திடகற்பம் பூண்டு பிரித்தானியா தமிழ் இளையோர் உறுதி மொழி

எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!

இன்றுடன் 35 வருடங்கள் ஆகின்றன. ஆம் சிங்கள பேரினவாதத்தின் தமிழ் இன அழிப்பின் முதல் படியான தமிழரின் கல்விச் சிதைப்பை எதிர்த்து மாணவ தியாக சுடர் பொன் சிவகுமார் அண்ணா ஏந்திய வேள்வித்தீ எரிய தொடங்கி 35 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த வேட்கையை தன்னகத்தே கொண்டு தமிழரால் மதிக்கப்படும் தாயகமாம் தமிழ் ஈழத்தை நனவாக்க எழுச்சி கொண்ட மக்களினதும் மாணவர்களினதும் குரல்வளை நசுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் இந்நேரத்தில் அவர்களின் உயிரான உறவான புலத்தில் வாழும் தமிழ் இளையோர் ஆகிய நாம் அவர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் மக்களின் உரிமையையும் பாதுகாப்பையும் வென்று எடுக்கும் வரை தமிழ் இளையோர் அமைப்பினர் ஆகிய நாம் போராடுவோம் என திடகாற்பம் பூண்டு தமிழீழ மாணவர் எழுச்சி நாளான இன்று உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.

இதுவரை இந்த நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்பதையும் பிரித்தானியா மாணவர்கள் ஆகிய நாங்கள் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எமது போராட்டத்தையும் மக்களையும் திசை திருப்புவதற்கும் அழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிப்போம் ஆக. எந்த தலைமையின் கீழ் இந்த போராட்டம்
தொடங்கியதோ அதே தலைமையின் கீழ் இந்த போராட்டம் தொடரும் என்பதையும் அறியத் தருகின்றோம்.

அடையாளத்தை இழந்த மனிதன் அங்கீகாரத்தையும் தனித்துவத்தையும் இழக்கின்றான். எமது வரலாறு எமக்கு ஒரு அடையாளம். தமிழீழம் எமது தலைமை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியவை வரலாறு தந்த அடையாளம். இவ்வையகத்தில் எமக்கு என்று ஓர் அங்கீகாரத்தை பெற்று தந்ததும் இத் தனித்துவம் வாய்ந்த இவ்வடையாளங்கள் தான்.

எனவே! நாம் இந்த வரலாற்றை மறப்போமா? இல்லை... நாம் எமது அடையாளத்தை இழப்போமா? இல்லை.... நாம் எமக்கான அங்கீகாரத்தை விட்டு கொடுப்போமா? இல்லை.. இல்லை... இல்லை என்பதே எமது பதில்.

எமது மொழி தமிழ்.. எமது தாயகம் தமிழீழம்... எமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். எமது தேசியக் கொடி செக்கை நிறத்தில் வேங்கை நடுவில் சீறும் அந்தக் கொடி தமிழீழத் தேசியக்கொடி. எமக்கு வேண்டியது எமக்கான சுதந்திர தேசமும் எங்களுக்கான சுயநிர்ணய உரிமையும் மட்டுமே! என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் தொடரும்.

சுதந்திர தேசத்திற்கான போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் முறியடித்து விட்டோம் என்று சிங்கள பேரினவாதம் கொக்கரிக்கின்றது. ஆனாய்; அவர்கள் கூறுவது போல் எதுவும் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றோம். போராட்ட வடிவம் மாறலாம் ஆனால் போராட்டத்தின் இலக்கு என்றும் மாறாது. எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து இன்றும் என்றும் தெளிவுடனும் உறுதியுடனும் எமது தமிழீழத்திற்காக
தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் சாத்வீக வழியில் அரசியல் தீர்வு வரும் வரை போராட்டத்தை தொடருவோம்.

கடந்த வருடம் உலகிலேயே அதிவேகமாக முன்னேறும் இனம் எங்கள் தமிழ் இனம் என்று ஜ.நா சபை அறிவித்திருந்தது. ஆனால் இன்று இதே ஜ.நா சபை அங்கு ந்டைபெறும் சில சம்பவங்களால் எங்கள் இனத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் மதிப்பையும் இழக்கும் தறுவாயில் நிற்கின்றது. இத்தருணத்தில் இன்றைய தமிழ் மாணவர் எழுச்சி நாளில் ஜக்கியராச்சிய தமிழ் இளையோர்
அமைப்பு அறுதியும் இறுதியுமாக ஜ.நா சபைக்கு இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம். எமது கோரிக்கை எமது தாய் நிலத்தில் சிறீலங்கா பேரினவாத அரசாலும் இராணுவத்தாலும் சிறைப்பட்டிருக்கும் எங்கள் மக்களை பொற்ப்பு எடுத்து அங்குள்ள மக்களினது குறிப்பாக இளைஞர்களினதும் யுவதிகளினதும் பாதுக்கப்பை உறுதிப் ப்டுத்தவேண்டும்.

உலகம் முழுவதிலும் எங்கள் உறவுகளே! எமது நாட்டில் எமது மக்கள் உரிமையை வென்று எடுக்கும் வரை... எமது நாட்டில் எமது மக்கள் விடுதலையை பருகும் வரை உங்கள் நாடுகளில் உங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துங்கள். ஒன்றிணைந்து உங்களின் அரசுகளின் மனசாட்சியை தட்டி எழுப்புங்கள். இது ஒவ்வொரு தமிழனதும் வரலாற்று கடமை. இந்த வரலாற்றுக் க்டமையை
ஆற்ற புயலாக புறப்படுங்கள். இதுவே எமது சுதந்திரத்துக்கான அறுதியும் இறுதியுமான போராட்டம். எனவே அனைத்து தமிழ் உறவுகளும் ஒன்றிணைந்து போராடுமாறு ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் கோரிக்கை விடிகின்றோம்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Comments