தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்

1988/89 இல் இறந்த தலைவர் 90 இறுதி வரை இறந்தவராக இருந்தபடியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.

ஆனால் எமது போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் நாம் முன்னெடுத்துச் செல்லவும்.. சிறிலங்கா அரசின், சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களை, அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை... எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.

தலைவர் பற்றிய காணொளிகள்.. சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப வெளியிடப்படுகின்றன. அவருடைய முகம் போன்ற ஒன்றை போலியாக பிளாஸ்ரி சேர்ஜரிக் முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர்.

அதுமட்டுமன்றி நேற்று நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்றுதான் மீட்கப்பட்டதாம் என்பதும்.. நாணயக்கார நேற்று நாம் அப்படி ஒரு அறிக்கை விடவில்லை என்றதும்.. கவனத்தில் கொள்ளத்தக்கது. எதிரிகள் திட்டமிட்டு இதை செய்கின்றனர் என்பதற்கு இது நல்ல சான்று.

தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

எமக்கு இன்றைய தேவை போராளிகளினதும் மக்களினதும் இலட்சியத்தை சுமந்து கொண்டு எமது இனத்தின் தேச விடுதலையை பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளில் எல்லாம் உலகெங்கும் ஓய்வின்றி போராடிக் கொண்டிருப்பது மட்டுமே...! நிச்சயம் தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார். ஆனால் அதற்கான பொழுதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது.


1. தலையில சுட்டதெண்டுகினம் தலையின்ர மேல் பகுதிய காணேல..... அத மறைச்சு வைச்சிருக்கினம்.........

2. தலைவரின்ர நாடியின்ர நடுவில ஒரு வெட்டு இருக்கும்.... ஆனா இவை காட்டுற வீடியோல அப்பிடி இல்ல......

3. இவர்கள்சுடுறதுக்கு முதல் தலைவர் "பொறுங்க சவரம் செய்தா பிறகு சுடுங்கோ" எண்டு சொல்லி சவரம் செய்திட்டுதான் செத்தவரோ?

4. இவர்கள் காட்டுற படத்தில மூக்கு கூர்மையா இருக்கு.... தலைவரின்ர அப்பிடியில்ல......

5. இவர்கள் காட்டும் உருவத்தில ஒரு இடத்தில காதையே காணேல..... முதல்ல காட்டின காதும் தலைவரின்ர காதும் ஒண்டில்ல............

6. தலைவரின்ர கை கொஞ்சம் மொத்தம் கூட.... உவைன்ர உருவத்தில அப்பிடியில்ல.....

7. சிறிலங்கால காட்டுற வீடியோக்களில அது மாஸ்க் எண்டு அப்பிடியே தெரியுதெண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் சிலபேர் சொன்னவை....

9. உதுகள விட தலைவருக்கெண்டு சில அடையாளங்கள், புலியளுக்கெண்டு சில அடையாளங்கள் இருக்கு.... அவையொண்டும் உந்த உருவத்தில இல்ல.... அது என்னெண்டும் வெளில சொல்லேலாது..... பிறகு உவங்கள் அடுத்தமுறை ஏமாத்தேக்க.... எல்லாத்தையும் சரியா செய்துபோடுவாங்கள்...........

10.தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்து செல்வார் ????


Comments