வஞ்சக வலைக்குள் சிக்காமல் தமிழ் மக்களே! விழிப்பாக இருக்க வேண்டியவர்கள் நாங்கள்.

இலங்கை தீவில் தொன்றுதொட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பாடல் அதாவது பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படாமல் சிறுபான்மை இனம் என ஒதுக்கப்பட்டு அடிமைகள் போல அங்கீகரிப்பதற்காக சிங்கள இனவாதிகளால் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதை எம் இனத்தின் மீது திணிக்கப்பட்டபோது நாம் அடிமைகள் அல்ல. சிறுபான்மை இனமாக இருந்தாலும் பெரும்பான்மை இனத்திற்கு சமமான பலம் கொண்டவர்கள் என்று நிருபிக்க தமிழர்களின் மன பலத்துடனும் அவர்களின் பிள்ளைகளாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத பலத்துடனும் முப்பது ஆண்டு காலம் போராடி உலகத்தின் மூலையில் மாங்காயாக தொங்கி கொண்டிருந்த இலங்கையில் தமிழினம் என்ற ஒரு இனம் பெரும்பானமை அரசால் நசுக்கப்படுகிறது என்று உலகறிய வைத்திருக்கிறது.

உலகின் மூலை முடுக்குகளிலுள்ள எல்லாத்தமிழனும் கொதித்தெழுந்து எமது நாடு தமிழீழம் எமது தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்று உலகத்திற்கே அறிக்கை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். தீவிரவாதியாக முத்திரை குத்திய உலகநாடுகளிற்கு ஆச்சரியம் என்னவெனில் தீவிரவாதியை தலைவர் என்று எப்படி இந்த இலட்சக்கணக்கான மக்களும் ஏற்கிறார்கள்! அப்போ இதில் ஏதோ தவறு இருக்கிறது. என்று நன்கு உணர்ந்ததால் தான் யுத்தத்திற்கு மௌனம் வாயிலாக சம்மதம் தெரிவித்த ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் பான்கிமூன் முதல் எல்லோரும் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு கொடுக்காவிட்டால் அங்கு மீண்டும் யுத்தம் வெடிக்கும் என கருத்து தெரிவிக்கிறார்கள்.

அது மட்டுமல்லாது என்ன தீவிரவாத செயல்களில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டார்கள்? கரும்புலி தாக்குதல் எனும் மனித வெடிகுண்டு தாக்குதல் தான் தீவிரவாதம் என்றால் மனிதனை பிடித்து விலைபோகும் உடற்கூறுகளை எல்லாம் எடுத்து விற்கும் சிங்களவனுக்கு, அது மட்டுமல்லாது விமானங்கள் மூலமும் இரசாயனக்குண்டுகள் மூலமும் ஒரு இனத்தையே அழித்த சிங்களவனுக்கு இந்த உலகத்தில் என்ன பெயர் சூட்டப்போகிறது! தன் இனத்தை காக்க தன்னையே எரிக்கும் மெழுகுவர்த்திகள் தான் எம் கரும்புலிகள் எம் இனத்தின் கடவுள்கள் அவர்கள் ஒருபோதும் தீவிரவாதிகள் ஆக முடியாது.

எம் விடுதலைக்காக தமிழீழத்துக்காக எம்மினம் செய்த தியாகங்கள் உலகத்தில் எதனுடனும் ஒப்பிடமுடியாதவை. இயற்கையை இரசிப்பதைவிட எம் போராளிகளின் மாவீரர்களின் வாழ்க்கை இரசிப்பதில் கிடைக்கும் இன்பங்கள் கோடாடி கோடி. எந்த இனமாக இருந்தாலு எம் தெய்வங்களை இரசிக்காதவர்கள் மதிக்காதவர்கள் மனிதர்களே கிடையாது. அப்படியான தெய்வீக சிந்தனை படைத்தவர்கள் அவர்கள். தெய்வீக குணம் படைத்த குருவிகள் வாழும் கூண்டை தம் சுயநலத்துக்காக சிதறடித்து சகோதர யுத்தத்திற்கு வழிவகுத்தது பேச்சுவார்த்தை எனும் பூதம். ஒரு கோப்பைக்குள் சாப்பிட்ட எங்களை நாங்களே நாங்கள் சுடுபட வைத்து எம் இனத்தை அழிக்க உலகம் தீட்டிய சதி திட்டம் தான் பேச்சுவார்த்தை.

பேச்சுவார்த்தை எனும் வஞ்சக வலைக்குள் வீழ்ந்ததனால் இன்று எம் போராட்டத்தின் வடிவம் மாறுபட்டிருக்கிறது. தமிழர்களாகிய எமது இலட்சியம் தமிழீழம். சிங்களம் எமது இனத்தை கொன்று சித்திரவதை செய்து முகாமில் அடைத்து எத்தனை அட்டூழியங்கள் செய்தாலும் தாய்க்கு பிள்ளை தான். அது போல தமிழர்களுக்கு தமிழீழம் தான். தமிழர்களாகிய நாம் ஒரு கணம் சிந்திப்போம் விடுதலைப்புலிகளை ஒழித்த சிங்கள இராணுவத்திற்கு எங்கிருந்து வந்தது முகாமிற்குள் புலிகள்! தலைவரை ஒழித்துவிட்டால் எதுக்கு பயப்படுகிறது இராணுவம்! இதைவிட கொடுமை என்னவெனில், நேற்று 06.07.2009 அன்று வவுனியாவில் இருந்து கிபிர் எனும் விமானம் முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டது எதற்கு! போர் தான் முடிந்துவிட்டதே! புலிகளை தான் ஒழித்தாச்சே!

கிபிர் முல்லைத்தீவுக்குள் சென்றதன் நோக்கம் என்ன?

அதுமட்டுமா?

முல்லைத்தீவு பாதுகாப்புவலயமாவதன் காரணம் தான் என்ன?

புலிகள் இல்லாவிட்டால் நாட்டில் தீவிரவாதிகள் இல்லாவிட்டால் எதற்கு பாதுகாப்பு வலயம்!

இதன் காரணம் ஒன்று தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்காக இருக்கணும் இல்லாவிட்டால் புலிகளை அழித்ததாக இராணுவம் பொய்கூறிக்கொண்டிருக்கிறது.

தமிழ் மக்களே! விழிப்பாக இருக்க வேண்டியவர்கள் நாங்கள்.

இனிமேலும் நாம் வஞ்சக வலைக்குள் சிக்காமலும் தலைவரின் வழிகாட்டல் இன்றி அவரின் சிந்தனைக்கு மாறாக எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் எமது இனம் எமது தலைவர் எமது நாடு என்று ஒற்றுமையுடன் வாழ்ந்து தமிழீழத்தை வென்றெடுக்க பல வழிகளிலும் முயற்சிப்போம்..

“தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்“

- புலம்பெயர் தேசத்திலிருந்து மீனகம் தளத்திற்காக பிறைநிலவு

உங்கள் கருத்துக்களை அனுப்ப: pirainilavu.d@gmail.com

http://www.meenagam.org/?p=5234

Comments

tamilan said…
பாப்பான் பார்ப்பணன் பார்ப்பான் ஆகியவற்றெல்லாம் சொல்லி எழுப்பும் மடையங்கள் பல வகையுள்ளார்கள்; இவை கீழ் வருமாறு :

1) OBC சான்றிதழைக் கைப்பற்றும் தெலுங்கு பேசும் சாதியினத்தவர்.

2) OBC சான்றிதழைக் கைப்பற்றும் கன்னடம் மொழி பேசும் சாதியினத்தவர்.

3) இந்தி மொழி பேசும் OBC முஸ்லிம்கள் மற்றும் இதர சாதிகள்.

இவர்கள் தாங்கள் தமிழர் அல்ல என்பதை மறைக்கும் வழிகள் கீழ் வருமாறு:

1) வஞ்சகமாக ஒரு தமிழ் பெயர் வைப்பது.

2) தாங்கள் வெறுக்கும் தமிழர்களை அவர்கள் தமிழழே கிடையாது என பறைசாடுவது.

3) இந்து, தெலுங்கு மற்றும் தமிழ் அல்லாத இதர மொழி பேசுவோர்களை தாங்கள் தான் "உண்மைத் தமிழர்கள்" என அழைப்பது.

முதலில் தமிழ் நாடு என்கிற மாநிலத்தில் முதலில் தமிழ்மை என்பது கிடையாது. எல்லாமே ஒரு பெரிய வஞ்சகம்.

1)பள்ளிக்கூடங்களில் தொடரும் இந்தி திணிப்பு : நமது தமிழக அரசு தமிழ் கட்டாய மொழி என்பதை பெயர் பெற்றுவிட்டது தவர அதை அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலுமான CBSE ராணுவ Matric பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. CBSE பள்ளிகளில் தனி விதிவிலக்கு!! ஆனால் கர்நாடக CBSE பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்; பஞ்சாப் CBSEஇல் பஞ்சாபி; மகாராஷ்டிராவில் மராட்டி எப்படி அமல்படுத்தப்படுகிறது?

2) இந்தி பேசும் நபர்களுக்கு ஐ ஐ டி, விமானநிலைய, இரயில் நிலைய பாதுகாப்புப் பணிகளில் சிறப்பு இடஒதுக்கீடு.

3) தமிழ் பள்ளிகளை மூடுவது.

4) தமிழ் பேசும் சமூகத்தினரை "அவர்கள் தமிழே கிடையாது" என வஞ்சகப்பேச்சு பரவுதல்.

5) இந்தி பேசும் பீஹாரிகளுக்கு போலி ரேஷன் அட்டைகள் வழங்குவது.

6) சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி போன்ற இடங்களில் தமிழ் பலகைகளே இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலப் பலகைகளில் மட்டும் கடைகள் நடத்துதல்.

7)கல்வித்துறையில் தமிழ் அறியாத OBCகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.

இதன் பின்னணியின் நமது தமிழ்நாட்டின் தெலுங்கு பேசும் அரசும் அவர்களின் இணையவழி தொண்டர்களில் பார்ப்பான் நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்னும் 50 வருடங்களில் தமிழ்நாட்டில் போலித்தமிழ் OBC வெறித்தனத்தால் தமிழ்நாடு தமிழை விட்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் மட்டும் பேசும் மாநிலம் ஆகும்.