வட்டுக்கோட்டை பிரகடனம் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது

வட்டுக்கோட்டை பிரகடனக்தை மீளவும் அமுல்படுத்தக்கோரி தமிழ் மக்கள் அனைவரும் வாக்கழிக்க வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் கனகதுர்கை அம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (10-05- 2009) காலை 10 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்ற வாக்கெடுப்பு ஒன்று நோர்வே நாட்டிலும் ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

வாக்குச்சீட்டின் உள்ளடக்கமும் விளக்கமும்

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய தமிழர் தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும்; ஒரு தேசிய இனமாக எமது அரசியல் இலக்கை நாமே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை ஈழத் தமிழர்களுக்கு உண்டு என்பதையும், அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் 33 வருடங்களுக்கு முன்னரே தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்தனர்

இந்தப் பிரகடனம் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈழத்தமிழர்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று மக்கள் ஆணையாக நிறுவப்பட்டது.

இந்த ஆணையை சர்வதேச சமுகத்தின் முன் மீளவும் எடுத்துரைக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் புலம்பெயர் தமிழ்ச்சமுகம் இன்று நிற்கின்றது.

அண்மையில் இதற்கான முன்னுதாரணத்தை பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தன. நோர்வேயில் மக்கள் தீர்ப்பைக் கணிக்கும் முயற்சியை ஒழுங்கமைக்க பக்கசார்பற்ற பல்லினப் பண்பாட்டுப் பத்திரிகையான ஊத்றூப் (Utrop) முன்வந்துள்ளது.

இதே போல லண்டனிலும் இத் தேர்தல் நடைபெற உள்ளதால் மக்கள் அனைவரும் திரண்டு வந்து வாக்கழிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்


வாக்காளர் படிவத்தை தரவிறக்கம் செய்து நீங்கள் அச்சடித்துக்கொள்ள இங்கு அழுத்துங்கள்

Time: 10th of May 2009

between 10:00 am - 4:00 pm

Venue : Shri Kanagathurkkai Amman Temple,
5 Chapel Road,
West Ealing,
London,
W13 9AE.


Comments