வவுனியா ஏதிலிகள் முகாமில் அண்மையில் 7 கர்ப்பிணித் தாய்மார்கள் இறந்துள்ளனர் - பத்மினி

வன்னியின் இறுதி யுத்த முன்னெடுப்புகளால் இடம்பெயர்ந்து வவுனியா ஏதிலிகள் முகாங்களில் வாழும் மக்களில் அண்மையில் 7 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை சிறீலங்கா நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகால சட்டப் பிரேரணை நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, வவுனியா ஏதிலிகள் முகாங்களில் வாழும் மக்களின் அவல நிலை குறித்து கண்ணீர் மல்ல உரையாற்றியிருந்தார்.

வவுனியா ஏதிலிகள் முகாங்களில் அண்மையில் 7 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். நிமோனியாக் காய்ச்சல் மற்றும் ஏனைய நோய்களால் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏதிலிகள் முகாங்களில் செய்து கொடுக்கப்பட்ட எந்தவொரு வசதிகளும் மக்களுக்கு திருத்தியடைக் கூடியதாக அமையவில்லை.

தங்களது குடும்ப உறுப்பினர்களைக் காணாது அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு பிரிந்தும் சிதறியும் காணப்படும் அவர்களின் உறவுகளை ஒன்றிணைக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

Comments