முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் பலபடகுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பினர், என்று ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இதுவிபரமாவது:-
சனிக்கிழமை இரவும் ஞாயிறு அதிகாலையிலும் தரை மற்றும் கடல்ப் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றன. இதில், முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் 6 படகுகளை தாம் அழித்துள்ளதாக இலங்கை ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முற்பட்ட படகு மீதே தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு அதிகாலை 1.30 அளவில் இந்த தாக்குஇடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர்கள் பல படகுகள் இந்தத் தாக்குதலில் தப்பிச் சென்றுள்ளதனையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
26 வருடங்களுக்குப் பின் புலிகளிடம் இருந்து கடல்ப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் பாதுகாப்புத் தரப்பு வெளியிட்ட அறிக்கையின் பிறகே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
நந்திகடல்ப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தளபதிகள் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டதும் உண்மை எனத் தெரிய வருகிறது. இதில் யாழ்மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் முக்கிய தளபதி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிய வருகிறது. ஆயினும் புலிகள் தரப்பில் இந்தத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எனினும் மூழ்கடிக்கப்பட்ட படகுகள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தவிர தப்பிச் சென்ற படகுகளில் சென்றவர்கள் யார்? அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ற கேள்வி பாதுகாப்புத் தரப்பைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதே நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான் உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் அந்தப் படகுகளில் பாதுகாப்பான தமது தளத்திற்குச் சென்றுவிட்டார்கள் என்பது புலிகள் தரப்பிலிருந்து நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த செய்தியாகும்.
ஆக விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்துகின்ற உயர் கட்டமைப்பு, புலனாய்வுக் கட்மைப்பு, அவற்றிற்குரிய ஆளணி தளவாடங்கள் என்பவை பாதுகாக்கப்பட்டு விட்டதாகவே புலிகளின் உட்கட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.
புலிகள் இயக்கத்தை நடத்திச் செல்ல அதன் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கவேண்டும் என்பது முக்கியம் என்ற கட்டத்தை நெருங்கியவேளையில் புலிகள் உயர்மட்டத் தலைவர்களின் வேண்டுகோளுக்குச் செவிமடுத்தே பிரபாகரன் இதற்கு ஒத்துகொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.
ஆனால் அரசாங்கம் நடத்திவரும் தற்போதைய ஊடக பிரச்சாரத்தை புலிகளும் மறுக்கப் போவதில்லை எனவும் தெரிய வருகிறது. காரணம் தொடருகின்ற சர்வதேச பிராந்திய அரசியல் நகர்வுகளிற்கு அரசாங்கத்தின் பிரச்சாரம் வெகுவாக உதவும் என்பதால் புலிகள் மவுனம் காக்கப்போவதாகவும் தெரியவ்ந்துள்ளது .
சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனின் அரசியல் நகர்வுகள், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கை, அதனை நோக்கிய புலிகளின் பதில்கள், இந்திய அரசின் முன் நடவடிக்கைகள் சர்வதேசத்தின் கைகளில் வழங்கப்பட்டுள்ள பந்தை அவர்கள் பிரயோகிக்கும் முறை முதலானவற்றைப் பொறுத்தே புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் எனவும் புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இலங்கையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்ததையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வெள்ளை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடையில் பிரபாகரன் இருப்பதற்கான தகவல்கள் இல்லை எனவும்,விடுதலைப்புலிகள் தற்போது ஒரு சிறிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டுள்ளனர் அவர்களிடையேதான் பிரபாகரனும் இருக்கலாம் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கே? படையினர் சுற்றிவளைத்துள்ள 800 கிலோ மீட்டர் பரப்பிற்கு உள்ளேயா? அல்லது, அதற்கு வெளியே வன்னியிலா அல்லது அதற்கும் அப்பால் இலங்கையினுள்ளேயா? இல்லை வெளிநாடொன்றிற்கு தப்பிச் சென்றுவிட்டாரா? என்ற கேள்விகள் பலரையும் உலுப்பிய நிலையில் தான் "பிரபாகரனின் சடலம் கொழும்பு வைத்தியசாலையில் உள்ளது என்றும் பனாங்கொட ராணுவ முகாமில் என்றனர். இல்லை அவரது சடலம் எரிந்துவிட்டதகவும் கொழும்பு நகரில் கைத்தொலைபேசியில் இந்தத் தகவல்களையும் செவி வழியான தகவல்களையும் அரசாங்கத் தரப்பினர் வேகமாகப் பரப்பி விட்டனர்.
யுத்தத்தை முடிப்பதாக இருந்தால் குறைந்தபட்சம் பிரபாகரனை அல்லது பொட்டு அம்மானை முடித்தாக வேண்டும். அப்போதுதான் யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்க முடியும், என்பது இராசபக்சே அரசின் எண்ணம்.
அதனால் முடிந்து விட்டதாகக் கூறினால்த்தான் மக்களிடம் இவர்கள் யுத்தம் முடிந்ததாக கூற முடியும். எனவே தான் இதை திட்டமிட்டு அரசே இலங்கையில் பரப்பியது.
இந்தியாவிலும் வேகமாகவே காட்டுத்தீயாக இச் செய்திகள் பரவின. பல ஊடகங்களும் செய்திகளை வேகமாகவே வெளியிட்டன. சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் செய்திகளை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை அரசும் பிரபாகரன் தப்பிச்சென்றுவிட்டார் என்ற செய்தியினை உறுதிப்படுத்தியுள்ளது.

Comments