தமிழீழ தேசியத் தலைவர் குறித்த சிறிலங்காவின் பொய்ப் பிரச்சாரம்

தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து சிறிலங்கா அரசு பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரம் குறித்து தமிழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. சர்வதேசத்தையும் சிங்கள மக்களையும் ஏமாற்றும் நோக்குடனும் திட்டமிட்ட ரீதியிலும் பரப்பப்பட்டு வரும் இந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு பின்னால் பாரிய நோக்கங்களை சிறிலங்கா கொண்டிருக்கின்றது.

தலைவர் குறித்து வெளியிடப்படுகின்ற செய்திகள் உண்மையில்லை என்பதை ஏற்கனவே விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் செ.பத்மநாதன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, சிறிலங்கா பரப்புகின்ற பொய்பரப்புரைகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை குழப்பமடைய வைத்து, புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டங்களை செயலிழக்கச் செய்யும் பாரிய திட்டமும் அடங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிட வேண்டாம்.

சிறிலங்காவினால் வெளியிடப்பட்டுள்ள அந்த ஒளிப்படக் காட்சியை சர்வதேச ஊடகமான AFP 'வரைகலைப் படம்' என அடையாளம் இட்டு காட்சியை (AFP காட்சியைப் பார்வையிட) ஒளிபரப்பியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விளைகின்றோம்.

அத்துடன், ஆரம்பத்தில் வரிச் சீருடையுடன் படங்களை வெளியிட்டிருந்த சிறிலங்கா, பின்னர் சேற்றுக்குள் கிடந்ததாகக் கூறி வெற்றுடம்பில் சேறுகளை பூசி படங்களை வெளியிட்டிருந்தது. ஆடையுடன் இருந்தவரின் உடம்பில் எவ்வாறு சேறு வந்தது என்ற அடிப்படைச் சிந்தனை கூட இன்றி சிறிலங்கா சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக வெளியிட்டிருக்கும் இவ்வாறான படங்கள் குறித்து தமிழ் மக்கள் எந்தவிதத்திலும் குழப்பமடையத் தேவையில்லை.

இதற்கு மேலும் அந்தப் படங்களில் உள்ள தவறுகளையும், ஏமாற்றுத் தனங்களையும் நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றோம்.

Comments