கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் "மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்" 07/06/2009 ஞாயிறன்று நடைபெற்றது.
முன்னதாக பெங்களூர் கிழக்குத் தொடர்வண்டி நிலைய திடலில் எழுச்சி கரமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர். சி.இராசன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
தொடர்ந்து பேராசிரியர். பாப்பையா தமிழீழ மக்களுக்கான ஆதரவை தனது கன்னட உரையின் வழியாகத் தெரிவித்துக் கொண்டார்.
சிறப்புரையாற்றிய இயக்குநர் சீமானின் உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறியிருந்தனர்.
மனித சங்கிலி கலந்துக் கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் பொதுக்கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.
Comments