கொடிய புற்றுநோய் காரணமாக 22-07-2009 அன்று மீளாத்துயிலடைந்து, எல்லோரையும் ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ள, தமிழீழம் கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும் தற்போது யேர்மனி சோலிங்கனை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தையா உதயகுமார் அவர்கள் நாட்டுப்பற்றாளராக கெளரவிக்கப்பட்டுள்ளார்
இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள்.
28-07-2007
வீரவணக்கம்
நாட்டுப்பற்றாளர் திரு கந்தையா உதயகுமார்.
தமிழீழம் கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும் தற்போது யேர்மனி சோலிங்கனை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தையா உதயகுமார் அவர்கள், தான் பிறந்து வளர்ந்த மண்ணை என்றும் ஆழமாக நேசித்து, புலம்பெயர்ந்த நாள் தொடக்கம் மரணிக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு உரமூட்டும் வகையில் தமிழீழ விடுதலைக்கு அயராது உழைத்தவர்.
கொடிய புற்றுநோய் காரணமாக 22-07-2009 அன்று மீளாத்துயிலடைந்து, எம்மையும் சக செயற்ப்பாட்டாளர்களையும் ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ளார்.
தமிழீழத்தில் விடுதலை வேண்டி அல்லலுறும் மக்களின் விடிவிற்காக அயராது பாடுபட்ட இவர், புலத்தில் தமிழீழ தேச நிர்மாணத்திற்கான அனைத்துச் செயற்பாடுகளிலும் 23 வருடங்களாக ஆற்றிய சேவை அளப்பரியது.
தமிழீழ விடிவிற்காய் காலநேரம் பாராது – அயராது உழைத்த யேர்மனிக் கிளைச் செயற்பாட்டாளரான திரு கந்தையா உதயகுமார் அவர்களின் இழப்பு என்றுமே ஈடுசெய்ய முடியாதது. இவரது இழப்பால் அல்லலுறும் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கேற்கின்றோம்.
தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் முழுவீச்சோடு உழைத்த இந்த மானத் தமிழனின் மறைவால் துயருறும் யேர்மன் கிளையின் அனைத்துச் செயற்பாட்டாளர்களோடு நாமும் இணைந்து தேசிய விடியல் கனவோடு மறைந்த நாட்டுப்பாற்றாளனின் கனவை நனவாக்க பாடுபடுவோம் என உறுதியெடுத்துக்கொள்வோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
Comments