பிரான்ஸ் றீப்பப்ளிக் சதுக்கத்தில் அவசர ஒன்றுகூடல்: தமிழ் மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு

சனிக்கிழமையன்று இரவு, கொடிய ஆயுதங்களைப் பாவித்து 2000க் கணக்கான உயிர்களைப் பலி எடுத்துள்ளது சிங்களம். கொடிய சிங்கள அரசின் கோரமுகத்தை கிழித்தெறிய வேண்டும். பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் றீப்பப்ளிக் சதுக்கத்திற்கு திரண்டு வருமாறு அழைக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

தொடர்ந்து 33 வது நாட்களாக உண்ணா நிலையிலிருக்கும் செல்வகுமார், நவநீதன் ஆகியோர் நீர் மட்டும் அருந்தியபடி மிகவும் உறுதியோடு இப்போராட்டத்தை தொடர்கின்றனர்.

தமிழினப்படுகொலையை தடுக்கக்கோரி பட்டினி கிடக்கும் இவர்களை பெருமளவான பிராஞ்சு அரசியல் ஆர்வலர்கள், சட்டவாதிகள், எழுத்தாளர்கள் என பெருமபாலானவர்கள்; பார்வையிட்டு செல்வதுடன், தன்னின மக்களின் விடிவுக்காய் மேற்கொள்ளப்படும் இந்த உண்ணாநிலைப் போராட்டம் வெற்றியளிக்கும் எனக்கூறிச் செல்கின்றனர்.

இலட்சியத்தின் இமயத்தில் நிற்கும் இளைஞர்களுக்கு உறுதுணையாக நிற்போம். அனைவரும் றீப்பப்ளிக் சதுக்கத்தில் ஒன்று கூடுவோம்.

Comments