ராணுவ அடக்கு முறைக்கு எதிராக வாய் திறந்துள்ள யாழ் மக்கள்

தொடரும் ராணுவ அடக்குமுறை மற்றும் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் மக்களின் நிலை சம்பந்தமாக யாழ் மக்கள் தமது கருத்துக்களை WSWS உடன் பகிர்ந்துள்ளனர்.

யாழ் மக்களில் பெரும்பாலானவர்களின் உறவினர்கள் தற்போது வன்னி முகாம்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பலரது உறவினர்கள் சண்டையில் இறந்துள்ள வேளையிலும் அவர்களுக்கான சமயச் சடங்குகளையோ இரங்கல்களையோ

கூட ராணுவத்தினருக்குப் பயந்து வெளிக்காட்டாமல் உள்ளனர். ஏனெனில் இங்கு யாழில் உள்ள மக்களும் புலிகளுடன் தொடர்பு என ராணுவத்தினரால் கைது செய்யப்படலாம். வெளியிடப்படாத ஐ.நா அறிக்கையொன்றின் பிரகாரம், இறுதி நாட்கள் சண்டையின்போது

ராணுவ ஷெல் வீச்சுக்களால் கிட்டத்தட்ட 7,000 பேர் கொல்லப்பட்டும், 10,000 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.வன்னி முகாமில் உள்ளவர்களுக்கு எப்படி நாங்கள் உதவலாம் என்று கேட்பவரின் சகோதரரின் மனைவி, முகாமில் உள்ள தனது மகளுக்கு ஒரேயொரு உடுப்பே உள்ளதாகவும் அதுவும் பாடசாலைச் சீருடை என்று கூறி அழுவதாகவும் தெரிவித்தார்.ஈ.பி.டி.பி அமைப்பினர் வன்னி மக்களுக்கு அனுப்புவதற்காக உடைகளைச் சேகரித்து வருகிறார்கள்.

ஆனால் அவர்களின்மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று மக்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் அரசுடன் சேர்ந்து யுத்த நடவடிக்கைக்கு உதவியதாலும், யாழ் குடா நாட்டில் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைச் செய்வதாலும், மக்களுக்கு என்று சேர்க்கப்படும் எந்த உதவியையும் மக்களிடம் சேர்க்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது.எவ்வளவு காலத்துக்கு மக்களைத் தடுத்து வைத்திருப்பார்கள் என்று கேட்கும் ஒருவர், வன்னியில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படுவதால் தான் தாமதம் என அரசு கூறுகிறது

http://www.sangam.org/2007/06/images/14jaffna02.jpg

ஆனால் அங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் வீடுகள் இருக்கின்றன, எனவே அவர்கள் வெளியேற அனுமதி கொடுக்கலாம் தானே எனக் கேள்வி எழுப்புகிறார்.கவலையைக் கட்டுப்படுத்த முடியாத 48 வயதான ஒருவர், முகாம்களில் நடக்கும் செயல்கள் பற்றிக் கேள்விப்படும்போது அவை நாசி முகாம்களை ஒத்தவை போல உள்ளதாகக் கூறி கண்ணீர் விட்டு அழுதார். குழந்தையொன்றுடன் வன்னியில் இருந்து புறப்பட்ட அவரது நண்பர் ஒருவர் தற்போது வவுனியா முகாமில் உள்ளதாகவும் குழந்தைக்கு என்ன நடந்தது, எங்குள்ளது என்ற தகவல் இதுவரை தெரியவில்லை என்றும் கூறினார்.

இன்னொருவர் கூறும்போது, குண்டுத் தாக்குதல்களால் காயமடைந்த நண்பரின் மனைவியை சிகிச்சைக்காக கொண்டு சென்றார்களாம், ஆனால் அவர் பற்றி ஒருவித தகவலுமே இல்லை என்றார்.

இந்தக் கருத்துரைகள் எவையும் மிகைப்படுத்திக் கூறப்பட்டவை அல்ல. தரவொன்றின் படி, இடைத்தங்கல் முகாம்களில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களும், 6700 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், 50,000 பேர் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றும் அதில் 850 பேர் அனாதைகள் என்றும் தெரிய வருகிறது.யாழ் குடாநாடு ராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ளபோதும் குறிப்பிடத்தக்க நிம்மதியான சூழல் அங்கு இல்லை. ராணுவம் நிரந்தரமாக இருப்பதற்கான தயார்படுத்தல்களே நடந்து வருகின்றன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAGu-oiJJl2oH2r3oXkJP7pMcyuGJ4Dei6SsLgTLlfx-OiRzQT9FgpVYnLtuqlgKuWksSM4_v5yR82aWq9m9tgvxr01c6sVkx00BwhB2Ntft3zm2RY0DdAERRl8CEPfo7f-_G36btWROBt/s400/14jaffna04.jpg

குடாநாடு எங்கும் சோதனைச் சாவடிகள் அமைப்பதும், முன்னர் உள்ள சோதனைச் சாவடிகளை மேம்படுத்தும் செயற்பாடுகளும் நடந்தேறியுள்ளன.கிராம மட்டங்களில் 'சமாதான குழுக்கள்' என்ற பெயரிலான குழுக்களை காவல்துறையினரும், ராணுவத்தினரும் அமைத்து, அதனூடாக கிராம மட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அவர்களின் உண்மை நோக்கம் புலனாய்வு என்று மக்கள் கூறுகிறார்கள்.முன்பு பகலில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கைகள் யாழில் இப்போது இரவில் நடைபெறுகின்றன. இது புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கே என்று கூறும் ராணுவத்தினரின் உண்மை நோக்கம் தமிழ் மக்களைப் பயமுறுத்துவதே. காவல்துறையில் பதிவு மேற்கொள்ளாத வட, கிழக்கு மாகாணங்கள், மற்றும் கொழும்பில் உள்ள தமிழ் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள்.மீன் பிடித்தலுக்கான விசேட அனுமதிபெற்ற யாழ் மீனவர்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் காலை 5 மணியில் இருந்து 7 மணிவரை மட்டுமே குறிப்பிட்ட கடல் எல்லை வரை மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது.

A9 வீதியை விரைவில் திறப்போம் என்று கூறிய அரசு இப்போது கடந்த வியாழன் இதுபற்றிக் கூறியபோது அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றவே கிட்டத்தட்ட 1 வருடம் செல்லும் என்கிறது. இடம்பெயர் முகாம்களை மக்கள் பார்ப்பதையோ, வன்னியில் ஏற்பட்ட அழிவுகளை அவர்கள் கண்ணால் பார்ப்பதையோ விரும்பாத அரசு A9 திறக்கப்பட்டாலும் மக்கள் போக்குவரத்தை தற்போதைக்கு அனுமதிக்காது என்று தெரிகிறது.

கடல்வழிப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழர்கள் அதற்கான முன்பதிவு, தமது அடையாளத்தை உறுதிப்படுத்தல், அரசு தடைசெய்துள்ளது எனக் கருதும் பொருட்களினை எடுத்துச் செல்ல முடியாமை, பாதுகாப்பு என்ற போர்வையிலான சோதனை, உயர் கட்டணம் போன்ற பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதேவேளை, யாழில் இப்போதும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிக உயர்வாகவே உள்ளன.மகிந்தவின் 'வடக்கின் வசந்தம்' என்ற திட்டமும், குறைந்த சம்பளத்தில் இலாபம் சம்பாதிக்கும் பெரிய முதலீட்டாளர்களைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ராணுவத்தினரால் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

www.wsws.org/articles/2009/jun2009/sril-j15.shtml

Comments