உலகத் தமிழர் வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்: ஜெயலலிதாவுக்கு அமெரிக்க உலகத் தமிழர் இயக்கம் வாழ்த்து

செயல் திறன் மிக்க தாங்கள் - போலிக் காரணங்களினால் ஏற்பட்டிருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து - 'தனித் தமிழ் ஈழம்' அமைத்து, தமிழர்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு நிலைபெற்ற புகழ் அடைவீர்கள் என அமெரிக்காவில் இயங்கும் தமிழகத் தமிழர்களையே பெருமளவில் உறுப்பினர்களாகக் கொண்ட உலகத் தமிழர் இயக்கம் (WTO) ஜெயலலிதாவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் இன முன்னேற்றத்துக்காக தாங்கள் ஆற்றி வரும் பணிகளுக்கு உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக எங்களது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஈழத்தில் சொல்லவொண்ணாக் கொடுமைகளுக்குள்ளாகி உள்ள தமிழர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தாங்கள் செய்து வரும் செயல் எம்போன்றோர்க்கு ஒரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உலகத் தமிழ் அமைப்பு ஈழப்பிரச்சினைக்காக கருத்தரங்கங்கள் மற்றும் பேரணிகளையும் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இலங்கையில் முழுமையான அமைதி வாழ்க்கை திரும்ப வேண்டும் என்பதற்கு உலத் தமிழ் அமைப்பு தொடர்ந்து தொண்டாற்றி வருகிறது.

இலங்கைத் தீவை விட்டு ஆங்கிலேயர்கள் 1948 ஆம் ஆண்டு சென்றது முதல், தமிழர்களை அவர்களுடைய சொந்த நாட்டிலேயே இரண்டாந்தரக் குடிகளாக சிங்களவர்கள் நடத்தி வருகின்றனர்.

கொள்ளை, கொலை, கற்பழிப்பு என பல்வேறு கொடுமைகள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன.

அறவழிப் போராட்டம் நடத்திய தமிழர்களை சிங்களவர்கள் அடித்து நொறுக்கினர். வேறு வழி இல்லாமல் தான் தமிழர்கள் ஆயுதம் தாங்கிப் போராட வேண்டியதாயிற்று. இவை எல்லாம் தாங்கள் நன்றாக அறிந்தவையே. அல்லற்பட்டு ஆற்றாமல் அழுத தமிழர்களுக்கு அருமருந்தாக நீங்கள் விளங்கியுள்ளீர்கள்.

காலத்தினால் செய்த உதவி ஞாலத்தில் மாணப் பெரிது. "இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்களுக்குத் தனி ஈழம் தான் ஒரே தீர்வு, இந்திய இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்பேன்" என்று திடமாக அறிவித்துள்ள தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியாமல் உலகத் தமிழர்கள் திக்கு முக்காடுகிறார்கள்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்பி வாழ்த்துகின்றோம்.

செயல்திறன் மிக்க தாங்கள் மிக விரைவில் தனித் தமிழ் ஈழம் அமைத்துத் தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அரசின் அடக்குமுறை மற்றும் பல போலிக் காரணங்களினால் ஏற்பட்டிருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து தொடர்ந்து பணியாற்றுவீர்கள் என்பது உங்களுடைய தேர்தல் பேச்சுகளிலிருந்து தெரிகிறது.

தங்களுடைய பெயர் தமிழர்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு நிலைபெற்ற புகழ் அடையும் என்பது உறுதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்:

Ø அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியை வெல்ல வைத்து ஈழத் தமிழரின் இன்னல்களை நீக்குங்கள்: தமிழ்நாட்டு மக்களிடம் அவுஸ்திரேலிய இந்து சங்கம் வேண்டுகோள்

Ø அனைத்துலக சமூகம் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்: பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள்

Ø ஜெயலலிதாவின் குரல் ஈழத்தில் விடியலை உறுதிசெய்ய வேண்டும்: மலேசிய தமிழர்கள் வாழ்த்து

Ø "ஈழத் தமிழர்களுக்கு நீங்களே இன்று எதிர்காலம் பற்றிய நம்பிக்கை": ஜெயலலிதாவுக்கு கனடிய தமிழர் பேரவை வாழ்த்து

Ø "உங்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும்": ஜெயலலிதாவுக்கு பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து

Ø இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித் தமிழீழ அறிவிப்பு: ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் இருந்து அமைதிகாண் அமைப்பு வாழ்த்து

Ø எம்.ஜி.ஆரின் கொள்கை உறுதிப்பாட்டை உங்களில் காண்கின்றோம்: ஜெலலிதாவுக்கு நோர்வே அன்னை பூபதி கலைக்கூடம் பாராட்டு

Ø
உங்கள் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் பின்னால் உலகத் தமிழனம் துணையிருக்கும்: ஜெயலலிதாவுக்கு நோர்வே தமிழர்கள் ஆதரவு

Ø இதயக் கதவுகள் திறந்து 'தனி ஈழம்' அமைப்பேன் என்ற நீங்களே எம் நம்பிக்கை ஒளி: இத்தாலிய தமிழர்கள் ஜெயலலிதாவுக்கு நன்றி

Ø தமிழீழ விடுதலையை ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும்: சுவிஸ் தமிழர் பேரவை

Ø உலகம் கைவிட்ட மக்களை ஈழம் அமைத்து நீங்கள் காப்பாற்றுங்கள்: ஜெயலலிதாவிடம் கனடிய தமிழ் பட்டதாரிகள் வேண்டுகோள்

Ø நீங்களே எங்கள் நம்பிக்கை; புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் நீங்கள் வாழுங்கள்!: ஜெயலலிதாவுக்கு அவுஸ்திரேலிய தமிழர்கள் வாழ்த்து

Ø "ஈழத் தமிழர் ஆதரவுக் கோட்டை வெல்லட்டும்!" - ஜெயலலிதாவுக்கு அமெரிக்க தமிழர்கள் வாழ்த்து!

Ø ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிப்பு

Ø ஜெயலலிதாவின் "தனி ஈழ" நிலைப்பாடு: கனடிய தமிழர்கள் மகிழ்வு; வரவேற்பு!

Comments