"உங்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும்": ஜெயலலிதாவுக்கு பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவுடன் இந்திய மத்திய அரசு அமையும் நாளையும், எங்கள் அன்னை பூமியில், எங்கள் உரிமை பூமியில் நாம் 'தனி ஈழம்' காணும் நாளையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என்று பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பு அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொடிய சிங்கள இனவெறி அரசின் கொலைக்கரங்களில் இருந்து எங்கள் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள் என்று உலகத்தின் வீதிகளில் நாளும் பொழுதும் கண்ணீரோடு போராட்டங்களை நடத்திவரும் எங்களுக்கு அண்மையில் தாங்கள் ஆற்றிய உரை புதுத்தென்பையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

தாயகத்தில் இருந்து அன்றாடம் கிடைக்கின்ற செய்திகளால் கவலை மிகுந்தும் உலகத்தின் பராமுகத்தால் ஏமாற்றத்துடனும் இருந்த ஈழத் தமிழினத்தின் புலம்பெயர்ந்த புதிய தலைமுறையினராகிய நாங்கள் தங்களின் நேர்மையானதும் உரிமை மிகு சிந்தனைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம்.

தமிழீழ மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை சரியாக அடையாளம் கண்டு கடந்த காலங்களில் அ.இ.அ.தி.முகவும் அதன் தோழமைக் கட்சிகளும் உரிய காலங்களில் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பதையும் நாம் அறிவோம்.

குறிப்பாக ஈழத் தழிழர் நெஞ்சங்கள் எல்லாம் அழியாத இடம்பிடித்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலம் ஈழத் தமிழர்களின் பொற்காலம் என எமது பெரியோர்கள் கூறுவார்கள். தாங்களும் அத்தகைய பொற்காலத்தை எமக்கு உருவாக்கித் தருவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

எதிர்வரும் தேர்தலில் தங்கள் தலைமையிலான கூட்டணி பெருவெற்றி பெற வாழ்த்துகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்:

Ø இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித் தமிழீழ அறிவிப்பு: ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் இருந்து அமைதிகாண் அமைப்பு வாழ்த்து

Ø எம்.ஜி.ஆரின் கொள்கை உறுதிப்பாட்டை உங்களில் காண்கின்றோம்: ஜெலலிதாவுக்கு நோர்வே அன்னை பூபதி கலைக்கூடம் பாராட்டு

Ø
உங்கள் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் பின்னால் உலகத் தமிழனம் துணையிருக்கும்: ஜெயலலிதாவுக்கு நோர்வே தமிழர்கள் ஆதரவு

Ø இதயக் கதவுகள் திறந்து 'தனி ஈழம்' அமைப்பேன் என்ற நீங்களே எம் நம்பிக்கை ஒளி: இத்தாலிய தமிழர்கள் ஜெயலலிதாவுக்கு நன்றி

Ø தமிழீழ விடுதலையை ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும்: சுவிஸ் தமிழர் பேரவை

Ø உலகம் கைவிட்ட மக்களை ஈழம் அமைத்து நீங்கள் காப்பாற்றுங்கள்: ஜெயலலிதாவிடம் கனடிய தமிழ் பட்டதாரிகள் வேண்டுகோள்

Ø நீங்களே எங்கள் நம்பிக்கை; புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் நீங்கள் வாழுங்கள்!: ஜெயலலிதாவுக்கு அவுஸ்திரேலிய தமிழர்கள் வாழ்த்து

Ø "ஈழத் தமிழர் ஆதரவுக் கோட்டை வெல்லட்டும்!" - ஜெயலலிதாவுக்கு அமெரிக்க தமிழர்கள் வாழ்த்து!

Ø ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிப்பு

Ø ஜெயலலிதாவின் "தனி ஈழ" நிலைப்பாடு: கனடிய தமிழர்கள் மகிழ்வு; வரவேற்பு!

Comments