ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு ஆயுத, ஆள், பண உதவிகளை செய்த இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியை தமிழகத்திலிருந்தே விரட்டும் நோக்கில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு உணர்வுள்ளத் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகி்ன்றது.
எமது இயக்கத் தோழர்களுக்கு காங்கிரஸ் குண்டர்களும், காவல்துறையினரும் ஏற்படுத்தி வரும் தடைகளைக் கடந்து நடந்து வரும் பிரச்சாரத்தின் போது கொடுக்கப்பட்டு வரும் துண்டறிக்கைகள் இப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன.
இத்துண்டறிக்கையை தமிழ் உணர்வாளர்கள் அவரவர் பகுதியில் நகலெடுத்தோ, அச்சிட்டோ கொடுத்து தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டுகிறோம். இத்துண்டறிக்கைகளை பெருமளவில் அச்சிட்டுக் கொடுத்து உதவ எண்ணமுள்ள அன்பர்கள் விரைவில் எம்மை தொடர்பு கொள்ளவும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
இளந்தமிழர் இயக்கம்.
Comments