புலம்பெயர் தமிழர்களைக் குழப்பும் சில பச்சோந்திகள் -2

வரலாற்றுத் தவறுசெய்த தமிழினமே உனக்கு ஒருமடல்-சுவிசிலிருந்து கிருஸ்ணா அம்பலவாணர்

இன்று தேசியத் தலைவர் பிரபாகரன் வீரமரணத்தை தழுவியுள்ள நிலையில் அவருக்காக ஒரு வணக்க நிகழ்வு கூட நடக்கவில்லை.

துக்க தினத்தைப் பிரகடனம் செய்து அழுது புரண்டு எம்மைத் தேற்றிக் கொள்ள முடியாத நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் எமக்குள்ளே இருக்கும் பிளவு நிலைதான்.

தேசியத் தலைவர் மரணமானதை அடுத்து அவரது வித்துடலை அடுத்த நாளே இரகசியமாக – அவசரமாக அரசாங்கம் எரித்தது. இதற்குக் காரணம் மக்கள் எழுச்சி உருவாகி விடக் கூடாதென்பதே.



புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள்: அனிதா பிரதாப்

ஈழம் தொடர்பாக பிரபாகரன் விட்டுக்கொடுப்புக்கு முன்வரவில்லை. தனது நோக்கத்தில் அவர் தோல்வி கண்டது மட்டுமனறி தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பமும் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர் முயன்றார். ஆனால், தமிழர், சிங்களவர் உட்பட இலங்கையரின் முழுத்தலைமுறையுமே இதற்கு அதிக விலை செலுத்தியுள்ளது என்று இந்தியாவின் முன்னணிப் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் குறிப்பிட்டுள்ளார்.


அண்மைய மோதலின்போது இடம்பெற்றதாகக் கவலை தெரிவிக்கப்படும் பொதுமக்களின் இழப்புகள் குறித்து அவர் குறிப்பிடவில்லை




வரலாறு படைத்த பிரபாகரன் - அருட் தந்தை ஜெகத் காஸ்பெர்

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது,

மாற்று க் கருத்து என்பது ---

ஒரு கொள்கைக்கு நிகரான வேறு வகையில் ஏற்புடைய கொள்கை அப்படியானவர்களை மாற்றுக்கருத்தாளர்கள் எனலாம்
அப்படித்தானே

இவர் மாற்றுக்கருத்தாளர்கள் என்று சொன்னவர்கள் யார் ??? சரி ஒட்டுக்குழுவும் பழைய கூட்டணிகளும் என்றால்

இவர்களிடம் என்ன கொள்கை இருக்கின்றது புலி எதிர்ப்பு ஒன்றை தவிர அது ஒரு கொள்கையா ??

இவர்களுக்கு தமிழர்களது சுயநிர்ணயம், ஆகக் குறைந்தது மனிதாபிமானம் ஆவது இருக்கின்றதா???

புலிகளுக்கு எதிராகச் செய்கின்றோம் என்று தமிழ்மக்களை கொன்று குவித்து வருபவர்கள்

தமது சுய நலத்திற்காக தாய், சகோதரிகள் , யாரையும் கூட்டிக்கொடுப்பதற்கும் ,உறவு கொள்வதற்கும் ,கொன்று குவிப்பதற்கும் தயங்காத ஈனப்பிறவிகள் இவர்கள்

இதை மாற்றுக் கருத்து என்று சொல்லுவது தகுமா ???


உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது,

"போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது,

ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

வேலுப்பிள்ளை பிரபாகரன் எழுச்சியும் வீழ்ச்சியும்....
இது பிபிசி தமிழோசையில் ஒரு பெட்டகம் அதில் தலைவரால் சொல்லப்பட்டிருக்கின்றது ராஜீவ்காந்தி படுகொலையில் -சம்பந்தப்படவில்லை என்று

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம்.

தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை.

எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.





ஆனாலும் இவர்கள் தலைவரை கொல்லுவதில் எனக்கு ஒரு உடன் பாடு இருக்கின்றது

இவ்வளவு காலமும் ஈழத்தமிழர்களில் ஒரு வீதமானவர்கள் தான் போராடிக்கொண்டிருந்தார்கள்

மற்றவர்கள் பார்வையாளராகவும் ,சிலர் பங்காளிகளாகவும் ,[ துரோகிகளை கணக்கெடுப்பதில்லை ] இருந்து கொண்டு புலிகள் ஏன் அடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்

நாங்கள் கொடுத்த காசுக்கு அளவாவது அடிக்க வேண்டும் என்று சொன்னவர்களும் உண்டு

ஆக தலைவர் இறந்து விட்டார் புலிகள் இனி இல்லை என்றாகி விட்டால் இவர்கள் இனி தாம் போராட வேண்டும் என்ற உணர்வாவது மிஞ்சும்

தமக்காக இனி ஒருவரும் தமது குடும்பத்தை பலி கொடுக்க இல்லை இனி நாமே நமக்காக போராட வேண்டும் என்றாவது உணருவார்கள்

தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்பவர்களுக்கு -இருக்கின்றார்

தலைவர் உயிரோடு இல்லை என்று சொல்லும் தமிழீழ உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்தி விட்டுப்போங்கள்

ஆனால் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இணையங்களிலும் வந்து அழுது குளறி மட்டுமே அஞ்சலி செலுத்த வேண்டும் என்று இவர்கள் அடம் பிடிப்பது ஏன் ????

தவிர ஒட்டுக்குழுக்களும் இது குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பது தான் இன்னும் வேடிக்கையானது

தொடரும்,,,,,,

Comments