மௌனித்திருக்கும் ஐ.நா. சபையிடம் 3 ஆவது முறையாகவும் இன்னசிற்றி பிறஸ் கேள்வி?

ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் எதிர்காலம் குறித்து எதிர்வு கூறிய சோதிடர் இலங்கை அரசாங்கத்தால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. சபை இது குறித்தும் மௌனமாக இருக்கிறது.

இனந்தெரியாத வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு ஐநா பணியாளர்கள் தொடர்பிலும் ஐ.நா. என்ன செய்துள்ளது என இன்னர் சிற்றி பிரஸ் மூன்றாவது தடவையாகவும் கேள்வியெழுப்பியது.
இவ்விடயம் தான் தொடர்பில் அறிந்துள்ளதாகவும், எனினும் இதுவரை அவர்கள் பற்றி எதுவித தகவலும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என்றும் இணைப் பேச்சாளர் பார்கன் ஹக் தெரிவித்துள்ளார். தன்னுடைய பணியாளர்களை ஐ.நா. பாதுகாக்கும் முறை இதுவா என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது. இலங்கையில் மட்டுமல்ல எங்கும் இது தான் நிலைமை என அவர் தெரிவித்தார்.

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக் குற்றம் என்பவற்றிலிருந்து இலங்கைக்குப் பாதுகாப்பளிக்கப்படும் அதேவேளை அங்குள்ள ஐ.நா ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கப்படுவதில்லை. இது ஏன் என இன்னொருமுறை இன்னர் சிற்றி பிரஸ் உடனடியாகவே ஒரு கேள்வியை முன்வைத்தது. ஆனால் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

ஜுன் 26ஆம் திகதிய பாதுகாப்புக் கவுன்சிலில் முழுநாளும் மக்களைப் பாதுகாப்பது பற்றியே பேசப்பட்டது. ஜோன் ஹோம்ஸ் அங்கிருந்து வெளியேறும் போது இன்னர் சிற்றி பிரஸ் அவரிடம் சில கேள்விகளைக் கேட்கக் காத்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட எம்.வி.அலி என்ற மனிதாபிமான உதவிக் கப்பல் குறித்து நீங்களோ ஐநாவோ ஏதாவது செய்தீர்களா?

இல்லை என ஹோம்ஸ் தெரிவித்தார். ஆனால் இந்தியாவில் அப்பொருட்கள் தரையிறக்கப்பட்டு அது இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. இதுவரை அது தான் நடந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள வைத்தயர்கள் தொடர்பில் ஏதாவது மேலதிக தகவல்கள் தெரியவந்ததா?

இல்லை என ஹோம்ஸ் தெரிவித்தார்.

17 அக்சன் பெய்ம் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டது உட்பட்ட பல படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டது பற்றி என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்ட போது ஐநா இதுவரை உத்தியோகபூர்வமாக இது வரை அதனைப்பற்றி எதுவும் அறியவில்லை. அது பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் தான் சொல்லலாம் என்றார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐநா பணியாளர்களுக்கு என்ன நடந்தது?

ஐநா இது பற்றி கேட்டுள்ளது என்று ஹோம்ஸ் பதிலளித்தார். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியதில்லையா சர்வதேச ரீதியில் பணியாற்றும் பணியாளர்களுக்குத் தானா பாதுகாப்பு என்று தெரிவித்த ஹோம்ஸ் இது குறித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Comments