கடந்த 24ம் திகதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்பொழுது சிறிலங்காவை காப்பாற்ற முன்வந்த நாடுகள், தமது வெளிநாட்டு கொள்கைகளை மற்றும் வேளைகளில், காலம் கடந்தாலும் இனச் சுத்திகரிப்பை மேற்கொண்ட சிறிலங்கா மீது, நிச்சயம் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களென கூறுகிறது.
ஆறிக்கை மேலும் கூறுவதாவது, யாரும் சிறிலங்கா அரசினதோ அல்லது அவர்களது தூதுவரலாயங்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாது, சிறிலங்காவின் போர் குற்றவழிகள் மீது ஜனநாயாக நாடுகளிள் நாடுகளின் சட்டதிட்டத்திற்கு ஏற்ற வகையில் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய தாயாராக வேண்டுமெனவும், இது பொருட்டு அவ்வவ் நாடுகளின் வழங்கறிஞர்களுடன் முன்கூட்டியே ஆலோசனை செய்து, தேவையான சாட்சியங்கள் ஆவணங்களை தயார் செய்ய வேண்டுமென கூறுகிறது.
கடந்த ஆறுபது வருடங்களாக தமது அரசியல் அபிலாசைகளுக்கும், உரிமைக்களுக்காக போரடிய தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர், தற்பொழுது வதை முகாம்களில் கூறமுடியாத துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
வதை முகாம்களில் கைது, காணமல் போதல், பலியல் வன்முறை, கொலை ஆகியவை தினமும் ஓர் சாதரண சம்பவமாக நடைகிறது. இறக்கும் நிலையில் காயப்பட்டோரும் முதியோரும் உள்ளதாகவும், முகாம்களில் இருப்பிட வசதிகள,; உணவு, மருந்து, போன்றவை போதியளவு கிடையது மக்கள் பெரும் அவலத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும,; பாடசாலை மாணவ மாணவிகள், சிறுவரின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.
இவ் முகாம்களுக்கு சர்வதேச நிறுவனங்களோ, பத்திரிகையாளரோ அரசினால் அனுமதிக்கபடவில்லை. இடம் பெயர்ந்தோரின் மீள் குடீயேற்றம், கண்ணிவெடி அகற்றும் சாட்டில் பின்போடப்படுவதாகவும், சிங்கள மயப்படுத்தல் வெற்றிகரமாக நடைபெற்ற பின்னரே இடம் பெயர்ந்தோரின் மீள் குடியேற்றம் அங்கு இடம்பெறுமென திடமாக கூறுகிறது.
கடந்த காலங்களில் வேறுபட்ட சிங்கள அரசுகள், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் அரசியல் தீர்வு தேடாது, அதை தவிர்த்து கொள்வதற்கு கூறும் சாட்டுப் போக்குகளே அதிகமெனவும், சிறிலங்கா அரசிற்கு சமானாக திகழ்ந்து, தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் அரசியல் தீர்வுக்கு கடந்த மூன்று சாகப்தங்களாக பேரம் பேசிய தமிழீழ விடுதலைப் புலிகள் தற்பொழுது தமிழ் மக்களின் தாயாக பூமியில் இல்லாத நிலையில், சிறிலங்கா அரசு, எப்படி ஓர் அரசியல் தீர்வை முன்வைப்பார்களென தமிழீழ மக்கள் எதிர்பார்க்க முடியுமென, தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ் மக்கள் மீது சிங்கள அடக்கு முறையாளரினால் மேற்கொள்ளப்பட்ட பல நாசகாரச் சம்பவங்களின் சாம்பல் மேடுகளிலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் 1970ம் ஆண்;டுகளில் உதயமானர்கள் எனவும், இவர்களை இராணுவ ரீதியா ஒடுக்கி ஓர் இராணுவ வெற்றியை பெற்ற சிறிலங்கா அரசு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொண்டட்டங்கள் நடத்தினாலும், பொதுவாக பெரும்பான்மை தமிழ் மக்களின் பகைமையை சம்பாதித்துள்ளதாகவும், தற்போது தெற்கில் முடிசூடா மன்னனாக திகழும் ஜனதிபதியும் குடும்பத்தினரும், அவரது நண்பர்களும் அடுத்துவரும் அரசினால் நிட்சயம் நாட்டின் ஒருமைப்பாட்டை குலைத்து, தமிழ் மக்களின் பகைமையை தேடிய பிரஜைகளாக நிட்சயம் கணிக்கப்படுவார்களென தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினரின் அறிக்கை கூறுகிறது.
Comments