பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வகையில் ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு ஓப்றா வின்விறேயிடம் மாயா வேண்டுகோள்
ஓஸ்கார் மற்றும் கிராமி விருதுகளுக்கு நியமிக்கப்பட்டவரும், மேற்குலக இசைத்துறையில் பிரபலமானவருமான ஈழத்துத் தமிழ்ப்பெண்ணான மாயா மாதங்கி அருள்பிரகாசம் அவர்கள், அமெரிக்காவின் மிகப்பிரபலமான தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியொன்றை நடாத்தும் ஓப்றா வின்விறேயுடன் தமிழர்கள் மீதான அநியாயங்கள் குறித்து உரையாடியுள்ளார்.
ரைம் சங்சிகை தயாரித்த 2009 ஆம் ஆண்டுக்கான மிகச் செல்வாக்கான நபர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கான கொண்டாட்டம் ஒன்றிலேயே மாயா அவர்கள் ஓப்றாவைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பில், பாதுகாப்பு வலயத்துக்குள் சிறிலங்கா இராணுவம் நடாத்தும் அகோரத் தாக்குதல்கள் பற்றிக் கதைத்துள்ளார். இது தொடர்பில் சனல் 4 வெளியிட்ட அகதி முகாம்களுக்குள் நடக்கும் அநியாயங்கள் பற்றிய செய்தியையும் மாயா குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கெதிராக சிறிலங்கா இராணுவம் நடாத்தும் அநியாயங்களை நிறுத்தும் தொடர்பாக ‘நீங்கள் ஏதாவது செய்யுங்கள்’ என்று ஓப்றாவிடம் மாயா கேட்டுள்ளார்.
Comments