காங்கிரஸ்காரர்களே...! -ஜெகத் கஸ்பர்


ஜூன் 21, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்க்டிக் பனிக்கண்டத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு நம்பிக்கை தரும் அரசியல் நிகழ்வொன்று நடந்தது. 300 ஆண்டுகளாய் டென்மார்க் நாட்டின் காலனியாதிக் கத்திலிருந்து விடுதலைபெறப் போராடி வரும் கிரீன்லாந்து தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது. வெகுவிரைவில் முழு விடுதலை சாத்தியப்படும் என்பதும் தெரிகிறது. 22 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கிரீன்லாந்து நாட்டின் மொத்த மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 57,000 பேர். ஒரு லட்சம் குடிமக்கள் கூட இல்லாத கிரீன்லாந்து தனிநாடாக மாறமுடியுமென்றால் தமிழ் ஈழம் எப்படி மலராமல் போய்விடும்?! நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.

நாடிழந்து நாடோடிகளாய் ஆன யூதர்கள் 1948-ல் தமக்கென ஓர் தாயகம் அமைக்க ஈராயிரம் ஆண்டுகள் ஆயிற்று. தன்னுரிமை இழந்த அயர்லாந்து இனத்தவர் மீண்டும் தமக்கான குடியரசை 1920-ல் அமைக்க 700 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. தென் அமெரிக்கா வின் அனைத்து நாடுகளுமே தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டு உருவான நாடுகள்தான். பின்லாந்து, எஸ்தோனியா, இந்தோனேஷியா என தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்து உருவான நாடுகள் உலக வரைபடத்தில் பல உண்டு.

உலக வரைபடம் அடித்தல், திருத்தல், புதிய உரு வாக்கல்களுக்கு உள்ளாக்கப்பட முடியாத இறுக்கம் கொண்டதல்ல. கடந்த 50 ஆண்டுகளில் மட்டுமே நாற்பதுக்கும் மேலான புதிய நாடுகள் இப் பூமிப் பந்தில் உருவாகியுள்ளன. தேசிய இனங்களுக்கு அரசியல் சுயநிர்ணய உரிமை உண்டு என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைபெற்று நிற்கும் அரசியல் ஒழுங்கு, தேசிய இனமாக இருக்கத் தகுதியுடையோர் யார்? ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், நீண்ட காலம் பொதுமொழி, பொதுப் பண்பாடு, பொது வாழ்க்கை முறை, பொது வரலாறு ஆகியவற்றைக் கொண்டு வாழும் எந்த ஒரு இனமும் "அரசியல் சுய நிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம்' என்பதே கோட்பாடு. அந்த அடிப்படையில் தான் ஈழத்தமிழ் மக்களும் ஓர் தனித்துவமான தேசிய இனம், அவர்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு என வாதிடுகிறோம்.

தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டால் இந்தியா பல் வேறு நாடுகளாக சிதறுண்டு போகாதா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். உண்மை என்ன வென்றால் ஓர் ஜனநாயகக் கூட்டாட்சியாக, எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பயணம் நாம் பெருமை கொள்ளத் தக்கதாவே இருந்து வருகிறது. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அழகிரி, ஆ.ராசா இவர்களெல் லாம் வேஷ்டி கட்டிக் கெண்டு கேபினட் அமைச் சர்களாக பாராளுமன்றத்திற்குள் வரும்போது தமிழகமும் இந்திய ஆட்சி அமைப்பில் பங்கேற்கிறது என்ற உணர்வு உண்மையாகவே ஏற்படுகிறது. பணம் படைத்தவர்கள், சில ஜாதிகள், சில மொழி பேசுகிறவர்களின் மேலாதிக்கம் பல்துறைகளிலும் நிலவுகிற போதும் கூட சமூக நீதிக்கான அரசியற் சக்திகள் உறுதியாக இயங்குகின்ற சமூக அரசியற் களத்தினை இந்திய ஜனநாயகம் உறுதி செய்துள் ளது. மாநில சுயாட்சி என்ற கோரிக்கையினை முன்வைக்கிற உரிமையினையும், அதனை அடைவதற்கான வன்முறையற்ற ஜனநாயக வழியிலான நடைமுறைகளையும் இந்திய ஆட்சி அமைப்பு அனுமதித்துள்ளது.

ஆனால் ஸ்ரீலங்கா அவ்வாறானது அல்ல. அது ஒற்றையாட்சி அமைப்பு. தேசிய இனங் களின் கூட்டாட்சிக்கான ஏற்பாடு அரசியல் சட்ட அடிப்படையில் இல்லை. அந்நாட்டின் அரசு மதம் பௌத்தம். இந்து, கிறிஸ்தவ, இஸ் லாமிய மதங்களுக்கு இரண்டாம், மூன்றாம் இடங்கள்தான். அந்நாட்டின் அரசு மொழி சிங்களம். இன்று அந்நாட்டின் ராணுவத்தில் 100% பேர் சிங்களர்கள். தமிழ் மக்களை பல் லாயிரக்கணக்கில் கொன்றழித்து, தமிழீழ தாயக நிலப்பரப் பினை ஆக்கிரமித்து நிற்பது பெயருக்கு ஸ்ரீலங்கா ராணு வம் என்றாலும் உண் மையில் அது சிங்கள ராணுவம். ஸ்ரீலங்கா காவல்துறையில் 96% பேர் சிங்களர்கள். அப்படியானதொரு நாட்டை எப்படி எல்லா மக்களுக்குமான நாடு என்று நாம் கருதமுடியும்?

யாவிற்கும் மேலாய் கடந்த ஜனவரி முதல் மே-18 வரை ஸ்ரீலங்கா சுமார் 4 லட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் விரட்டிக் கூட்டி முற்றுகையிட்டு நடத்திய கொலைவெறி தாக்குதலும், கடைசி மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 30,000 தமிழர்களை கொன்றழித்த கொடுமையும், இன்று மூன்று லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்களை மரண முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் அராஜகமும்- தமிழ் மக்களின் பிரிந்து போகும் உரிமையை அனைத்துலக சட்டங்கள், அரசியற் தார்மீகம், மானுட ஒழுக்கம் என சகல அடிப்படைகளில் நின்றும் உறுதி செய்கிறது.

வவுனியாவிலிருந்து வந்திருக்கிற செய்தி களின்படி அகதி முகாம்களில் இருக்கும் சுமார் 24,000 பேருக்கு அம்மை நோய் கண்டிருக்கிறதாம், 4,000 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள் ளார்களாம். அடையாளம் தெரியாமல் வாரத்திற்கு சராசரி 60 பிணங்கள் முகாம்களுக்கு வெளியே அழுகிக் கிடக்க நாய்களால் இழுக்கப்படுகிறதாம். மாதத்திற்கு சராசரி நூறு இளம் தமிழ் பெண்கள் அனுராதபுர ராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுகிறார் களாம். நாம் இப்போதும் நம்ப வேண்டுமாம்- விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்மக்களை விடுவித்து சுபிட்சம் தருவதற்குத்தான் இந்த யுத்தத்தை ஸ்ரீலங்கா நடத்தியதென்று.

இன அழித்தல் யுத்தத்துக்கு ஸ்ரீலங்கா கொடுத்த முழக்கம்: ""பட்ங் ப்ஹழ்ஞ்ங்ள்ற் ங்ஸ்ங்ழ் ட்ன்ம்ஹய்ண்ற்ஹழ்ண்ஹய் ழ்ங்ள்ஸ்ரீன்ங் ர்ல்ங்ழ்ஹற்ண்ர்ய் ண்ய் ட்ன்ம்ஹய் ட்ண்ள்ற்ர்ழ்ஹ்''. அதாவது மனித குல வரலாற்றி லேயே மிகப்பெரும் எண்ணிக்கையில் கடத்தி வைக்கப்பட்டி ருந்த மக்களை மீட் கும் நடவடிக்கை. இந்தியாவின் சஉபய, பஒஙஊநசஞர, ஈசசலிஒஇச உள்ளிட்ட அத்தனை ஆங்கில ஊடகங்களும் இந்த மோசடி முழக்கத்தை இரவு பகலாய் இந்திய மக்களுக்கு கூவிக் கூவி விற்றன. இவர்கள் மீட்டு வந்த மக்கள் இன்று வதை முகாம் களில் என்ன பாடுபடுகிறார்களென்பதை சென்று எட்டிப் பார்த்து வரச் சொல்லுவோம். ஆனால் அவர்கள் இதனை தெரியாமலொன்றும் செய்யவில்லை என்பதே உண்மை. தெரிந்தே செய்தார்கள். மேற்குறிப்பிட்ட ஆங்கில ஊடகங்கள் இந்தியாவில் எழுந்து வரும் புதியதொரு மேலாதிக்க பாசிசத்தின் முகங்களாகவே பார்க்கப்பட வேண் டும். பர்காதத், ராஜ்தீப், அர்னாப் எல்லோரும் அழகாக ஆங் கிலம் பேசலாம்- ஆனால் அவர்கள் ஆபத்தான அரசியல் வியா பாரிகளும் கூட என்பதை தமிழ் மக்களின் தேசிய உரிமைச் சிக்கலை பயங்கரவாதமாய் விற்ற யுக்திகளில் கண்டோம்.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் சஉபய நடத்திய இண்ஞ் எண்ஞ்ட்ற் நிகழ்ச்சி பற்றி நான் முன்பு எழுதியிருந்தேன். அந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பங்கேற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜன். விவாதத்தின் ஊடே ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் அவர் மீதான என் தனிப்பட்ட மதிப்பை உயர்த்தியது. நிகழ்ச்சியை நெறி செய்த விக்ரம், ""ஸ்ரீலங்காவில் நடப்பது தமிழ் இன அழித்தல் என்ற குற்றச்சாட்டினை ஒத்துக் கொள் கிறீர்களா?'' என்று கேட்டபோது, ""ஆம், அங்கு நடப் பது இன அழித்தல்தான்'' என்று ஒத்துக் கொண்டார்.

இரு வாரங்களுக்கு முன் கூடிய நடப்பு பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றிய போது கூட ஜெயந்தி நடராஜன் அவர்கள் அகதி முகாம்களில் வாடும் தமிழ்மக்கள் மீள் குடியமர்வு செய்யப்பட வேண்டிய அவசரத்தையும், நீதியான அரசியற்தீர்வுக்கான தேவையையும் வலியுறுத்தினார். இதனை இங்கு குறிப்பிடக் காரணம் ஈழத் தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தலின் இரத்தப் பழியிலிருந்து காங்கிரஸ் கட்சி தப்பித்துவிட முடியாது. அதேவேளை ஒட்டுமொத்த அழிவி னின்று எஞ்சியிருக்கிற மக்களையேனும் காப்பாற்றி, அவர்களது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து, விரும்பினால் அவர்களுக்கு தனிஈழம் அமைத்து தரும் வல்லமையோடு இன்று இருக்கிற ஒரே கட்சியும் காங்கிரஸ் கட்சிதான்.

நாம் யாவரும் நேசித்த ஒரு முன்னாள் பிரதம ரின் இழப்பிற்குப் பழிதீர்க்க வேண்டி இத்துணை கொடுமையான இன அழித்தலுக்குத் துணை நின்றது நியாயமா என்ற தீர்ப்பினை வரலாறு எழுதி விட்டுப் போகட்டும். அதே வேளை எனது அனுபவத்தில் தமி ழகத்தின் காங்கிரஸ் கட்சியினர் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அடிமட்ட தொண்டர்கள் தனி ஈழம் அமைவதையே விரும்புகின்றார்கள். யுத்த நிறுத்தம் கேட்டு தீக்குளித்த தமிழர்களில் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவரும் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் யுத்த நிறுத்தம் கொணர வேண்டுமென தமிழக காங்கிரஸ் பெரியவர் ஒருவர் எடுத்த நேர்மையான முயற்சிகளையும், அம்முயற்சி வெற்றிபெறாமல் தடுத்த உணர்வாளர்களையும் அறி வேன். வேண்டுதல் என்ன வெனில் இன்றிருக்கும் நிலையில் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சில கோரிக்கைகளை தமிழக காங்கிரஸ் வலுவாக தமது தலைமைக்கு வைக்க வேண்டும் என்பதுதான். இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 கோடி நிதி உதவியை செயற்படுத்த 20 பேர் கொண்ட குழுவினை ராஜபக்சே அமைத்துள்ளார். அதில் 19 பேர் சிங்களர்கள்- ஒருவர் இஸ்லாமியர். குறைந்தபட்சம் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைக் கூடவா சேர்த்துக் கொள்ளக் கூடாது? இப்படியான குறைந்தபட்ச கேள்விகளைக் கூட நாம் எழுப்பவில்லை யே என்றுதான் அங்கலாய்ப்பாக இருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் 7-ம் நாள் இலங்கை ராணு வத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பரான ஜெயசூரியா என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

""அதிகாரப் பகிர்வின் மூலம் இனப் பிரச்சனை உருவாக காரணமாக இருந்த அம்சங்களை இலங்கை அகற்ற வேண்டுமென எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். நான் கேட்கிறேன், எஸ்.எம்.கிருஷ்ணாவே... இறை யாண்மை கொண்ட ஒரு தேசமாகிய எங்களுக்கு அறிவுரை சொல்ல நீ யார்? உனது வேலையை மட்டும் நீ பார். அல்லது ஐ.நா. மனித உரிமை குழுவில் நவிபிள்ளை சூடு பட்டது போல் நீயும் சுருக்கிக் கொள்ள வேண்டிவரும். இந்தியாவே நன்றாகக் கேட்டுக்கொள். எவ்விதமான அதிகாரப் பரவலும் தமிழர்களுக்கு நாங்கள் தரப் போவ தில்லை. அதுமட்டுமல்ல இந்திய மேலாதிக்கத்தின் கடைசி எச்சமான இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத் தையும் தூக்கித் தூர வீசி எங்கள் தேசத்தை உங்கள் மேலாதிக்கத்திலிருந்து தூய்மை செய்வதுதான் எங்கள் இலக்கு. எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைக்க வேண்டித்தான் விடுதலைப்புலிகளை நீங்கள் உருவாக்கி னீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அகற்றினோம். எங்கள் நாட்டை கைப்பற்றுவதை விட சந்திரனை உங்கள் நாட்டோடு இணைப்பது எளிதாக இருக்கும்''.

இக்கட்டுரை வெளிவந்தது இலங்கை ராணுவத் தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுதியது ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பர். இவை யெல்லாம் ஏன் அதிகாரத்தில் இருப்போரின் கண்களுக் குப் படவில்லை. இத்துணை கொடுமைகளுக்குப் பின்ன ரும் கூட என்றானாலும் தமிழர்கள்தான் இந்தியா வின் நண்பர்கள் என்பதை இந்தியா உணரும் காலம் ஒருநாள் வரும்.
(நினைவுகள் சுழலும்)

Comments