வன்னி மக்களின் இறுதி வேண்டுகோள் ஒலிவடிவில்

வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுகள் மூலம் தாக்குதல்கள்: ஆயிரத்திற்கு அதிகமானோர் பலி! தெருத் தெருவாக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் - திலீபன்

வன்னி மக்களின் இறுதி வேண்டுகோள் ஒலிவடிவில்

இறுதிப் போர் என்று வன்னியில் சிறீலங்காப் படையினர் கொலை வெறித் தாக்குதல்களை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிமுதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என அனைத்துலகத் தொடர்பகத்தின் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தாக்குதல்கள் மத்தியிருந்தவாறே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த வாழும் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்காப் படையினர் வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்களையும், ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு வலயம் நாலாபுறமும் எரிந்த வண்ணம் உள்ளது. ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகள் அனைத்தும் செயலிழந்து காணப்படுகின்றன. காயமடைந்த மக்கள் தெருத்தெருவாக இருந்து இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் எதுவுமே செய்ய முடியாது பெரும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

165,000 மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால் புலம்பெயர் நாடுகளில் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடுங்கள். போராடினால் மட்டுமே இந்த மக்களைக் காப்பாற்ற முடியும்.

165,000 மக்களில் வாழும் இப்பகுதியில் கொல்லப்படும் மக்களின் பிரேதங்களின் எண்ணத் தொடங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

இதுவே எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கின்றோம் என திலீபன் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments