ஈழத்தமிழர்களை பாதுகாக்க எந்தத் தியாகமும் செய்யத்தயார் : வைகோ

ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க எந்தத் தியாகமும் செய்யத்தயார்" என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 16ஆம் ஆண்டு ஆரம்ப விழாவில் உரையாற்றும் போது
அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 16ஆம் ஆண்டு ஆரம்ப விழா நேற்று காலை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெற்றது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. வுக்குத் தோள் கொடுத்து, அண்ணாவின் புகழ் மங்காத அளவுக்கு பாடுபட்ட இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. அதனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கட்டிக்காத்து வருகிறார்.

இதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றிக்கடன் செலுத்துகிறோம். இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் அமைக்கப்படும் என ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது ஆறுதல் அளிக்கிறது.

பெரியார், அண்ணா சிலைகள் முன்பு நின்று ஈழத்தமிழர்களைக் காக்க எந்தத் தியாகமும் செய்யத்தயாராக இருக்கிறோம் என சபதம் ஏற்கிறோம்.

ஈழத்தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் அழிக்கத் திட்டமிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விடுதலைப்புலிகளை வெல்ல முடியாது. உலகின் பூர்வீக இனம் தமிழர் இனம். அதனை அழிக்க முடியாது" என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Comments