சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து வருகிறது. இதற்கு இந்திய அரசு துணைநிற்கிறது ஆயுதம் வழங்குகிறது உளவு சொல்கிறது. உண்மையில் இந்தப் போரை இந்தியாவே பின்னின்று நடத்துகிறது. சோனியா காந்தியின் ஆதிக்கப் பழிவெறி, மகிந்த இராசபட்சேயின் இனக்கொலை வெறியுடன் சேர்ந்து, தமிழினத்தைக் கொன்றொழித்து வருகிறது.
எனவே இனப்பகை காங்கிரசைப் படுதோல்வி அடையச் செய்து சரியான பாடம் புகட்ட வேண்டும். அது காங்கிரசுக்குத் தண்டனையாக அமைவதோடு, மற்றெல்லாக் கட்சிகளுக்கும் எச்சரிக்கையாக அமையும்.
� யாருக்கு வாக்களித்தாலும் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்!
� வரும் தேர்தலில் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி காங்கிரசைத் தோற்கடியுங்கள்!
� வீரத் தமிழன் முத்துக்குமாரை விதைத்தோம்! காங்கிரசை ஆழக் குழிதோண்டிப்
புதைப்போம்!
மேற்காணும் செய்திகள் அடங்கிய துண்டறிக்கையைக் காங்கிரசு போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வழங்கி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் பரப்புரை செய்துவருகிறது. இப்பரப்புரைக்கு மக்களிடம் கிடைத்துவரும் பெரும் வரவேற்பு காங்கிரசின் தோல்வியை உறுதி செய்வதாக உள்ளது.
Comments