இந்திய இராணுவ அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. தற்போது அடர்ந்த காடுகளில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளை இலகுவாக இனம்கண்டு, தேடி
அழிப்பதற்கான இராணுவ உபகரணங்களை பெறுவதற்காகவே இலங்கை தூதுக்குழுவினர் பேச்சு நடத்தியதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
மனிதன் உடலில் இருந்து வெளியாகும் வெப்பத்தை புற ஊதாக் கதிர்கள் மூலம் இரவுவேளைகளில் கண்டுபிடிக்க முடியும். இவ்வகையான புற ஊதாக் கதிர் உள்வாங்கிகள் பீச் கிராப் என அழைக்கப்படும் விமானத்தில் இருக்கிறது. இந்த வகையான ஆளில்ல விமானம் சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறப்பில் ஈடுபட்டாலும், துல்லியமாக தரையில் இரவில் நடமாடும் மனிதர்களை அடையாளம் காணும்.
இந்த பீச் கிராப் எனப்படும் விமானம் விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை அரசால் கணிசமான முறையில் பயன்படுத்தப்பட்டது. இதனாலேயே இராணுவத்தினர் ,பகலில் பாரிய எறிகணைத் தாக்குதலை நடத்துவதும், பின்னர் இரவில் முன்னேற்ற முயற்சியிலும் ஈடுபட்டிருந்ததனர்.தற்போது அடர்ந்த காடுகளில் நன்கு பயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாகவும், அவர்களை தேடி அழிக்கும் நோக்கில் காடுகளுக்குள் உள்நுளைவது தற்கொலைக்குச் சமன் எனவும் கூறப்படுகிறது.
அத்துடன் புலிகளின் ஜொனி கண்ணிவெடிப்பிரிவினர் காடுகளில் பல இடங்களில் பொறிவெடிகளை ஸ்தாபித்திருப்பதால், உள் நுளையும் இராணுவத்தினர் கடுமையான இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம். தற்சமயம் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளார்கள் என பரப்புரை மேற்கொண்டுவரும் இலங்கை அரசு, காடுகளுக்குள் உள்நுளையும் இராணுவத்தினர் பலர் காயமடைந்தால் சிங்கள மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பதில்கூறவேண்டியிருக்கும்.
எனவே இதைத் தவிர்பதற்காக, காடுகளில் மறைந்துள்ள புலிகளை தேடிஅழிக்க நவீனவகையான ராடர், மற்றும் புற ஊதாக்கதிர் உபகரணங்களை இந்தியாவிடம் கோரியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இவ் வகையான நவீன உபகரணங்களை விமானத்தில் பொருத்தி வான் தாக்குதல் மூலமாக எஞ்சியுள்ள புலிகளை அழிக்க திட்டம் தீட்டியுள்ளார் கோத்தபாய.
Comments