![](http://www.tamilwin.org/photos/thumbs/trademarks/swiss_flag_002.jpg)
மேலும் அந்த ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில்,
அன்பான சுவிஸ் தமிழ் உறவுகளே!
தாயகத்தல் இன்று மிகப்பெரும் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிகாலையிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட எமது உறவுகள் சிங்கள இனவெறி அரசால் நரபலி வேட்டையாடப்பட்டுள்ளனர். இனியும் நாம் இங்கு அமைதியாக இருக்க வேண்டுமா? இன்றே இத்தருணமே பேர்ன் நாடாளுமன்றம் முன் அணிதிரளுங்கள்.
இன்று மாலை 16 மணிக்கு பேர்ண் நாடாளுமன்றம் முன்பாக அவசரகால ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
காலத்தின் தேவைகருதி உடனடியாக உங்களுடைய அன்றாட வேலைகளை இடைநிறுத்தி சோர்வுகளை கசப்புணர்வுகளை ஓரங்கட்டி அலை கடலென அணிதிரள்வோம்.
அத்துடன் நாம் அனைத்துப் பொதுமன்றங்கள் ஆலயங்கள் கல்வி நிறுவனங்கள் அனைவருக்கும் பகிரங்க அவசரகால அழைப்பு விடுக்கிறோம்.
சுவிஸ் அரசின் மௌனத்தை மக்க்கள் எழுச்ச்சியால் கலைப்போம். அழைக்கிறார்கள்
ஏற்பாட்டுக்குழு
இவ்வாறு பேர்ண் நாடாளுமன்றம் முன்பாக அவசரகால ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்கு செய்த ஏற்பாடுக்குழு தெரிவித்துள்ளது.
Comments