புலம்பெயர்வாழ் தமிழ்மக்களே! விழிப்பாக இருங்கள்

தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்தை இராணுவரீதியில் தற்காலிகமாக வெற்றிகொண்ட பாசிச சிங்களஅரசானது, அரசியல்ரீதியாகவும் தமிழ்மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்துவிட பலவேலைத்திட்டங்களை தங்கள் முகவர்களைக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

இம்முகவர்கள், சிங்கள, இந்திய அரசுடன் அல்லது அவர்களது உளவுத்துறையுடன் நேரடியாகத்தொடர்பு வைத்திருப்பவர்களாவார்.

இம்முகவர்கள் தங்கள் நாடுகளிலுள்ள சிங்கள அல்லது இந்திய தூதுவராலங்களிற்கு சென்றுவருபவர்களாகவும் சிலநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அறிவுஜீவிகளாக, மொழித்திறன் உடையவர்களாக, உயர்தொழில்புரிபவர்களாக அல்லது தாயகத்தில் சிங்கள அரசுடன் இணைந்து ஏதோஒருதுறையில் இணைந்து செயற்பட்டவர்களாக இருப்பார்கள்.

இதுவரைகாலமும் தாயகத்திலுள்ள தமிழ்மக்களைப்பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் எவ்வித அக்கறையுமின்றி இருந்தவர்களாக அல்லது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்தை உடையவர்களாக செயற்பட்ட இவர்கள், இன்று தாயக மக்களின் மேல் திடீரென கரிசனையுள்ளவர்களாக வீதி உலா வரப்போகிறார்கள்.

இராணுவரீதியில் விடுதலைப் போராட்டம் மழுங்கடிக்கப்படும்வரை சிங்கள அல்லது இந்திய அரசுகளின் புலனாய்வுத்துறையினரால் காக்கவைக்கப்பட்ட இவர்கள், இன்று தாயகமக்களில் கரிசனை உள்ளவர்கள் போல மக்கள் முன் காட்சியளிக்கப்போகின்றார்கள்.

புலம்பெயர்வாழ் தமிழீழமக்களுடன் சிங்களஅரசானது தொடர்பைபேணி நிரந்த அரசியல் தீர்வை வைக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் அண்மைக்கால அறிவிப்பும், புலம்பெயர்நாடுகளில் நடைபெறும் எழுச்சிப் போராட்டங்களாலும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள சிங்களஅரசானது, தனக்கு ஆதரவான ஒருகுழுவை புலம்பெயர்நாடுகளில் ஏற்படுத்த முனைகின்ற ஒரு செயற்பாடாகவே இதைக் கருதவேண்டியுள்ளது.

இவர்கள் அல்லது இக்குழுவானது, சிங்களஅரசு புரிந்த படுகொலைகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள். எனவே, பல்லாயிரக்காண தமிழ்மக்களை கொடூரமாகப் படுகொலைசெய்து, இலட்சக்கணக்கான மக்களை ஆடு மாடுகளைப்போல் வதை முகாம்களில் அடிப்படைவசதிகளை மறுத்து வதைக்கின்ற, கொல்கின்ற சிங்களஅரசின் அடியாட்களான இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

இவர்களின் கடந்தகால வரலாறு என்ன என்பது பற்றியும் சிந்தியுங்கள்.

தமிழ்மக்கள்மேல் அக்கறைகொண்டவர்களாக நடிக்கின்ற இக்கூட்டம்

புறப்படத்தயார்! தயார்! தயார்!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும், ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்

Comments