பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கையை உள்ளடக்குவது "அவசரம்' என்கிறது உகண்டா

வட இலங்கையில் குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை மேற்கு நாடுகள் மேற்கொண்டிருக்கும் அதேசமயம், வளர்ந்துவரும் நாடுகள் அக்கறையின்றி இருப்பதாக கருதப்படுகிறது என்று ஐ.நா.விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பிரச்சினை தொடர்பாக பாதுகாப்பு சபையில் ஆராய்வதற்கு தனது நாட்டிற்கு

பிரச்சினையில்லை என்றும் ஏதோவொன்றை செய்ய வேண்டியிருப்பதற்கான அவசர நிலைமை அங்கு உள்ளதாகவும் பாதுகாப்பு சபை உறுப்பினரான உகண்டாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

இது ஐ.நா.வில் காணப்படும் பொதுவான எண்ணப்பாட்டுக்கு எதிரானதாகும். சீனா, ரஷ்யா, வியட்நாம், லிபியா மட்டுமல்லாமல் பர்கினா பாசோ, உகண்டா, துருக்கி, ஜப்பான் ஆகிய பாதுகாப்பு சபை உறுப்பினர்களும் இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபையில் உத்தியோகபூர்வமாக ஆராய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.(துருக்கியும் ஜப்பானும் சமுகமளிக்க மாட்டாது என்று எதிர்வு கூறப்பட்டிருந்தது).

இப்போது பாதுகாப்பு சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கையை உள்ளடக்குவதில் பிரச்சினை இல்லை என்று உகண்டா தெரிவித்துள்ளது. அப்படியானால் ஏன் இந்த நாடுகள் காத்திருக்கின்றன?

என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் மனித உரிமைகளும் தொடர்பாக செவ்வாய்க்கிழமை குழுநிலைக் கலந்துரையாடல் இடம்பெற்றது. அப்போது இலங்கையின் ஆடைத் தொழிற்துறை தொடர்பான ஜி.எஸ்.பி+ "சிகிச்சைக்கு' ஐரோப்பிய ஒன்றியம் சாதகமான நிலைப்பாட்டை தொடரப் போகின்றதா என்பது குறித்து ஐ.நா.விலுள்ள நெதர்லாந்தின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பியட் டி கிளார்க்கிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மனித உரிமைகள் விவகாரத்தை பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல என்று கிளார்க் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுகையில்;

கடந்தவார இறுதியில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கையில், இவ் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் "கருதுகோள்களில்' இவை தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா? என்றும் சில சமயம் இந்தக் கருதுகோள்கள் வங்குரோத்தானவையாக இருக்கலாம் என்றும் இன்னர் சிற்றி பிரஸ் விமர்சித்திருக்கிறது.

இலங்கையின் நிலைவரம் "அவசரமானது' என்று உகண்டாவின் தூதுவர் கருத்து தெரிவித்துள்ள நிலைமையில்;

இலங்கை விஜயம் தொடர்பாக பான் கீ மூன் இப்போதும் பரிசீலித்துக்கொண்டு இருப்பதாக உயர்மட்ட வட்டாரங்கள் இன்னர்சிற்றி பிரஸுக்கு கூறியுள்ளன. இறுதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னராக இருக்கலாம் என்றும் இன்னர் சிற்றி பிரஸ் கூறுகிறது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை மதியம் பான் கீ மூனின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.

இன்னர் சிற்றி பிரஸ்: இலங்கையில் ஐ.நா.வின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ள முகாம்களில் பட்டினி மரணங்கள், பெண்கள் காணாமற் போதல் குறித்து இந்த தொலைக்காட்சி வெளிப்படுத்தியிருக்கிறது. அதனை பத்திரிகையாளர் ஒருவர் படம் எடுத்துள்ளார். அது தொடர்பாக நான் கேட்டேன் அதனை ஐ.நா. பார்த்திருக்கவில்லை என்று மைக்கேல் கூறியதாக நான் நினைக்கிறேன். அது தொடர்பாக ஐ.நா. எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. அதனை படம் பிடித்த பத்திரிகையாளர் அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டுவிட்டார். இலங்கையில் தனது பயணத்திற்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றியோ அல்லது பத்திரிகை சுதந்திரம் குறித்தோ ஐ.நா. கருத்துகள் எதனையும் கொண்டுள்ளதா? படம் எடுத்த பத்திரிகையாளர் வெளியேற்றப்பட்டமை குறித்து அபிப்பிராயம் எதனையும் ஐ.நா. கொண்டுள்ளதா?

இணைப்பேச்சாளர் ஹக்: அந்த ஒளிநாடா தொடர்பாக உண்மையில் எம்.பி.யிடம் கருத்து எதுவும் இல்லை. அதனை முதலாவதாக நேரடியாக நாம் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. உலகளாவிய ரீதியில் பத்திரிகை சுதந்திரத்திற்கு நாம் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், குறிப்பிட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக விசேடமாக கூறுவதற்கு எம்மிடம் எதுவும் இல்லை.

கேள்வி: செயலாளர் நாயகம் கடந்தவாரம் குறிப்பிட்டிருந்த விடயம் தொடர்பாக கேள்வி ஒன்று உள்ளது. இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக வித்தியாசமானதொன்றை உருவாக்க தான் சிந்தித்திருப்பதாக அவர் கூறியிருந்தார். தனது சிந்தனைகளை அவர் மீள மாற்றியமைத்துள்ளாரா? இந்த வார இறுதி நிகழ்வுகள் மற்றும் அங்கு தொடரும் நெருக்கடிகளின் பின்னர் தனது எண்ணப்பாடுகளை அவர் மீள மாற்றியமைத்திருக்கிறாரா?

இணைப் பேச்சாளர்: நேற்று நாம் விநியோகித்த அறிக்கையில் அவரின் சிந்தனைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இன்றைய செய்தியாளர் மாநாட்டில் அதனை நாம் அறிந்துள்ளோம். அவருடைய பயணத்திட்டங்கள் தொடர்பாக மேலும் கூறுவதற்கு எம்மிடம் எதுவுமில்லை. அவருடைய நம்பிக்கைகளிலேயே எமது நிலைப்பாடு தங்கியுள்ளது. வித்தியாசமானதை ஏற்படுத்தும் என்று அவர் நம்பினால் அவர் நிச்சயமாக செல்வார்.

கேள்வி: இப்போது உண்மையில் அது தொடர்பான நோக்கம் இல்லை என்று பத்திரிகையாளர்கள் கதைக்கின்றனரே?

இணைப் பேச்சாளர்: இது அவர் பரிசீலனை செய்து கொண்டிருக்கும் விடயமாகும். ஆனால், இறுதி முடிவு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை

Comments