புலிகள் மீதான தடையை நீக்க முயற்சியுங்கள்: ஜெயலலிதாவிற்கு சீமான் கோரிக்கை

கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற தமிழீழ ஆதரவு கூட்டத்தில் இயக்குனர் சீமான் உரையாற்றுகையில், இந்திய இராணுவத்தினை அனுப்பி தனி ஈழம் அமைத்து தருவேன் என்று பேசி வரும் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து, எமக்கு இராணுவ உதவி வேண்டாம். அதற்கு பதிலாக புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இணையத் தமிழர் இயக்கம் சார்பாக தமிழீழ ஆதரவு திரைப்பட இயக்குனர்கள் கலந்துகொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாவலர் அறிவுமதி, ஆர்.கே.செல்வமணி,கெளதமன் இணையத் தமிழர் இயக்க நிர்வாகி மணி.செந்தில், கலைப்போராளி சீமான், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இயக்குனர் சீமான் பேசுகையில்...

உலக வல்லரசுகள் எம் தலைவனை எதிர்த்து போரிடுகின்றன. சனிக்கிழமை இரவு கூட 2000 மக்களை கொன்று குவித்து இருக்கிறது சிங்கள அரசு. அதற்கு இந்தியா நம் வரிப்பணமான 2000 கோடி தொகையை வட்டியில்லாத கடனாக கொடுக்கிறது. பல்குழல் பீரங்கிகளை வைத்து எம் மக்களை கொல்கிறது சிங்கள அரசு.

அதற்கு சீனா ,பாகிஸ்தான் ,இந்தியா உதவுகிறது . மனிதாபிமானம் கூட இல்லாத சோனியா நம் இனத்தை அழிக்க முயல்கிறார். போர் என்பதே இத்தாலிக்கும் தமிழனுக்கும் தான்.

எனவே நாம் தமிழர்களாக இருந்தால் இந்த தேர்தலில் காங்கிரஸ்க்கு ஓட்டு போடக்கூடாது எனவும்,காங்கிரஸ்க்கு வாக்களித்த கரங்கள் கல்லறைக்கு போனப் பிறகும் கூட எதிர்கால சந்ததி கல்லறையை தோண்டி காறி உமிழும் என ஆவேசமாக பேசினார்.

இந்திய இராணுவத்தினை அனுப்பி தனி ஈழம் அமைத்து தருவேன் என்று பேசி வரும் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்த சீமான்...எங்களுக்கு இராணுவ உதவி வேண்டாம்..அதற்கு பதிலாக விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கைக்கூப்பி கேட்டுக் கொண்டார்.

வருகின்ற தேர்தலில் ஓட்டுக்கள் பிரிந்து காங்கிரஸ் வெற்றி பெறாமல் இருக்க , தனி ஈழ ஆதரவு கொள்கையை முழங்கும் அ.இ.அதிமுக விற்கு வாக்களிப்பது அவசியம் எனவும் கூறினார்.

பாவலர் அறிவுமதி பேசுகையில்...

சோனியா காந்தி எம் மக்களின் இரத்த சகதியில் நடந்து கொண்டிருகிறார் என்றும் போரை நடத்தி எப்படியாவது எம் மக்களை முற்றிலுமாக அழித்து விட சோனியா முயல்கிறார் என்றும் கூறினார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி

இந்த தேர்தலில் காங்கிரசினை தோற்கடிப்பதுதான் தமிழனின் கடமை என்றும்..இன எதிரி காங்கிரஸ்க்கு ஓட்டு போடக்கூடாது என்றும் பேசினார்.

கூட்டத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்க முழக்கங்கள் போடப்பட்டன..கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டனர்.

Comments