அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியை வெல்ல வைத்து ஈழத் தமிழரின் இன்னல்களை நீக்குங்கள்: தமிழ்நாட்டு மக்களிடம் அவுஸ்திரேலிய இந்து சங்கம் வேண்டுகே
இது தொடர்பாக அவுஸ்திரேலிய இந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிங்கள அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் பட்டினிக் கொடுமையிலும் மருந்து, மாத்திரைகள் தடையினுள்ளும் சாவிற்குள் இருந்து மீள்வதற்கு தவியாய் தவிக்கும் ஈழத் தமிழரின் ஒரே நம்பிக்கை எம் புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களே.
"இலங்கையில் உள்ள தமிழருக்கு 'தனி ஈழம்' தான் ஒரே தீர்வு என்றும் அவர்களுக்கு நான் 'தமிழ் ஈழம்' அமைத்து கொடுப்பேன்" என்ற உறுதியான உங்கள் வார்த்தைகள் உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரையும் பூரிக்க வைத்திருக்கிறது.
இத்தகைய பாரிய அவலங்களுக்குள்ளும் சாவுக்குள் வாழும் மக்களுக்கு உங்கள் வார்த்தையே ஆதார சக்தியாகும். "அவர்களுக்கு நான் தனி ஈழம் அமைப்பேன்" என்ற உங்கள் வைர வரிகளே எமக்கெல்லாம் தேவ அசரீரியம்மா.
கவிதை வரிகளோ, வார்த்தை ஜாலங்களோ உங்களிடம் என்றும் இருந்ததில்லை. மாறாக செய்வதையே சொல்லும் தெளிவான உறுதியான வார்த்தைகள் நொந்து நூலாகிப் போன இதயங்களுக்கு ஆன்ம உரத்தை கொடுத்துள்ளது.
ஈழ விடுதலையை எடுத்து நோக்குகையில் அதில் அ.தி.மு.க. வின் பங்கு சொல்லில் அடங்காது.
போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அதன் எழுச்சி காலம் வரைக்கும் எம் மனங்களில் காலம் காலமாக குடியிருக்கும் எம் புரட்சித் தலைவர் அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதன் உண்மையான காவலனாக இருந்து மாபெரும் உதவிகளை அள்ளி வழங்கியவர்.
கவிதைகள், கதைகள் சொல்லி ஊரை ஏய்ப்பவர்கள் போலல்லாது உண்மையாகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்திய பெருமைக்கு உரியவர். உலகத் தமிழ் நெஞ்சங்களில் கலங்கரை விளக்காக என்றென்றும் வாழ்பவர்.
அன்று அவரிடத்தே இருந்த அதே தெளிவும் உறுதியும் இன்று அவர் வழியில் வந்த எம் பெரும் தலைவியிடத்திலே மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இருப்பது கண்டு ஈழத் தமிழ் இனம் மெய் சிலிர்த்துப்போயுள்ளது.
அன்பார்ந்த தமிழக மக்களே,
ஈழத் தமிழரின் இன்னல்கள் நீக்க தினம் தினம் மாபெரும் தியாகங்களையும் ஆர்பாட்டங்களையும் போராட்டங்களையும் ஆளும் கூட்டணியினரின் கொடும் அராஜகங்களுக்கு மத்தியிலும் சளைக்காமல் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறீர்கள்.
தொப்புள் கொடி உறவுகளே,
உங்களின் இந்த போராட்டங்கள் தியாகங்களுக்கு நாம் கால காலத்துக்கும் நன்றிக்கடன் உடையோம்.
மத்தியில் வரப்போகும் ஆட்சியில் ஏற்படும் மாற்றமே ஈழத் தமிழருக்கு இன்னல்கள் நீக்கும். இது தான் ஒரே வழி.
இத்தேர்தலில் ஈழத் தமிழ் ஆதரவு அணியாக திகழும் புரட்சித் தலைவியின் தலைமையில் ஒன்று சேர்ந்துள்ள அ.தி.மு.க. கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றியீட்ட வைப்பதே ஈழத் தமிழரின் இன்றைய இன்னல்களை நீக்கும்.
உங்கள் பற்றுக்கள் பாசங்களை கடந்து, காலத்தின் நிர்ப்பந்தம் கருதி இதனை நீங்கள் செய்ய வேண்டும். இதை விடுத்து வேறு எது செய்தாலும் அது ஈழத் தமிழனைப் பாதுகாக்கப் போவது இல்லை.
செய்வீர்களா உறவுகளே?... உங்களின் வாக்குகளை நம்பி அங்கு பல லட்சம் உயிர்கள் ஏக்கப் பெருமூச்சுடன் வாழ்கின்றன. உங்கள் வாக்கே எங்கள் வாழ்வு. 'தனி ஈழம்' அமைப்பேன் என்ற புரட்சித் தலைவியின் அணி நின்று ஈழத் தமிழினத்தைக் காப்பீர்களா எம் உறவுகளே? என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்திகள்:
Ø அனைத்துலக சமூகம் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்: பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள்
Ø ஜெயலலிதாவின் குரல் ஈழத்தில் விடியலை உறுதிசெய்ய வேண்டும்: மலேசிய தமிழர்கள் வாழ்த்து
Ø "ஈழத் தமிழர்களுக்கு நீங்களே இன்று எதிர்காலம் பற்றிய நம்பிக்கை": ஜெயலலிதாவுக்கு கனடிய தமிழர் பேரவை வாழ்த்து
Ø "உங்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும்": ஜெயலலிதாவுக்கு பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து
Ø இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித் தமிழீழ அறிவிப்பு: ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் இருந்து அமைதிகாண் அமைப்பு வாழ்த்து
Ø எம்.ஜி.ஆரின் கொள்கை உறுதிப்பாட்டை உங்களில் காண்கின்றோம்: ஜெலலிதாவுக்கு நோர்வே அன்னை பூபதி கலைக்கூடம் பாராட்டு
Ø உங்கள் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் பின்னால் உலகத் தமிழனம் துணையிருக்கும்: ஜெயலலிதாவுக்கு நோர்வே தமிழர்கள் ஆதரவு
Ø இதயக் கதவுகள் திறந்து 'தனி ஈழம்' அமைப்பேன் என்ற நீங்களே எம் நம்பிக்கை ஒளி: இத்தாலிய தமிழர்கள் ஜெயலலிதாவுக்கு நன்றி
Ø தமிழீழ விடுதலையை ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும்: சுவிஸ் தமிழர் பேரவை
Ø உலகம் கைவிட்ட மக்களை ஈழம் அமைத்து நீங்கள் காப்பாற்றுங்கள்: ஜெயலலிதாவிடம் கனடிய தமிழ் பட்டதாரிகள் வேண்டுகோள்
Ø நீங்களே எங்கள் நம்பிக்கை; புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் நீங்கள் வாழுங்கள்!: ஜெயலலிதாவுக்கு அவுஸ்திரேலிய தமிழர்கள் வாழ்த்து
Ø "ஈழத் தமிழர் ஆதரவுக் கோட்டை வெல்லட்டும்!" - ஜெயலலிதாவுக்கு அமெரிக்க தமிழர்கள் வாழ்த்து!
Ø ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிப்பு
Ø ஜெயலலிதாவின் "தனி ஈழ" நிலைப்பாடு: கனடிய தமிழர்கள் மகிழ்வு; வரவேற்பு!
Comments