முன்னால் இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலையை பான் கீ மூன் மூடி மறைப்பதாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து வைபவத்தின் போதான தனது ஏற்புரையில் விடயங்களை பான் கீ மூன் மாற்றிக்கொண்டாரா என்று "இன்னர் சிற்றி பிரஸ்' கேள்வியெழுப்பியிருந்தது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஐ.நா. தலைமையகத்தில் நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது பான் கீ மூனின் பேச்சாளரிடம் இந்தக் கேள்வியை "இன்னர் சிற்றி பிரஸ்' எழுப்பியிருந்தது.பான் கீ மூன் ஆர்ப்பாட்டத்தில் கண்ட பின் தனது உரையில் இந்த விடயத்தை (இலங்கையில்) உள்ளடக்கியிருந்தார்.
அவர்கள் (ஆர்ப்பாட்டம் செய்தோர்) எழுப்பிய விடயங்கள் உணர்வுபூர்வமானவையாக இருந்தன என்று பான் கீ மூனின் பேச்சாளர் மொன்டாஸ் கூறியுள்ளார்.
ஐ.நா.வின் வரவேற்பு வைபவம் இடம்பெற்று 8 மணித்தியாலங்களின் பின்னர் சேர்ஜியோ என்ற பிரசுரத்தின் ஆவணப் படம் காண்பிக்கப்பட்டது. பான் கீ மூனிடம் ஒரேவிதமான கேள்வியை "இன்னர் சிற்றி பிரஸ்' கேட்டது. அதாவது, ஆர்ப்பாட்டத்தை அடுத்து அவர் தனது உரையை மாற்றிக் கொண்டிருந்தாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பான் கீ மூன், நீங்கள் அங்கிருந்ததாக நான் கேள்விப்பட்டேன். அந்த விவகாரம் எனது உரையில் உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை என்று பதிலளித்தார்.
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் பெண்களும், சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனரே என்று "இன்னர் சிற்றி பிரஸ்' சுட்டிக்காட்டியது. அதற்கு பதிலளித்த பான் கீ மூன், இது ஒரு சுதந்திரமான சமூகம். நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். பத்திரிகையாளர்களாகிய நீங்கள் சகல செய்திகளையும் அனுப்ப வேண்டியது மிகவும் முக்கியமான கடமையாகும் என்று கூறினார். சேர்ஜியோ போன்ற படங்களை ஆட்கள் பார்ப்பார்கள் என்றும் நாம் ஏதாவது செய்ய வேண்டும் எனவும் அங்கு குறைந்தளவே பதில் கிடைப்பதாகவும், உண்மையான பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டுமெனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை ஐ.நா. செய்தியாளர் மாநாட்டின் போது பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக இடம்பெற்ற விடயங்களை "இன்னர் சிற்றி பிரஸ்' நினைவுகூர்ந்தது. இலங்கை தொடர்பாக "இன்னர் சிற்றி பிரஸ்' கேள்வியெழுப்பியது. இதற்கு பதிலளித்த ஐ.நா. அபிவிருத்தித்திட்ட பேச்சாளர் அவை பிரசுரத்திற்கு அப்பாற்பட்ட விடயம் என்று கூறினார்.
ஏன் இது பிரசுரிப்பதற்கு அப்பாற்பட்ட விடயம் என்று எனக்கு தெரியாது என பான் கீ மூன் கூறினார். திரைப்படத்தை பார்க்க வைபவத்திற்குச் சென்ற ஏனையவர்களுடன் "இன்னர் சிற்றி பிரஸ்'ஸும் உடன் சென்றபோது வழியில் ஐ.நா. பாதுகாப்பு அதிகாரி "இன்னர் சிற்றி பிரஸ்'ஸை தடுத்து நிறுத்தினார். செயலாளர் நாயகத்திடம் எதனைக் கேட்கப்போகிறீர்கள் என்று அவர் வலியுறுத்திக் கேட்டார். பின்னர் இந்த விடயத்தை "இன்னர் சிற்றி பிரஸ்' சுட்டிக்காட்டியபோது இதனை இலகுவான விடயமாக விட்டுவிடுங்கள் என்று அவர் கூறினார்.
அன்றைய தினம் நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது "இன்னர் சிற்றி பிரஸ்' பான் கீ மூனின் பேச்சாளரிடம் கேள்வியெழுப்பியது.
இன்னர் சிற்றி பிரஸ்: அவர் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார். அவர் அங்கு இருக்கும் போது (இலங்கையில்) எதிரணியினரையும், தமிழ்த் தலைவர்களையும் சந்தித்ததாக கூறியிருந்தார். ஆனால், அந்தவிடயத்தில் சில சர்ச்சைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. விமான நிலையத்தில் நாங்கள் புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம் தமிழ்த் தலைவர்கள் சிலர் அங்கு வருகைதர இருந்ததாகவும் ஆனால், அவர்கள் வரவில்லை எனவும் கூறப்பட்டது. அப்படியானால், எதிரணி தலைவர்களையும், தமிழ்த் தலைவர்களையும் அவர் சந்தித்திருந்தாரா?
பேச்சாளர்: நான் அதனை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 12 மணித்தியாலத்திற்கு பின்னர் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இன்னர் சிற்றி பிரஸ்: இலங்கையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கலைக்கப்பட்டிருக்கிறது. எந்தவொரு பதிலளிக்கும் கடப்பாடும் இன்றி அந்த ஆணைக்குழு கலைக்கப்பட்டுள்ளது. பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஐ.நா.வினதும், ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகத்தினதும் பான் கீ மூனினதும் பதில் என்ன?
பேச்சாளர்: பதிலளிக்கும் கடப்பாடு குறித்து பான் கீ மூனின் பதிலை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். திங்கட்கிழமை அவர் இது தொடர்பாக கூறியுள்ளார். அவர் பதிலளிக்கும் கடப்பாட்டை வலியுறுத்திக் கேட்டுள்ளார். அந்த நிலைப்பாடு இப்போதும் உள்ளது. கடைசியாக அவர் கூறியவற்றை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறமுடியும்.
இன்னர் சிற்றி பிரஸ்: ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம், ஜோன் ஹோம்ஸ் ஆகியவர்கள் இந்த ஆணைக்குழுவின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக கூறியிருந்தனர். இப்போது ஆணைக்குழு கலைக்கப்பட்டுள்ளது. ஏன்?
பேச்சாளர்: இது தொடர்பாக மேலதிகமாக கருத்தை தெரிவிக்க முடியுமா என்று நான் முயற்சி செய்கிறேன்.
இந்தக் கேள்வி செவ்வாய்க்கிழமை காலை ஹோம்ஸின் பேச்சாளருக்கு அனுப்பப்பட்டது. இன்னமும் பதில் கிடைக்கவில்லை. பத்திரிகையாளர்கள் கதையைக் கூறவேண்டும் என பான் கீ மூன் சொல்கிறார். ஆனால், எந்தக் கதையை? என்று "இன்னர் சிற்றி பிரஸ்' கேள்வியெழுப்பியிருக்கிறது.
Comments