வணங்காமண் செயற்பாட்டுக் குழுவின் உத்தியோக பூர்வ அறிக்கை

புலம்பெயர் மக்களால் தாயக மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் தாயகம் நோக்கி பிரான்சிலிருந்து மே மாதம் 7-ம் திகதி புறப்பட்ட வணங்கா மண் கப்பல் நேற்று (04-06௨009) அதிகாலை இலங்கைக்கு அருகில் சர்வதேசக் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் விநியோகக் கப்பல் எனச் சந்தேகித்து சிறிலங்கா கடற்படையின் ஐந்து போர்க் கப்பல்கள் கொண்ட அணியினரால் சோதனைக் குள்ளாக்கப்பட்டுள்ளது.

கப்பலில் உணவும் மருந்துகளும் மட்டுமே இருப்பதனை உறுதி செய்த பின்னர் சிறிலங்கா கடற்படையினரால் கொழும்பு துறைமுகப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கடற்படையின் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பலில் கொண்டு செல்லப்பட்டுள்ள பொருட்களை சிறிலங்கா அரசின் உரிய அனுமதி பெற்று, தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடாக மேற்கொண்டுள்ளோம் என்பதனை அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகிறோம்.

Comments