கடந்த 24 மணிநேரத்திற்குள் 2000ற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிறீலங்கா அரசாங்கம் பொதுமக்கள் மீது எறிகணை குண்டுதாக்குதல்களை நடாத்துகின்றது.
இதுபோர்க்குற்றமாகும் மற்றும் அரச பயங்கரவாதம் எனவும் விடுதலைப் புலிகளின் சர்வதேச இராஜதந்திர தொடர்புகளுக்கு பொறுப்பான திரு.எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் ஐநா மற்றறும் சர்வதேச சமூகம் ஆபத்திற்குள் இருக்கும் பொதுமக்களைப் பாதுகாக்கும் தமது கடமையில் இருந்து தவறியுள்ளதால் மிகவும் மனவிரக்தியடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஏனைய சர்வதேச முரண்பாடுகள் நிகழ்ந்த பகுதிகளில் ஐநா மற்றும் சர்வதேச சமூகம் நடுநிலையாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டதுபோல் ஈடுபடவேண்டும் என்பதையே நாம் கேட்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments