இலங்கையில் அந்நாட்டு இராணுவமும் விமானப் படையும் கடந்த இரண்டு நாட்களாக கடற்படையுடன் இணைந்து ஒரு சிறிய நிலப்பகுதிக்குள் நடத்திவரும் கோரத் தாக்குதலில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துவதற்கான சக்தியற்று உலக நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.
இன்று நேற்றல்ல, ஒரு வாரம் ஒரு மாதமல்ல, கடந்த இரண்டரை ஆண்டுகளாக இலங்கைத் தமிழினத்தின் மீது மகிந்த ராஜபக்சவின் சிங்கள இன வெறி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப் படுகொலையை உள்நாட்டுப் பிரச்சனை என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொண்டு வந்த உலக நாடுகள், அப்படிப்பட்ட நடவடிக்கையினால் 85,000 ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் அதனை இனப் படுகொலை என்று கூறாமல் உள்நாட்டுப் போரால் உருவான மனித அவலம் என்றும், மனிதாபிமானப் பிரச்சனை என்றும் பூசி மெழுகின. அதன் விளைவு அவைகளின் அழுத்தம் எந்த விதத்திலும் சிறிலங்க அரசை பணிய வைக்கும் சக்தியற்றதாகி விட்டது.
எதற்காக இந்த உள்நாட்டுப் போர்? யாரை அழிக்க இந்தத் தாக்குதல்? பயங்கரவாதிகள் என்று முத்திரையிடப்பட்ட அந்த இயக்கம் எப்படி முளைத்தது? அதற்கும் அது போராடுவதாகக் கூறிடும் மக்களுக்கும் என்ன உறவு? எப்படி இத்தனை ஆண்டுகள் அடுத்தடுத்து வந்த இன வெறி ஆட்சிகளை எதி்ர்த்து அந்த போராட்டம் வலிமையாக நீடிக்கிறது? அடுத்தடுத்து வந்த சிங்கள பேரினவாத அரசியல் தலைவர்கள் பேசியது என்ன? ஆட்சிக்கு கட்டிலில் வந்தமர்ந்த பின்னர் அவர்கள் செய்தது என்ன? சொந்த நாட்டின் மக்கள் மீதே முப்படைகளையும் ஏவிவிட்டு தாக்குதல் நடத்துவதற்கு என்ன காரணம்? தன்னாட்டு பெண்களையே அந்நாட்டு காவல் துறையினரும் இராணுவத்தினரும் பல்லாயிரக்கணக்கில் கற்பழித்துக் கொன்றது ஏன்?
அந்த அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அந்நாட்டு ஊடகங்களில் கடும் விமர்சனத்தி்ற்கு உட்படுத்தப்பட்டதே ஏன்? அப்படி விமர்ச்சித்த பல பத்திரிக்கையாளர்கள் பட்டப்பகலில் பகிரங்கமாகவே கொல்லப்பட்டனரே ஏன்? அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் அந்த நாட்டின் தலைநகரிலேயே வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு காண்டிக்கப்படுவது இன்றும் தொடர்கிறதே. இதன் பின்னணியில் அரசு உள்ளதா இல்லையா? அங்கு சாட்சிகளற்ற ஒரு போர் நடத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனவே, அப்படி ஒரு நிலை உண்மையா இல்லையா? என்று சராசரி மனிதனின் சிந்தனையில் எழும் கேள்விகளுக்கெல்லாம் இந்த உலக நாடுகளும், அவைகளின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான ஐ.நா.வும் நேர்மையாக விடைகாண முற்பட்டிருந்தால் இலங்கையில் நடைபெறுவது அப்பட்டமான இனப் படுகொலை என்பதும், அதனை கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்கள இன வெறி அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது என்பதையும் தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டிருப்பர். அதனை உலக மக்களுக்கு பிரகடனமும் செய்திருப்பர்.
நேர்மையான, நியாயமான அந்த அணுகுமுறையை திட்டமிட்டே தவிர்த்துவிட்டு, ராஜபக்சவின் அரச பயங்கரவாதத்தை அந்த அரசிற்கு உள்ள ‘இறையாண்மை’ என அங்கீகரித்து, அதன் நடவடிக்கைகளை அந்த அரசின் கோணத்திலிருந்தே பார்த்து நியாயம் கற்பித்துக் கொள்ள முற்பட்டதன் விளைவுதான் இன்றைக்கு அங்கு அரங்கேறிவரும் மாபெரும் மானுட இனப் படுகொலையை தடுத்த நிறுத்த முடியாத கையாலாக நிலை உலக நாடுகளுக்கும் ஐ.நா.விற்கு ஏற்பட்டதற்கான காரணமாகும்.
ஐ.நா.பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள அமெரிக்காவும், இங்கிலாந்தும், பிரான்ஸூம் மேலும் பல உலக நாடுகளும் உடனடியாக போரை நிறுத்துமாறு சிறிலங்க அரசை கேட்டுக் கொண்டன. ஆனால் அந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதது மட்டுமின்றி, போரை நிறுத்து என்று எந்த ஒரு நாடும் தங்களுக்கு உத்தரவிட முடியாது என்று எகத்தாளமாக சிறிலங்க அரசு கூறிவிட்டது.
“போரையும் நிறுத்தவு்ம் முடியாது, போர் நடக்கும் இடத்திற்கும் யாரையும் அனுமதிக்க முடியாது” என்று ராஜபக்சவின் இளைய சகோதரரும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபய ராஜபக்ச தன்னை சந்தித்த பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் அயலுறவு அமைச்சர்களிடம் கூறிவிட்டதாக இன்று காலை செய்திகள் கூறுகின்றன.
தங்களுடைய மனிதாபிமான முகங்களை தொங்க போட்டுக் கொண்டு திரும்பி விட்டனர் இந்த இரு வல்லரசு நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள்!
இலங்கையில் எந்த அளவிற்கு மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகிறது என்று ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல அரசு சாரா அமைப்புகளும் பல அறிக்கைகளை வெளியிட்டப் பின்னரும், அப்படிப்பட்ட மீறல்களுக்கு அடிப்படையாக உள்ள காரணம் என்ன என்பதை சற்றும் ஆராயாத ஐ.நா. இன்றுவரை மனிதாபிமானக் கண்ணீர் மட்டும் வடித்துக்கொண்டு வன்னிக்கு வெளியே நின்றுக் கொண்டிருக்கிறது.
கால் நூற்றாண்டுக் காலமாக தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக நின்று திட்டமிட்டு நடத்திவரும் ஒரு இனப் படுகொலையை உலகத்திற்கு அடையாளம் காட்டி, அதனைத் தடுத்து நிறுத்த தனது அதிகாரத்தை பாதுகாப்புப் பேரவையின் மூலம் பிரயோகம் செய்து தனிமைபடுத்தியிருக்க வேண்டிய ஒரு இன வெறி அரசை, ஜனநாயக அரசாக சித்தரித்து, அது மேற்கொண்டுவந்த இனப் படுகொலையை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக சித்தரிக்க அனுமதித்ததன் எதிர்விளைவையே இன்று ஐ.நா. சந்தித்துக் கொண்டிருக்கிறது. உண்மையை மறைத்து பொய்மைக்கு அது அளித்த இடமே இன்று அதனை மரியாதையற்ற ஒரு சர்வதேச அமைப்பாக காட்சியளிக்க காரணமாயிற்று.
இன்று அந்தக் கொடூர அரசும், அதனை தனது வசதியை கருத்தில் கொண்டு ஆதரவு அளித்துவரும் அதன் அண்டை நாடான இந்தியாவும், 5 கி.மீ. நீளமும் 1.5 கி.மீ. அகலமும் கொண்ட நிலப்பரப்பில் தஞ்சமடைந்துள்ள 1,20,000 அப்பாவிகள் மீது இறுதித் தாக்குதல் நடத்தி தங்களின் அழிப்புத் திட்டத்தை நிறைவேற்ற மும்முரமாக முயன்றுக் கொண்டிருக்கும் வேளையில் அதனை தடுத்தி நிறுத்திடத் திராணியற்றதாக உலக நாடுகள் உள்ளன.
இப்போது கூட அவைகள் முழுப் பலத்துடன் எதிர்த்து நின்று அம்மக்களை தடுத்துக் காத்திட முடியும். இலங்கையில் நடைபெறுவது இனப் படுகொலைதான் என்ற உண்மையை உலகிற்கு உரக்கக் கூவி அறிவித்தாலே போதும்... அங்கு போர் நின்றுவிடும்.
செய்யுமா உலக நாடுகள்? முடியுமா ஐ.நா.வால்?
இன்று நேற்றல்ல, ஒரு வாரம் ஒரு மாதமல்ல, கடந்த இரண்டரை ஆண்டுகளாக இலங்கைத் தமிழினத்தின் மீது மகிந்த ராஜபக்சவின் சிங்கள இன வெறி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப் படுகொலையை உள்நாட்டுப் பிரச்சனை என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொண்டு வந்த உலக நாடுகள், அப்படிப்பட்ட நடவடிக்கையினால் 85,000 ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் அதனை இனப் படுகொலை என்று கூறாமல் உள்நாட்டுப் போரால் உருவான மனித அவலம் என்றும், மனிதாபிமானப் பிரச்சனை என்றும் பூசி மெழுகின. அதன் விளைவு அவைகளின் அழுத்தம் எந்த விதத்திலும் சிறிலங்க அரசை பணிய வைக்கும் சக்தியற்றதாகி விட்டது.
எதற்காக இந்த உள்நாட்டுப் போர்? யாரை அழிக்க இந்தத் தாக்குதல்? பயங்கரவாதிகள் என்று முத்திரையிடப்பட்ட அந்த இயக்கம் எப்படி முளைத்தது? அதற்கும் அது போராடுவதாகக் கூறிடும் மக்களுக்கும் என்ன உறவு? எப்படி இத்தனை ஆண்டுகள் அடுத்தடுத்து வந்த இன வெறி ஆட்சிகளை எதி்ர்த்து அந்த போராட்டம் வலிமையாக நீடிக்கிறது? அடுத்தடுத்து வந்த சிங்கள பேரினவாத அரசியல் தலைவர்கள் பேசியது என்ன? ஆட்சிக்கு கட்டிலில் வந்தமர்ந்த பின்னர் அவர்கள் செய்தது என்ன? சொந்த நாட்டின் மக்கள் மீதே முப்படைகளையும் ஏவிவிட்டு தாக்குதல் நடத்துவதற்கு என்ன காரணம்? தன்னாட்டு பெண்களையே அந்நாட்டு காவல் துறையினரும் இராணுவத்தினரும் பல்லாயிரக்கணக்கில் கற்பழித்துக் கொன்றது ஏன்?
அந்த அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அந்நாட்டு ஊடகங்களில் கடும் விமர்சனத்தி்ற்கு உட்படுத்தப்பட்டதே ஏன்? அப்படி விமர்ச்சித்த பல பத்திரிக்கையாளர்கள் பட்டப்பகலில் பகிரங்கமாகவே கொல்லப்பட்டனரே ஏன்? அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் அந்த நாட்டின் தலைநகரிலேயே வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு காண்டிக்கப்படுவது இன்றும் தொடர்கிறதே. இதன் பின்னணியில் அரசு உள்ளதா இல்லையா? அங்கு சாட்சிகளற்ற ஒரு போர் நடத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனவே, அப்படி ஒரு நிலை உண்மையா இல்லையா? என்று சராசரி மனிதனின் சிந்தனையில் எழும் கேள்விகளுக்கெல்லாம் இந்த உலக நாடுகளும், அவைகளின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான ஐ.நா.வும் நேர்மையாக விடைகாண முற்பட்டிருந்தால் இலங்கையில் நடைபெறுவது அப்பட்டமான இனப் படுகொலை என்பதும், அதனை கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்கள இன வெறி அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது என்பதையும் தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டிருப்பர். அதனை உலக மக்களுக்கு பிரகடனமும் செய்திருப்பர்.
நேர்மையான, நியாயமான அந்த அணுகுமுறையை திட்டமிட்டே தவிர்த்துவிட்டு, ராஜபக்சவின் அரச பயங்கரவாதத்தை அந்த அரசிற்கு உள்ள ‘இறையாண்மை’ என அங்கீகரித்து, அதன் நடவடிக்கைகளை அந்த அரசின் கோணத்திலிருந்தே பார்த்து நியாயம் கற்பித்துக் கொள்ள முற்பட்டதன் விளைவுதான் இன்றைக்கு அங்கு அரங்கேறிவரும் மாபெரும் மானுட இனப் படுகொலையை தடுத்த நிறுத்த முடியாத கையாலாக நிலை உலக நாடுகளுக்கும் ஐ.நா.விற்கு ஏற்பட்டதற்கான காரணமாகும்.
ஐ.நா.பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள அமெரிக்காவும், இங்கிலாந்தும், பிரான்ஸூம் மேலும் பல உலக நாடுகளும் உடனடியாக போரை நிறுத்துமாறு சிறிலங்க அரசை கேட்டுக் கொண்டன. ஆனால் அந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதது மட்டுமின்றி, போரை நிறுத்து என்று எந்த ஒரு நாடும் தங்களுக்கு உத்தரவிட முடியாது என்று எகத்தாளமாக சிறிலங்க அரசு கூறிவிட்டது.
|

Comments