இந்தியாவின் ராணுவ உதவிகளைப் பாரீர்!

நம் இனத்தை இப்படிக் கொன்றதும் அழித்ததும் யார்?

கொத்துக் கொத்தாக நம் குழந்தைகள் ஈழத்தில் செத்து விழுகின்றன!

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளையும் நச்சு வாயுக் குண்டுகளையும் தமிழர் வாழும் இடங்கள் மீது வீசுகிறார்கள்.

குண்டு விழுந்த இடங்கள், ஆட்கள், விலங்குகள், காடுகள் என்று அனைத்துமே எரிந்து கரிக்கட்டைகளாகின்றன!

மருத்துவமனைக்கு வரும் தமிழ்ப் பெண்களிடம் கட்டாயக் கருக்கலைப்பு செய்கிறார்கள்!

வயிற்றிலிருக்கும் சிசுக்களையும் வெட்டிக் கொல்கிறார்கள்!

அண்மையில் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட நச்சு வளி (விஷ வாயு)க் குண்டுகளை வீசிக் கொன்றிருக்கிறார்கள்!

இதுவரை ஒன்றல்ல இரண்டல்ல! இரண்டரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்!

“நாங்க இல்லை! எங்களுக்கு தொடர்பு இல்லை!” என்று காங்கிரசுக் கட்சி சொல்கிறது. தி.மு.க.வும் அதை வழி மொழிகிறது!

ஆனால்...

• செப்டம்பர் 9 அன்று சிங்களர்களின் வவுனியா படைத்தளம் தாக்கப்பட்ட போது இந்திய வீரர்கள் காயமுற்றனரே அது எப்படி?

• மேலூருக்கு அருகில் ஒரு லாரி பிடிபட்டபோது அது நிறைய இலங்கைக்குச் செல்லும் ஆயுதங்கள் இருந்தனவே, அது எப்படி?

• இலங்கைக்கு நமது வரிப்பணத்திலிருந்து 2000 கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்தீர்களே அது எதற்காக?

• வேவு பார்க்க இந்திய விமானங்களும் ரேடார்களும் பயன்படுத்தப்பட்டதே, அது எப்படி?

• கல்முனை குள உடைப்பில் பல நூறு இந்திய வீரர்கள் செத்துப் போனதாகச் செய்தி வந்ததே அது எப்படி?

• தஞ்சை வழியாக இலங்கைக்கு இராணுவத் தளவாடங்கள் அனுப்பப்பட்டது எதற்காக?

• ஈரோடு வழியாக 60-க்கும் மேற்பட்ட ராணுவ டாங்குகள் அனுப்பப்பட்டதே அது எதற்காக?

• தாம்பரத்தில் பயிற்சி பெற சிங்கள வீரர்கள் வந்ததும் அவர்கள் துப்பாக்கி காட்டி நம் தமிழ் மக்களை மிரட்டியதும் செய்தியில் வந்ததே, அது எப்படி?

• புனே நகருக்கு போரில் இறந்த 200 இந்திய வீரர்களின் சடலங்கள் வந்ததாகச் செய்தி வந்ததே எப்படி?

• நுங்கம்பாக்கத்தில் காயப்பட்ட பலர் மருத்துவம் பார்க்கிறார்கள் என்ற செய்தி வருகிறதே எப்படி?

• “போருக்கு உதவுவது இந்தியா தான்” என்று இலங்கைத் தலைமையமைச்சர் நன்றி சொன்னாரே அது எப்படி?

• இப்போது கொடிய நச்சு வளி (விஷ வாயு) ஆயுதங்களைப் பயன்படுத்தியது யார்?

தாக்குதலில் ஈடுபட்டிருக்கிற படையில் பாதிக்கு மேல் இந்தியப் படைகள்தான் என்று பிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறதே, எப்படி?

வெளியில் கசிந்த செய்திகளே இவ்வளவு! கமுக்கமாய் எவ்வளவோ!

யாருடைய வரிப்பணம் இப்படி இலங்கையில் கொட்டப்படுகிறது?

குடியாட்சி நாட்டில் ஏன் இந்த இராணுவ நடவடிக்கைகள் கமுக்கமாகவும், கள்ளத்தனமாகவும் நடைபெறுகின்றன!

ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களும் கிளர்ந்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்தபோதும் ஈழத் தமிழர்களை அழிப்பதில் இவர்களுக்கு ஏனிந்த மகிழ்ச்சி? ஏனிந்த கொக்கரிப்பு? ஆனால்...

இரத்தம் காயாத கைகளோடு தமிழ்நாட்டுத் தெருக்களில் இறங்கி, “எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று கேட்டு அதே கும்பல் இப்போது நம்மிடம் வருகிறது.

தமிழர்களே, எச்சரிக்கை!

வெட்கம்! வெட்கம்!

ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணைபோகும் காங்கிரசுக்கு - ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து தமிழர்களை கொல்லச் சொல்லும் காங்கிரசுக்கு -

போரை நிறுத்து என்று கூறவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சோனியாவின் காங்கிரசுக்கு -

“உலகத் தமிழர் தலைவர்” கி.வீரமணி வாக்கு சேகரிக்கிறாராம். மானமுள்ள திராவிடர்கழகத் தோழர்களே,

இதை சகித்துக் கொண்டு இன்னும் வீரமணி துதி பாடிக் கொண்டிருக்கத்தான் போகிறீர்களா? வெட்கம்; மகா வெட்கம்!

Comments