பிரித்தானியவாழ் புலம்பெயர் உறவுகள் 17வது இலக்கத்தில் போட்டியிடும ஜான் என அழைக்கப்படும் ஜனனி ஜனநாயகத்துக்கும், பிரான்ஸ்வாழ் தமிழ் உறவுகள் பேராசிரியர் ஜோன் மரி ஜுலியாவுக்கும் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.
வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளவர்கள் ஒருவருக்கு மட்டுமே புள்ளடியிட முடியும் என்பதுடன், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளடிகளை இட்டால் அது செல்லுபடியற்றதாகிவிடும்.
நாடுகள் மட்டத்தில் வாக்களிப்பு நடைபெறுவதால் ஜனனிக்கு பிரித்தானியாவில் வாழும் மக்களும், ஜுலியாவுக்கு பிரான்சில் வாழும் மக்களும் மட்டுமே வாக்களி்க்க முடியும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் உலக கொள்கை வகுப்பில் முக்கியமாக இருப்பதால், தமிழர்களின் பிரதிநிதித்துவம் அங்கு முக்கியமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர்கள் தாம் மட்டுமன்றி ஏனைய வாக்காளர்களையும் இவர்களுக்கு வாக்களிக்குமாறு கோருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Comments