பான் கீ மூன் இலங்கைக்கு ஏன் வந்தார்..?

பதிலளிக்கப்படாத கேள்விகளுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை விட்டு புறப்பட்டிருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த ஆய்வொன்றில் தெரிவித்திருக்கிறது.

சிறீலங்காவின் இனப்படுகொலையில் மக்கள் பலியாவதைத் தடுக்ககாவின் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்களை இலங்கைக்கு செல்லுமாறு விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை கவனத்தில் எடுக்காமல் மெளனம் காத்தவர்,

மக்கள் அனைவரும் கொல்லப்பட்டதன் பின்னர் போர் முடிவடைந்துவிட்டதாக சிறீலங்கா அறிவித்ததன் பின்னர் 16 மணித்தியாலப் பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டுவிட்டு சென்றிருக்கின்றார்.

தமிழ் மக்களுக்கு எந்தவித்திலும் பிரயோசனமற்ற இவரது பயணம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளை வெளியில் கொண்டுவரும் இன்னர் சிற்றி பிரஸ் கூட இவரது பயணத்தை கேலி செய்கின்ற அளவிற்கு நிலைமை சென்றுள்ளது.

பதிலளிக்கப்படாத கேள்விகளுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை விட்டு புறப்பட்டிருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த ஆய்வொன்றில் தெரிவித்திருக்கிறது.

இப்பயணம் தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

மோதல் சூன்ய வலயத்துக்கு மேலாக சென்று பார்வையிட்டும் அகதிகள் முகாம் ஒன்றுக்கு சென்று நிலைமையை அவதானித்துவிட்டும் பான் கீ மூன் தலைமையில் வருகை தந்திருந்த அதிகாரிகளுடன் ஐ.நா. விமானம் கொழும்பை விட்டு புறப்பட்ட போதிலும் குழப்பகரமான பல கேள்விகள் தொடர்ந்தும் இருப்பதாக அந்த விமானத்தில் சென்ற நியூயோர்க்கிலுள்ள இன்னர் சிற்றி பிரசின் நிருபர் மத்யூ ரசல் லீ தனது செய்தி ஆய்வில் எழுதியிருக்கிறார்.

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் தன்னால் முடிந்த அதிகளவிலானவற்றை செய்து கொண்டிருக்கிறது. இந்த முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன் என்று பான் கீ மூன் கூறியிருக்கிறார்.

கேள்வி பதில் அமர்வு இடம்பெறவில்லை. பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக ‘இரத்தக்களரி'யயன்று அதனை அழைப்பதை பான் கீ மூன் தவிர்த்துக்கொண்டார். ‘அந்தக் குறிப்பிட்ட வார்த்தையை நான் சொல்லவில்லை. அது தொடர்பாக முழுமையான தெளிவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்' என்று அவர் கூறினார்.

கண்டியிலிருந்து விமானநிலையத்திற்கு ஊடகத்துறையினர் அழைத்துச் செல்லப்பட்டனர். (பான் கீ மூனின் பயணம் தொடர்பாக வழங்கப்பட்ட இரண்டு நாள் விசாவை மேலும் நீடிக்குமாறு இன்னர் சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. ஆனால் அது வழங்கப்படவில்லை) கண்டியிலிருந்து விமானநிலையம் செல்லும் பாதையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகள் காணப்பட்டன.

எங்கும் சிங்கக் கொடி பறந்தது. விமானநிலையத்தில் அரசாங்கம் மற்றொரு செங்கம்பள பிரியாவிடைக்கு ஏற்பாடு செய்திருந்தது. பான் கீ மூன் சிறிது நேரம் தாமதித்து வருகை தந்தார். பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜய் நம்பியாரும் ஐ.நா. விமானத்தில் உடன் வந்தார்.

அவருடைய ஒருவார காலப் பணி பூர்த்தியாக்கப்பட்டிருந்தது. அவர் விமானத்தில் ஏறியபோது, இன்னர் சிற்றி பிரஸ் பகிடிவிட்டது. ‘திரும்பி வந்ததற்கு நல்வரவு' என்று தெரிவித்தது. பான் கீ மூன் பேட்டியளித்துக்கொண்டிருந்தார். இறுதியாக இன்னர் சிற்றி பிரசை அவர் கண்டுகொண்டார். நீங்களும் எங்களுடன் திரும்பி வருகிறீர்களா என்று கேட்டார். ஆம் என்று பதிலளிக்கப்பட்டது.

விசா நீடிப்பு மறுக்கப்பட்டபோதும் ஐ.நா.விடம் உதவி இல்லை. மக்களுடன் இன்னர் சிற்றி பிரசுக்கு மக்கள் கதைக்க முடியுமா என்று ஐ.நா. விலுள்ள சிறீலங்காத் தூதுவரிடம் கேட்கப்பட்டது. ஓரளவுக்கு முடியும் என்று அவர் கூறினார். முகாம்களில் உள்ளே இருந்தவர்களிடம் மட்டுமே இன்னர் சிற்றி பிரசால் கதைக்க முடிந்தது.

அங்கு படையினரும் ஏனைய அரசாங்க அலுவலர்களும் இருந்தனர். சிறீலங்கா அதிகாரிகளிலும் அங்குள்ள அதிகாரிகளே முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருந்தவர்களை அருகில்செல்வதைத் தடுத்தனர்.

கொழும்பிலிருந்து விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் விமானத்தில் அங்கு கூடியிருந்தோர் மத்தியில் பான் கீ மூன் பேசினார். கொரியாவின் முன்னாள் தலைவரின் தற்கொலைக் கடிதம் மற்றும் தான் மலர்களை அங்கு அனுப்பி வைத்த விடயம் என்பன பற்றி அங்கு கதைத்தார்.

முன்நாட்களில் ஊடகங்களுடன் பேசுவதற்கு தென்கொரியா தடுத்திருந்தது. பின்னர் மூன்று மருத்துவர்களைப் பற்றியும் (வன்னியில் பணியாற்றியவர்கள்) நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டீர்களா என்று பான் கீ மூனிடம் கேட்கப்பட்டது.

ஆம், நான் கதைத்தேன் என்று அவர் பதிலளித்தார். அரசாங்கத்துடனான கூட்டறிக்கையின் போது அந்த மருத்துவர்கள் பற்றியோ அல்லது பத்திரிகை சுதந்திரம் குறித்தோ முகாம்களுக்கு அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செல்வது தடுக்கப்பட்டமை குறித்தோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அரசாங்கம் மனிதாபிமான நிறுவனங்கள் தொடர்ந்து பணிபுரிவதற்கு ஏற்பாடுகளைச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ், எதிர்க்கட்சிகள் அல்லது சிவில் சமூகத்தை ஏன் பான் கீ மூன் சந்தித்திருக்கவில்லை.

இது அரசாங்கங்கள் பக்கம் ஐ.நா. செல்வதாக தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துகின்றது. விமானத்தில் சென்றுகொண்டிருந்த போது பான் கீ மூன் பஹ்ரயினில் வைத்து நிருபர்களிடம் கதைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பான் கீ மூன் குழுவினர் வேறுபக்கமாகச் சென்றனர்.

ஒரு சில நிருபர்களுக்கே பேட்டியளித்தனர். அவர்களின் உள்ளூர் சந்தைகளைப் பற்றி பேட்டி காணப்பட்டது. சிறீலங்கா என்ன செய்யவேண்டுமென்று தான் விரும்புவதாக பான் கீ மூன் தலைமையிலான ஐ.நா. எதனையும் கூறவில்லை என்று அவதானி ஒருவர் இன்னர் சிற்றி பிரசுக்குக் கூறினார்.

நன்றி

ஈழமுரசு(29.05.09)

www.tamilkathir.com

Comments