விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் மீட்கும் படையினரின் பிரயத்தனத்தில் இப்போது புலிகளின் தாக்குதல் வியூகங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது
கடந்த சில தினங்களாக கடல் மற்றும் தரைவழி தரையிறக்கம் மற்றும் முன்நகர்வுகளை தடுப்பதில் புலிகளின் தற்கொலை அணிகளே களமிறக்கப்பட்டுள்ளன.
குறைந்த உறப்பினர்களின் இழப்புடன் படையினருக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணுதல் மற்றும் படையினரின் மனவலிமையைச் சிதைப்பது என்ற உத்திகளை விடுதலைப் புலிகள் அதிகமாக கையாளத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த இரு நாட்களுக்கு முன்பாக 7 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் படை நகர்வு பின்னடைவைச் சந்தித்ததாகத் தெரிய வருகிறது. இன்றும் இத்தகைய 3 தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக வன்னியில் இருந்து எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.
வழமையாகவே நோயாளர்களை ஏற்றச் செல்லும் செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் முல்லைக் கடற்பரப்பிற்குச் சென்று கரையில் நிறுத்தப்பட்ட வேளை அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய படையினர் படையினரைத் தரையிறக்க முற்பட்ட போது விடுதலைப் புலிகளின் குண்டுகள் நிரப்பப்பட்ட 3 படகுகள் தாக்குதலை நடத்தி படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதோடு கடற்படையினரின் டோரா உள்ளிட்ட இரண்டு படகுகளை மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கடலில் இடம்பெற்ற இம்மோதலை நேரில் கண்டவர்கள் மூலம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றைய தரையிறக்கம் மற்றும் முன்னகர்வு முயற்சிகளும் பின்னடைவையே சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புல்மோட்டையில் இருந்து நோயாளர்களை ஏற்றிவரச் சென்ற செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் நோயாளர்களை ஏற்ற முடியாத நிலையில் தலைமைக் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டதாகத் தெரிய வருகிறது.
எனினும் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை விடுதலைப் புலிகளின் 3 படகுகளை தமது கடற்படையினர் தாக்கி அழித்துள்ளதாகவும், இதில் 23 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஊடகத் தகவல் மையம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.
குண்டுகள் நிரப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் இரண்டு தற்கொலைத் தாக்குதல் படகுகளும், ஒரு தாக்குதல் படகும் தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.
இதற்கிடையில் முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கடல்வழியாக நேற்று வியாழக்கிழமை பிற்பகல் தரையிறங்குவதற்கு முற்பட்ட படையினர் மீது விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதாகவும் அதன்போது கடற்படையினரின் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு படையினரின் தரையிறக்கம் முன்னகர்வு முயற்சிகளுக்கு எதிராக இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 300ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் பெருமளவு படையினர் கடும் காயங்களுக்கும் உள்ளானதாக வன்னியில் சில தரப்பினர் தெரிவிக்கின்ற போதும் அதனை சுயாதீனமாக செய்தியாளரால் உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும் இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் நேரடியாகத் தகவல்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.
இதேவேளை கடந்த இரு நாட்களுக்கு முன் புலிகளின் பாரிய மண் அரணை படையினர் தகர்த்த அடுத்த சில மணி நேரங்களில் மிகப் பெரிய தடுப்பரணை புலிகள் அமைத்ததாகவும் அதனை தாம் இதுவரை யுத்தத்தில் பார்த்ததில்லை எனவும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கொழும்புத் தகவல் தெரிவிக்கின்றது. இத்தகைய பாரிய மண் அணைகளை தகர்ப்பதிலேயே தமது நேரத்தின் பெரும்பகுதி செலவாவதாகவும் அதற்காக பெரும் எண்ணிக்கையிலான படையினரைப் பலிகொடுக்க வேண்டியேற்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் 87‐ 89 காலப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு எதிராகப் பயன்படுத்திய உத்திகளையே தற்போதைய யுத்தத்தில் பயன்படுத்துவதாகவும் தாம் உற்பத்தி செய்யும் ஆயுத தளபாடங்களையே களத்தில் தாக்குதலுக்குப் பயன்படுத்துவதாகவும் தெரிய வருகிறது.
அதனால் ஜொனி வெடி போன்ற மிதிவெடிகளை தேவைக்கேற்ப வெடி மருந்துகளை நிரப்பி பயன்படுத்துவதால் காயமடையும் படையினர் மீண்டும் களமுனைக்கு திரும்ப முடியாத அளவிற்கு பெரும் காயங்கள் ஏற்படுவதாகவும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாரிய மண் அணைகளில் நாற்று நட்டது போல மிதி வெடிகள் நிலக் கண்ணி வெடிகளை விதைத்திருப்பதனாலும் அவற்றை இலகுவில் இனம் காண முடியாதவாறு தமது சுய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதனாலும் படையினரின் புதிய கருவிகளுக்கு புலிகளின் மிதிவெடிகள், கண்ணி வெடிகள் சிம்ம சொப்பனமாக இருப்பதாகவும் இராணுவ தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விடுதலைப் புலிகளுடனான கடந்த 3 மாத யுத்தத்தில் குறைந்தது 20000 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ள அந்தப் படையதிகாரி இந்தக் கணிப்பீடு அண்ணளவானதே தவிர இதனை விட கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
யுத்தம் முடிவுறும் தறுவாயில் இந்த நிலைமை தெற்கில் பாரிய பிரச்சினை ஒன்றைத் தோற்றுவிக்கும் எனக் கூறிய அந்தப் படையதிகாரி வெற்றிக் களிப்பில் இருக்கும் சிங்கள சமூகம் தமது பிள்ளைகளைத் தேடத் தொடங்கும் போது ஒரு சமூகக் கிளர்ச்சியே ஏற்படும் நிலை உருவாகும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

Comments