பிரபாகரன்கள் பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்--றிச்சார்ட் டிக்சன் (ரெலிகிராப்)

வரலாற்றில் சர்ச்சைக்குரிய போர்களில் ஒன்றாக இது இருக்கிறது. இலங்கைப் படையினர் செய்தியாளர்களையும் ஊடகவியலாளர் களையும் போர்ப்பிரதேசத்திற்குச் செல்லவிடாது தடுத்துள்ள ,

அதேவேளை இறந்து கொண்டிருக்கும் மக்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் தனிப்பட்டவர்களாலும், அமைப்புக்களாலும் கிரமமாக உலகம் முழுவதையும் சென்றடைந்துள்ளது.தொலைத்தொடர்பு முறைமை இறுதி நிமிடம் வரை வன்னியில் தொழிற்பட்டுக் கொண்டிருந்தது. மக்களுக்கெதிராகக் கனரக ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதனை நிரூபிப்பதற்கு

ஆதாரமாக உயர்ந்த தரத்துடைய சற்றலைட் படங்கள் கிடைக்கின்றன. போரின் இறுதிக்கணங்கள் பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்களால் சேமிக்கப்பட்டுள்ளன.

இடம் பெயர்ந்து முகாம்களிலிருக்கும் மக்களின் வாய்களை இலங்கை அரசாங்கம் அடைக்க முயற்சிப்பதால் பயனேதும் இல்லை. ஏனென்றால், கடைசி நாள் வரை போர்ப்பிராந்தியத்துள் சிக்குண்டிருந்த பொது மக்கள் பலர் கடலைக் கடந்து ஏற்கெனவே வேற்றுநாட்டுக் கடற்கரைகளை அடைந்துள்ளனர்.

இலங்கைப்படைகள் போhக்குற்றத்தில் ஈடுபட்டதற்கான மில்லியன் கணக்கான ஆதாரங்கள் ஏற்கெனவே கிடைத்துள்ளன. இந்தப் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிச்சயமாக முன் நிறுத்தப்படுவார்கள்.

தமிழ் மக்களுக்கு பயங்கரமான முகாம்கள்:

இலங்கை அரசாங்கம் ஐம்பதாயிரம் மக்களைக் குண்டு வீசிக் கொன்றுள்ளது. இப்போது அவர்கள் மூன்று இலட்சம் மக்களை நாசிகாலத்து முகாம்களை ஒத்த இனவதை முகாம்களில் தடுத்து வைத்துள்ளனர்.

அபகீர்த்தி பெற்ற இம்முகாம்களில் சராசரியாக ஒரு நாளைக்கு பத்து முதல் 14 பேர் வரை மரணமடைகின்றனர். இவர்களுள் குழந்தைகளும் முதியோருமே பெருமளவானவர்கள். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தமது உறவினர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களிடமிருந்து உணவையோ உடைகளையோ பெறவும் இம்மக்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள்.
முகாம்களின் உள்ளே பாலியல் வன்புணர்வுகளும் சித்திரவதைகளும் இடம் பெறுவதாக ஸ்கை நியூஸ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இளைஞர்களும் யுவதிகளும் நாளாந்தம் முகாமிலிருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். இம்முகாம்களுக்கு வெளியே இறந்த உடல்கள் வீசப்பட்டுக்கிடக்கின்றன.
காயமடைந்தவர்களுக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சரியான மருத்துவ வசதிகள் அங்கு கொடுக்கப்படுவதில்லை. முழு இலங்கைத் தமிழினத்தையும் சிதைத்தழிக்கும் வகையில் குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு வௌ;வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது மீண்டும் நடைபெறுமா?

இந்தப் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாவிடில் இது மீளவும் மீளவும் இலங்கையிலோ அன்றி உலகின் வேறு பகுதிகளிலோ நடைபெறக் கூடும். எதிர்காலத்தில் ஐநா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறான போர்களைக் கையாளக் கூடிய விதத்தில் அது மீளமைப்புச் செய்யப்பட வேண்டும்.
இலங்கையின் போருக்கு இந்தியாவே பின்னணி இசைத்தது. கொலைகார ஆயுதங்கள் சீனாவாலும், பாகிஸ்தானாலும் வழங்கப்பட்டன. ஐநாவுக்கும் மேற்கத்தைய நாடுகளுக்கும் என்ன நடைபெறுகிறது என்று தெரியும். ஏன்ன மிஞ்சப் போகிறது என்றும் தெரியும்.
ஏற்கெனவே நடைபெற்றதைப் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்திலும் நடைபெற நாம் அனுமதிக்கப் போகிறோமா? இவ்வாறான அப்பாவிகள் மரணமடைவது சில நாடுகளுடைய பேராசையைத் திருப்திப்படுத்துறதா?

ஐநாவும் அதனது ஊழல்மிகு அலுவலர்களும் தமது பணியைச் செய்வதில் தவறிழைத்திருக்கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆற்றல் அவர்களிடம் இருந்தும் அவர்கள் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யாமல்; வேண்டுமென்றே கள்ளமௌனம் சாதித்தார்கள்.
இந்த தூங்கிக் கொண்டிருந்த அரக்கர்களின் கைப்பொம்மையாகத் தான் இலங்கையின் அரச தலைவர்கள் இருந்தார்கள். இந்தப் போரின் எஜமானர்கள் தான் தற்போது நீதியை நிலைநிறுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் இவ்வாறான எந்த மோதலையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் ஐநாவிடம் உள்ளதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. தனது சொந்தக் காலிலேயே நின்று இவ்வாறான குற்றங்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றலுடைய ஒரு சர்வதேச அமைப்பு தற்போது எமக்கு அவசியமான தேவையாகவுள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்துநிறுத்தும் அதிகாரம் முற்றாகவே அற்ற எந்த அமைப்பும் எங்களுக்குத் தேவையில்லை.
இப்போது இலங்கையில் கிளர்ச்சிக் குழுத் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொருவரும் தாங்கள் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டதாகச் சந்தோசமடைகிறார்கள் என்றால் ஏன் இப்போதும் அங்கே கொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் அங்கு அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப்பெண்கள் தெருவில் காடையர்களால் துன்புறுத்தலுக்குள்ளாகிறார்கள்.
இந்தத்தீவு 50களிலும் 60களிலும் 70களிலும் 80களிலும் எதிர்கொண்டதைப் போன்ற இனப்படுகொலைக்குத் தயாராகி வருகிறதா? அந்நேரம் அவர்கள் தமிழர்களை வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். இப்போது நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய சீருடை அணிந்த சிங்கள ஆண்களும் பெண்களும் நிரப்பப்பட்டுள்ளார்கள். தமிழர்கள் தமது பாதுகாப்பைத் தேடுவதற்கு அங்கு ஓரிடமும் இல்லை.

இன்னொரு தமிழ் கிளர்ச்சியாளனின் அபாயம்:

புலம் பெயர் தமிழர்கள் இலங்கையிலிருந்து அந்நியமாகவில்லை. 90 வீதத்திற்கு மேற்பட்ட புலம் பெயர் தமிழர்கள் தமது வன்னியில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என்ன நடைபெற்றது என்பதற்குச் சாட்சியமாக இருக்கிறார்கள். அவர்களுடைய தந்தையர்களும் தாய்மார்களும் சகோதர சகோதரிகளும் எவ்வித உதவியுமின்றி மாண்டதை அவர்கள் கண்டார்கள். அவர்கள் தங்களது உறவினர்களுடன் போரின் கடைசிநாள் வரை தொடர்பில் இருந்தார்கள் என்பதால் அங்கு நடைபெற்றது என்ன என்பதை அவர்கள் இறுதி வரை அறிந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுடைய உறவினர்கள் தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
பிரபாகரன்கள் பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். தான் கண்ணுற்ற பல பயங்கரங்களே அவரை அவ்வாறு செய்ய வைத்தது. தென்னிலங்கையில் தமிழர்கள் உயிருடன் எரியுண்டதை அவர் கண்டார். சிங்களக் காடையர்களால் தமிழர்களது சொத்துக்கள் அழியுண்டதை அவர் கண்டார்.
இவ்வாறு தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை தொடரும் என்றால், இலங்கை ஏன் இந்தியா கூட வருந்த வேண்டியேற்படும். ஏனெனில் புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்து இந்த ஒரு பிரபாகரனுக்குப் பதிலாக இன்னும் பல பிரபாகரன்கள் உருவாகுவார்கள்.
வடக்குக் கிழக்கில் வாழும் சுதேசிகளான தமிழ்கள் இந்தப் பூமியில் வாழும் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களாவர்.
இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் தான் இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது.
இனவாதமாகவும், மதவாதமாகவும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களுடாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்தால் அது முரண்பாட்டை இன்னும் ஆழப்படுத்துவதோடு மிக மோசமான நிலைமைக்கு எடுத்துச் செல்லும்.


இறுதியாக:

இந்தியாவின் போரை சீனாவினதும் பாகிஸ்தானினதும் ஆயுத உதவியுடன் தாம் நடாத்தியதாக இலங்கையின் ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் அண்மையில் தெரிவித்திருந்தார்கள். குற்றங்களில் அரைவாசியைத் தாம் மேற்கொண்டதாக இலங்கை அதிகாரத்துவம் வாய்மொழிமூலமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒருவருடன் ஒருவர் போட்டியிடும் இரண்டு பலமான சக்திகளின் கைப்பொம்மையாக இலங்கை அரச தலைமைகள் வந்துள்ளமை இப்போது வெளித்தெரிய வந்துள்ளது. இலங்கையின் உள்ளே நடைபெற்று வந்த முரண்பாடு இப்போது சர்வதேசமயமாகியுள்ளது. இலங்கை இராணுவத்தின் பலம் செயற்கைத்தனமாக அவர்களுடைய புதிய எஜமானர்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் பணிவான குரலுடன் மேற்கோடு பேசிய ஒரு நாடு இப்போது பல நாடுகளுக்குச் சவால் விடுத்துள்ளது.
பாதுகாப்புக் கவுன்சிலில் இலங்கையின் நிலைமை பற்றிக் கலந்துரையாடுவதற்குச் சீனா எதிர்ப்புத் தெரிவித்தமையானது இலங்கையின் போரில் சீனாவின் பாத்திரத்தை தெளிவாகப் புரிய வைக்கிறது.
ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவை இலங்கையுடன் சேர்ந்து ஒரே பக்கத்தில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டன. இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்படுவதற்கு எதிராக அவர்கள் எல்லோரும் வாக்களித்தார்கள். அவர்கள் எல்லோரும் தங்களது கைகளில் இரத்தக்கறை இருந்ததை தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
மனித உரிமைப் பாதுகாவலர்களும் தங்களுடைய மக்களுடைய சுதந்திரத்திற்காகப் பல போர்களைச் சந்தித்த உலகின் பலமான சக்திகளும் இலங்கையின் போருக்குப் பின்னாலிருந்த மிக முக்கியமான மந்திர தந்திரக்காரர்களுடைய முகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அத்தோடு இந்தியா இலக்குகளை வழிகாட்ட சீனா இந்தப் போருக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்து உதவியிருக்கிறது. இது தான் இலங்கை அயுதப்படைகள் இலங்கைத் தமிழருக்கெதிரான படுகொலைகளை நிகழ்த்துதற்குக் காரணமாக அமைந்தது. தனது புதிய எஜமானர்களி;ன் ஆசீர்வாதத்தோடு ஒரு நாடு அப்பாவித் தழிழர்களுக்கு பெரும் சேதம் விளைவித்துக் கொண்டு தனது சிறுபான்மையினரை மெதுவாகத் துடைத்தழிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்டிருந்தது.
ஆயிரக்கணக்கான மக்களின் படுகொலைக்குக் காரணமானவர்களும் சர்ச்சைக்குரிய நாசி வகை தடுப்புமுகாம்களை பேணி வருபவர்களுமான இலங்கை அரசாங்கத்தையும் அதனது நண்பர்களையும் அவற்றைத் தொடர்ந்து மேற்கொள்ள நாகரீகமடைந்த உலகம் அனுமதிக்கப் போகின்றதா என்பதே இப்போதிருக்கும் கேள்வி.
இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாப்பதில் நாம் எல்லோரும் தவறியிருக்கிறோம். ஆனால் இன்னமும் இந்த நாசி வகை இனவதை முகாம்களில் துஸ்பிரயோகத்திற்கும், பாலியல் வன்புணர்விற்கும், சித்திரவதைக்கும், கொலைக்கும் இந்த அப்பாவிகள் ஆளாவதிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு இன்னமும் காலம் கடந்து விடவில்லை.

Comments