தொடர்புபட்ட வெளி இணைப்பு: இந்தியாவின் - பொது உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் [PEOPLE’S UNION FOR CIVIL LIBERTIES - PUCL] ஐ. நா. பாதுகாப்பு சபையிடம் விடுத்த வேண்டுகோள்
அந்த பிரதேசத்தில் நடைபெறுபவை மனிதாபிமானத்துக்கு எதிரான போர்க் குற்றங்கள்குற்றங்கள் என வகைப்படுத்துவதற்குரிய ஆதாரங்கள் தமக்கு கிடைத்திருப்பதாக அவரது பேச்சாளர் ருப்பேர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்
வட பகுதியில் பாரிய மனிதார்ந்த பிரச்சினையை தோற்றுவித்துள்ள அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்துலக ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு தமது ஆதரவு உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான ஒரு நடவடிக்கை இப்போது அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். வடபகுதிப் போர் முனையில் என்ன நடைபெறுகின்றது என்பதற்கு சரியான கணக்கு எதுவும் இல்லை எனத் தெரிவித்த அவர், "கடுமையான எறிகணைத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பகுதியில் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன" எனவும் குறிப்பிட்டார்.
பக்கச்சார்பற்ற கண்காணிப்பாளர்களையும், ஊடகத்துறையினரையும், தொண்டு நிறுவனங்களையும், அனைத்துலக அவதானிப்பாளர்களையும் போர்ப் பிரதேசத்திற்கு சென்று, அங்கு என்ன நடக்கின்றது என்பதை பார்க்க விடாமல் தடுப்பது என்பது, அவ்வாறு தடுப்பவர்கள் எதையோ மறுக்கின்றார்கள் எதையோ மறைக்க முனைகின்றர்கள் என்பதையே காட்டுகின்றது எனவும் அவர் மேலும் தெரித்தார்.
Comments