இந்திய மத்திய அரசே இந்தப் போரை நடாத்துகிறது. அதில் சந்தேகம் வேண்டாம்.
சீன தேசம் சிறிலங்காவிற்குள் நுழையாமல் இருக்க , சிங்களவனின் தமிழின அழிப்பிற்கு ,பூரண உதவி வழங்குகிறது சோனியா காங்கிரசு.
இதனை புரிந்து கொள்ளுங்கள்.மறுபடியும் சோனியா ஆட்சிக்கு வந்தால், மீதமுள்ள தமிழர்களையும் அழிக்க உதவி புரிவார். அது நடக்கும்.
தமிழின அழிப்பிற்கு நீங்கள் ஒத்தாசையாக இருக்கப்போகிறீர்களா?
சிந்தியுங்கள் தமிழக உறவுகளே!
இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்கு, தமிழினத்தை காக்க உதவுமா இல்லையேல் அழிக்க உதவப்போகிறதா?
சிந்தியுங்கள் . இந்த ஆட்சி மறுபடியும் வராமல் தடுக்க உதவுங்கள். ஈழத்தமிழினத்தின் தலைவிதி உங்கள் கைகளில்.
இந்திய நலனிற்காக ,தமிழினம் பலியாவதா!
இந்தியாவின் உண்மையான நண்பன் ஈழத்தமிழன் என்று தெரிந்தும் , சிங்களத்திற்கு ஏன் இந்த காங்கிரசு- தி.மு.க கூட்டு உதவு புரிகிறது? இந்தியாவை மீறி ,எந்தவொரு நாடும் தலையிட முடியாத நிலை ஏன் ஏற்படுகிறது?
ஆகவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சர்வதேசமும் மாறும்.
ஈழத்தமிழரை காத்திட , காங்கிரசு கூட்டை தோற்கடியுங்கள் தமிழக மக்களே.
சாவின் விளிம்பில் நிற்கும் ஈழ மக்களின் வேண்டுகோள் இது.
எவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நாம் சொல்லவில்லை.
ஆனால் எவர் வரக்கூடாது என்று உங்களிடம் கூற விரும்புகிறோம்.
கூறி விட்டோம். இனி எமது தலைவிதி உங்கள் கரங்களில்.
---வன்னி மகள்----
Comments