ஆரம்பத்தில், ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிப்பதற்கு வேலி அமைக்கப்பட்டபோது, தரைக்கு நேராகச் செல்லும் முள்கம்பிகளால் அமைக்கப்பட்டன. இரண்டு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள், இவ் முள்கம்பிகளுக்குள் ஒரு உள்புகும் வழியை அமைத்து பிரித்து வைக்கப்பட்டிருந்த தமது குடும்ப அங்கத்தவர்களைப் பார்த்து வந்தார்கள்.
இப்படியான உள்புகும் பாதை அமைக்கப்பட்ட போதெல்லாம், மக்களை இரண்டு முகாம்களுக்கும் இடையே மாறி மாறிச் செல்வதைத் தடுப்பதற்காக, அது பின்பு அடைக்கப்பட்டு வந்தது.
ஆனால், மக்கள் தொடர்ந்து தமது பாதையை இவ்வேலிகளுக்கூடாக அமைத்துச் மாறி மாறி சென்று வந்தார்கள். அதனால், அதிகாரிகளோ வழமையான வேலியை முள்கம்பி வேலிகளைப் பாவித்து குறுக்கும் நெடுக்குமாக அமைத்து மேலும் வலுப்படுத்தியிருந்தார்கள்.
இதனால், வெறுப்பும், ஆத்திரமும் கோபமுமடைந்த தடுத்து வைக்கப்பட்டிருந்தோர், பலப்படுத்திய முள்கம்பிகளுக்குள்ளாகவும் பிரித்து வைக்கப்பட்டிருந்த தமது உறவினரைப் பார்ப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை முயற்சிசெய்த போதே சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
Comments