தமிழ் மக்கள் படுகொலைக்கு இந்தியா உடைந்தையாக இருந்துள்ளது எனக் குற்றச்சாட்டு – த ரைம்ஸ் ஒன்லைன்

சிறிலங்காவின் விடுதலைப் புலிகள் மீதான இறுதிக்கட்டத் தாக்குதலில், 20,000 பொது மக்கள் வரையில் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியாவும் உடைந்தை என நேற்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என பிரித்தானியா பத்திரிகை த ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

“இந்தியாவின் பங்கானது மிகவும் வேதனைக்குரியதும், எரிச்சலுக்குரியதாகும்” என இலங்கைக்கான இந்தியாவின் அமைதிப் பாதுகாப்புப் படையின் முன்னைய ஆணையாளர், மேஜர்-ஜெனறல் அசோக் மேற்றா கூறியுள்ளார், என த ரைம்ஸ் பத்திரிகை

கூறியுள்ளது.பொது மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க தவறிவிட்டது என வேறு இரண்டு மனித உரிமைகள் அமைப்புகளும் கூறியுள்ளன.

“பல எண்ணிககையான மக்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு நாங்களும் உடைந்தையாக இருந்துள்ளோம்” என இளைப்பாறிய ஜெனறல் மேற்றா த ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார். “சிறிலங்கா அரசின் திட்டத்தோடு சேர்ந்து செல்வதாக முடிவு செய்து, உண்மையில் தரையில் என்ன நடந்துள்ளது என்பதைப் புறக்கணித்துள்ளோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

60 கோடி தமிழ் மக்களுக்குச் சொந்த வீடாக இருந்திருந்தும், இந்தியாவானது கடந்த 3 வருடங்களாக சிறிலங்காவுக்கு இராணுவக் கருவிகளும், பயிற்சிகளும், புலனாய்வும் கொடுத்துள்ளது என ராஜீய தூதுவச் செய்தியாளர்கள் ரைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளனர்.

http://cache.daylife.com/imageserve/04Sr8vi1yE9HQ/610x.jpg

இதைவிட மோசமாகப் போய் இந்தியாவானது ஒரு திடமான ராஜீய தூதுவ ஆதரவையும் சிறிலங்காவுக்கு வளங்கியுள்ளது என்றும் மற்றும் பொது மக்களைப் பாதுகாப்பதற்கு தனது செல்வாக்கைச் பயன்படுத்தி ஒரு போர் நிறுத்தத்தைக் கொண்டுவரத் தவறியுள்ளது எனவும் அச்செய்திகள் கூறியுள்ளன.

போர்க்குற்றங்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்துவது தொடர்பாக கதைக்க இருந்த ஐ.நா. மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தில, இந்தியா மாறாக சீனா மற்றும் ரஷ்யா முன்னெடுத்த அவ்விசாரணைக்கு எதிரான தீர்வுக்கு ஆதரவு கொடுத்து, சிறிலங்காவைப் பாராட்டியும் உள்ளது. ஆனால் இதே ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவானது, 926 வரையிலான மக்கள் கொல்லப்பட்ட, காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இஸ்ரேல் புரிந்த போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு ஆதரவு கொடுத்து வாக்களித்திருந்தது, இங்கு குறிப்பிடத்தக்கது என்று ரைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் சிறிலங்காவுக்கான ஆயத விற்பனைகளைக் கூட்டியிருந்த, இந்தியாவின் பிராந்திய எதிரிகளான பாகிஸ்தான மற்றும் சீனாவுக்கு ஈடாக இருப்பதற்கே காங்கிரஸ் தலைமையிலான இந்தியா வேண்டியுள்ளது. அத்தோடு, 1991இல் நடந்த, பிரதம மந்திரியும் சோனியா காந்தியின் கணவருமான, ராஜுவ் காந்தியின் படுகொலைக்கு பழிவாங்குவதற்கும் இந்தியா அரசு காத்திருந்தது எனவும் ஜெனரல் மேற்றா மேலும் கூறியுள்ளார்.

http://cache.daylife.com/imageserve/05DK6iR7RC9MR/610x.jpg

கற்பனை செய்து பார்க்க முடியாத மனிதப் பேரவலமென செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிககை விடுத்திருந்த போதும் இந்தியா நடவடிக்கை எடுக்கத் தவறியமை மேல் குறிப்பிட்ட இரண்டு காரணங்களாலும் நியாயப்படுத்த முடியாது என மனித உரிமைகள் அமைப்பின் ஆசியா பொறுப்பாளர், பிறட் ஆடம்ஸ், தெரிவித்துள்ளார். முன்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் போரின் முடிவு பாதிக்கப்படாமலேயே, இந்தியாவால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

புலிகளை வெல்வதற்கு எத்தனை பொது மக்களையும் பலி கொடுக்கலாம் என்ற சிறிலங்கா அரசின் எண்ணத்தை இந்தியாவும் சாதாரணமாக ஆதரித்திருந்துள்ளது, என மன்னிப்புச் சபையின் ஆசியா பசிவிக் பொறுப்பாளர், சாம் சறிவ், ரைம்ஸ்க்குத் தெரிவித்துள்ளார்.
http://cache.daylife.com/imageserve/0eDOeWI8q3edq/610x.jpg
சிறிலங்காவின் ஜனாதிபதி, ராஜபக்ஸ என்.டி. தொலைக்காட்சிக்குக் கூறியிருந்தார் “இந்தியாவிடம் இருந்து ஒருவித அழுத்தமும் எனக்குத் தரப்படவில்லை, அவர்களுக்குத் தெரியும், நான் அவர்களின் போரைத்தான் நடத்திக் கொண்டுள்ளேன் என்று”.

இந்தியாத் தலைவர்களைச் சந்தித்து யுத்தத்தின் போது அவர்கள் கொடுத்த முக்கியமாக இருந்த தார்மீக ஆதரவுக்கு நன்றி செலுத்துவதற்காக இந்தியா செல்ல இருப்பதாக, த வீக் சஞ்சிகைக்கு ராஜபக்ஸ கூறியுள்ளார்.

டேல்கி தனது முழு ராஜீய தூதுவச் சக்திகளையும் பாவிக்கவில்லை, அல்லது, யுத்தத்தை முடிப்பதற்கு தனது முழு ஆதரவையும் கொழும்புக்கு கொடுத்துள்ளது என ராஜுய தூதுவர்களும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் மற்றும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

சிலர் முன்னைய இந்திய தூதுவரான விஜய் நம்பியார் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பியுள்ளனர். 20,000 பொது மக்கள் கொல்லப்பட்டது தெரிந்திருந்தும் விஜய் நம்பியார் அது பற்றி ஒன்றுமே குறிப்பிடாமலே இருந்து வருகிறார் என்பதை த ரைம்ஸ் பத்திரிகை கடந்த கிழமை வெளிக்கொண்டு வந்திருந்தது என ரைம்ஸ் இன்று குறிப்பிட்டுள்ளது.

Comments