம் என மக்கள் பேசுவதாகவும் தெரிய வருகிறது.
இதே வேளை இந்த இடைத்தங்கள் முகாம்களைச் சுற்றி 600 மீற்றர் தூரம் சூனியப்பிரதேசமாக பிரகடணப்படுத்தும் ஆயத்தங்களும் மேற்கொள்ளப்படுவதாக ற்கு தெரிய வருகிறது.
http://d.yimg.com/a/p/afp/20090502/capt.photo_1241268260285-1-0.jpg?x=400&y=272&q=85&sig=KjumMyyBro50mN1D2jEqHA--

இதனிடையே பொதுமக்களை 500 முதல் 600 பேர் கொண்ட குழுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களிடையே சமைப்பித்ததல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது அரச சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் விசேட தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://d.yimg.com/a/p/rids/20090503/i/r587062012.jpg?x=400&y=282&q=85&sig=MOMR16a6Z0bbLpQdTi4sxQ--

Comments