விடுதலைப் போராட்டத்துக்கான நியாயங்கள் உயிர்த்துடிப்புடன் இருக்கும் வரைவிடுதலைப் போராட்டம் உயிர்த்தெழும்
இனத்துக்கான விடுதலைப் போராட்டம் எப்போதுமே ஓய்ந்துவிடாது. விடுதலைப் போராட்டத்துக்கான நியாயங்கள் உயிர்த்துடிப்புடன் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டமும் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும்.
அணுகுமுறைகள் மாறலாம், போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு நோக்கிய பயணம் மாறாது என்று பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் கடந்த யூன் 26ம் திகதி ‘ஈழப் பிரச்சினையில் ஊடகங்களின் போக்கு' என்ற தலைப்பிலும், 28ம் திகதி தகவல் தொழில் நுட்பத்துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் பங்கேற்று ஆற்றிய உரையிலிருந்து....
உலக வரலாற்றில் விடுதலைப் போராட்டத்தில் புதிய அத்தியாயங்களை எழுதிய இயக்கம் - விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை உலக நாடுகளின் பல்வேறு விடுதலைப் போராளிகள் இயக்கங்களே பெருமையுடன் கூறுகின்றன. உலகத்தின் எந்த ஒரு நாட்டின் ஆதரவுமின்றி - எந்த ஒரு நாட்டின் உதவியையும் எதிர்பாராமல் தங்களுக்கான இராணுவ கட்டமைப்புகளை அவர்களே உருவாக்கிக் கொண்டு தங்களது சுய சார்பில் உறுதியாக நின்றார்கள். தெற்காசியப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் உரிமை கோருவதற்கு 47 நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு நிற்கும் போது ஒரு போராளி இயக்கம் கடற்பரப்பின் ஒரு பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்ததை எந்த ஒரு ‘அரசும்’ - ஏற்கத் தயாராக இல்லை. உலகில் விமானப் படை வைத்திருந்த ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம்தான். அந்த விமானப் படையின் செயலாற்றலை முறியடித்திட துடித்த இந்திய பார்ப்பனிய ஆட்சி, ஓடோடிச் சென்று - ராடார் கருவிகளையும், அதனை இயக்கும் தொழில்நுட்பவியலாளர்களையும் இனப்படுகொலை நடத்தும் சிங்களப் பேரினவாத ஆட்சிக்கு வழங்கி உதவியது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வலிமையான இராணுவ கட்டமைப்பும் எந்த ஒரு நாட்டையும் சார்ந்திடாத சுயசார்பும் தான் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விட்டது. தமிழர்களாகிய நாம் - இதில் பெருமையடைந்தோம். உணர்வு பெற்றோம். உதவிட துடித்தோம். இயக்கங்கள் நடத்தினோம். இந்திய அரசே, இனப் படுகொலைக்கு துணை போகாதே என்று போராடினோம். ஆனால், இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி - தமிழர்களின் குரலை திரும்பிப் பார்க்கக்கூட தயாராக இல்லை. நம்மை - இந்தியா அந்நியர்களாகவே கருதியது. நாமும் இந்தியக் குடிமக்கள் என்பதை இந்திய தேசிய ஆட்சி அங்கீகரிக்கத் தயாராக இல்லை. நம்முடைய உணர்வுகளை அவமதித்து புறக்கணித்தது. இந்த அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் அங்கீகாரம் தேடித் தரவே தி.மு.க.வும் அதனுடன் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகளும் முயற்சித்தன. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்த அதே நேரத்தில் ஈழத்தில் தமிழினம் இருந்த பகுதி கொலைக்களமாகியது. இங்கே தேர்தல் முடிவுகள் துரோக காங்கிரசுக்கும் அதன் கூட்டணிகளுக்கும் வெற்றிகளை அறிவித்த அதே காலகட்டத்தில் அங்கே தமிழினப் படுகொலையை நடத்தி முடித்த சிங்களம் வெற்றிப் பரணி பாடியது. காலம் உள்ளவரை இந்த இனத்துரோகத்தை அதற்கு துணை நின்ற சக்திகளை வரலாறு மன்னிக்கவே போவதில்லை. எல்லாமுமே முடிந்துவிட்டது. இப்போது என்ன நிலைமை? மறந்து விடாதீர்கள்!
இனத்துக்கான விடுதலைப் போராட்டம் எப்போதுமே ஓய்ந்துவிடாது. விடுதலைப் போராட்டத்துக்கான நியாயங்கள் உயிர்த்துடிப்புடன் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டமும் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும். அணுகுமுறைகள் மாறலாம், போராட்ட வடிவங்கள் மாறலாம்? ஆனால் இலக்கு நோக்கிய பயணம் மாறாது.
இப்போது ஆயுதப் போராட்டம் அங்கே தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டது. உண்மைதான். ஆனால், ஆயுதப் போராட்டத்தின் விளைவால் மேலெழுந்த அரசியல் - அரசில் நகர்வை நோக்கி நகர்த்தக்கூடிய சூழலை, அதற்கான அடித்தளத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது நிர்வாகப் பகுதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் - மக்கள் பேராதரவோடு வைத்திருந்த காலத்தில்கூட சர்வதேசத்தின் அரசியல் கவனம் ஈழப் பிரச்சினையில் திரும்பவில்லை. ஐ.நா. மன்றத்தின் விவாதத்துக்கும் உள்ளாக்கப்படவில்லை. ஆனால், எல்லாவற்றையும் இழந்த நிலையில் ஐ.நா.வில் ஈழத் தமிழர் பிரச்சினை விவாதத்துக்கு வந்துவிட்டது.
உலக நாடுகள் சிங்களத்தின் மனித இனப்படுகொலையைக் கண்டிக்கத் தொடங்கி விட்டன. மேற்குலக நாடுகள் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களத்தை வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இடதுசாரி கொள்கையாளர்களாக நாம் மதித்த நாடுகள் - கியூபாவானாலும், சீனாவானாலும் அவை எல்லாம் இந்தியா, பாகிஸ்தானோடு கைகோர்த்துக் கொண்டு இனப்படுகொலை நடத்தும் சிங்களத்துக்கு ஆதரவாகவே நிற்கும் அவலத்தைப் பார்க்கிறோம்.
இந்த நிலையில் நல்ல சேதிகள் வருகின்றன. உலகம் முழுதும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வலிமையோடு ஒன்று திரளத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு நாட்டிலும் தமிழீழத்துக்கு ஆதரவான அமைப்புகள் வலிமையான கட்டமைப்புகளோடு செயல்பட்டு வருகின்றன. அந்தந்த நாடுகளில் இயங்கிய தலைமையகங்கள் தமிழீழத்துக்கான தூதரகங்களாகவே கருதப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் மீது இப்போது ஒரு வரலாற்றுக் கடமை சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ இலட்சியத்தை நகர்த்திச் செல்லக்கூடிய வரலாற்றுக் கடமையை, முன்னெடுத்தாக வேண்டும்.
தோழர்களே! தமிழீழ தேசியத் தலைவர், வரலாற்று நாயகன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்ற வாதத்துக்குள் நம்மை முடக்கிகொண்டு விடக்கூடாது. இதில் நாம் எச்சரிக்கையாக விழிப்புடன் செயலாற்ற வேண்டிய தருணம் இது. அந்த வாதங்களின் வலைகளுக்குள் நாம் சிக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. இந்திய, சிங்கள உளவு நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே தான் உளவு நிறுவனங்கள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாகக் கூறியதோடு மட்டுமல்ல, மரணத்தைப் பற்றி அவ்வப்போது புதிய புதிய கற்பனைகளை கதைகளாக உருவாக்கிப் பரப்பி வருகின்றன.
தலைவர் பிரபாகரன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத செய்தியைத்தான் நாட்டுக்கு, நமக்கு விடுத்துள்ளார். அதே வேளையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று பரப்பப்பட்டு வரும் கருத்துக் களத்தின் ஊடாக நாம் பயணிக்க வேண்டியுள்ளோம். இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலையை முன்னெடுக்கக்கூடிய செயல் உத்திகளை வகுக்க வேண்டிய அவசியமிருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது நாடு கடந்த தமிழீழ அரசு பற்றிய கருத்து ஒன்று சர்வதேச அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதை நாம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். பல நாடுகள் தன்னிச்சையாக தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்து, நிழல் அரசுகளை நடத்தியதை வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. ஸ்கொட்லாந்து, லத்தீன் அமெரிக்க நாடுகள், மத்திய அமெரிக்க நாடுகள், எஸ்தோனியா, பின்லாந்து, கினியா பிசாவு, ஹைட்டி, அமெரிக்கா, இந்தோனேசியா, கொரியா, லிதுவேனியா - இப்படிப் பல நாடுகள் தன்னிச்சையாக தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தன. இவை ஐ.நா. மன்றம் உருவாவதற்கு சராசரி 20 தொட்டு 30 நிமிடப் பயணம் எனக்கு 4 மணித்தியாலமாகப் போய் விட்டது. இன்னமும் கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஊர்ந்து சென்றது. வழி நெடுக இதே நிலை தமிழன் பேருந்துகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தாக்கப்பட்டான். எரிக்கப்பட்டான்.
இது நான் சென்ற பேருந்தில் மட்டும் நடந்த விடையங்களல்ல எனக்கு முன்னாலும் பின்னாலும் சென்று கொண்டிருக்கும் பேருந்துகளில் பயணிகளுக்கும் ஏற்பட்ட நிலையாகும். இது தென்னிலங்கை பூராகவும் பொருந்தும்.
காலி வீதியில் குறிப்பாக கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரைக்கும் பெரும் பாலான வர்த்தக நிலையங்கள் தமிழர்களிற்கு சொந்தமானவையாக இருந்தது. கொழும்பின் முதன்மைச் சாலையாக விளங்கும் காலி வீதி சிங்களக் காடையர்களினால் கைவசப்படுத்தப் பட்டிருந்தது.
சிங்களப் பொலிசார் காலி வீதியெங்கும் பரவலாகக் காணப்பட்டனர். அவர்கள் கூடி நின்று `பம்பல்` அடித்துக் கொண்டு நின்றனர். வன்முறையில் ஈடுபடும் காடையர்களின் கொலை வெறியை நிறுத்தவோ, தடுக்கவோ முயலவில்லை. அவ்வாறான செயல்களை அவர்கள் ஊக்குவித்துக் கொண்டு நிற்பதை அவதானிக்க முடிந்தது.
சிங்கள அரசுத் தலைவர்களின் திட்டமிட்ட வழி நடத்தலே வன்முறைக்கு காரணம் என்பதை உணர்த்துவது போல சட்டம் ஒழுங்கைப் பேணவேண்டிய காவல்துறையே அங்கு கலவரத்தை ஏற்படுத்த துணை போய்க் கொண்டிருந்த கொடுமை இடம்பெற்றது. ªஐ.ஆர்.ªஐயவர்த்தனா தலைமையிலான சிங்களப் பேரினவாதத்தை இவை உலகிற்கு தோலுரித்துக் காட்டியது. சிங்களத்துடன் தமிழினம் இணைந்து வாழ முடியாது என்ற பாடத்தையும் போதித்தது.
அரை மணித்தியாலயப் பயணம் நான்கு மணித்தியாலம் ஆகி விட்ட நிலமை காலி வீதியில் நடந்த கொலை வெறியாட்டத்தை நேரில் பார்த்த அச்சம் என்னைப் பேரூந்திலிருந்த இறங்கி வர அனுமதிக்கவில்லை. ஆனாலும் நான் இறங்கியே ஆகவேண்டும். ஏனெனில் வெள்ளவத்தையில் தான் தமிழர்கள் அதிகம். அதற்கு அப்பால் போனால் மேலும் நிலமை மோசமாகிவிடும் என்பது எனக்குத் தெரிந்தது. சடுதியாக ஏதோ நினைத்தவாறு இறங்கி விட்டேன். இறங்கிய பிறகே அது எவ்வளவு ஆபத்தானது என உணர்ந்து கொண்டேன்.
வெள்ளவத்தைச் சந்தையில் `நியூ கொழும்பு ஸ்டோர்ஸ்` என்ற பல சரக்குக் கடை ஒன்று இருந்தது காலையில் போனபோது அங்கு கதைத்து விட்டுச் சென்றேன். இப்போது திரும்பி வரும் போது அது கொழுத்து விட்டெரிந்து கொண்டிருந்தது என்பதைவிட தீப்பிழம்பாக அது காட்சி தந்தது என்பதே சரி.அது உயர்ந்த மாடிக் கட்டடம். அதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அது பெரும் கட்டிடமாக இருந்ததால் கண்ணுக்கு இலகுவில் தெரிந்தது. அது போன்று வெள்ளவத்தையிலுள்ள உணவகம் மற்றும் மாளிகைக்கடை ஒன்று எரிந்து முடிந்து வெறும் தனலாகக் காட்சியளித்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால் அது வெள்ளவத்தை காவல் நிலையம்? அருகில் இருந்தது. நூற்றுக் கணக்கான காவல்துறையினர் கடமையில் நின்றனர். அனால் அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். என் கண் முன்னால் விரிந்து செல்லும் காலி வீதி 4 மணி நேரப் பயணம் என் நினை
வுகளில் அலைகளை எழுப்பியவாறு இருக்க, இருப்பிடம் நோக்கி நடந்தேன். ஏனெனில் இன்னும் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நடக்க வேண்டும். நடந்தேன். தொடர்ந்தும் நடந்தேன். 100 மீட்டர் வரை சென்றிருப்பேன் ஒரு மினி வானில் சில காடையர்கள். அவர்கள் கைகளில் கூரிய ஆயுதங்கள். மிக மெதுவாக மினிவான் ஊர்ந்து வந்தது. 'தெமிழு இன்னவத' என கூவி அழைத்தார்கள். நான் அவர்களுக்கு அஞ்சி அங்குமிங்கும் மிரண்டு போயிருந்தால் என்னை அந்த இடத்தலேயே முடித்து இருப்பார்கள்.
நானோ அஞ்சாது சிங்களத்தில் சொன்னேன், இந்தப் பக்கம் தமிழர்கள் இல்லை என்றேன். அவர்களுக்கு சந்தேகம் வரவில்லை சென்று விட்டனர். நான் தப்பித்துக் கொண்டேன்.
ஏற்கனவே நான் பேரூந்தில் வரும் போது, எனக்குப் பக்கத்தில் சிங்களப் பெண் இருந்தாலும் அவளுடன் நான் கதைத்துக் கொண்டு வந்தாலும் என் மீதும் சந்தேகம் எழவில்லை. இந்த 4 மணிப் பயணத்தில் இரு தடைவ கொலை அச்சுறுத்தலில் இருந்து தப்பித்துக் கொண்டேன். அருகில் சென்று ஒரு தேவாலயத்தில் சிறிது நேரம் தங்கிவிட்டு மேலும் நடக்க எண்ணினேன். அப்போது பல தமிழர்கள் தாக்குதல்களுக்குள்ளாகி வந்து கொண்டிருந்தனர்.
வெள்ளவத்தையைச் சுற்றியுள்ள தமிழர்களின் வீடுகள் ஒன்று கூட எஞ்சியிருக்கவில்லை. அனைத்து வீடுகளிற்குள்ளும் காடையர் கூட்டம் படையெடுத்திருக்கிறது. அங்கு வீட்டில் உள்ளோரை தாக்கியிருக்கிறது. கிடைத்தவற்றைச் சுருட்டிக் கொண்டு அவர்களை வீட்டை விட்டு துரத்தியிருக்கிறது. சில இடங்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். எனது வீட்டுக் கருகில் உள்ள பிரபலமான வணிகர் அவர் வீட்டோடு தீக்கிரையாக்கப்பட்டார் என்ற செய்தி எனக்கு பேரிடியாக இருந்தது.
இந்தத் துயரங்களை ?ரணிக்க முடியவில்லை. காலையில் நான் சென்றபோது கலகலப்பாக இருந்த வீதி வெறிச் சோடிக் கிடந்தது. சனநடமாட்டமில்லை. அது தமிழர்கள் செறிந்து வாழும் பகுதி. இப்போது அந்த வீடுகளில் யாரும் இல்லை. சில வீடுகள் எரிந்து கொண்டிருந்தன. சில வீடுகளின் `கேற்றுகள? உடைக்கப்பட்டுக் கிடந்தன. சில வீடுகளில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன.
இன்னும் நடக்க வேண்டும். நடக்கிறேன். என்னால் முடியாமல் இருக்கிறது. ஆனாலும் நடக்கிறேன். `ஈரோஸ் தியேட்டர்` வருகிறது. அதனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. பழைய திரைப் படங்கள் போடுவார்கள். பார்த்து மகிழ்வோம். இப்போது அது அழுது கொண்டிருப்பது தெரிகிறது.
பல தமிழர்கள் அச்சத்தில் அங்குதான் ஓடி வந்திருக்கிறார்கள். ஆனால் பாவிகள் விடவில்லை. அங்கு கூடிய காடையர் தியேட்
டரை அடித்து நொருக்கி அடைக்கலம் புகுந்தவரை அடித்துக் காயப் படுத்தியிருந்தனர். பலர் பயத்தில் குதித்து ஓடி, கைகால் முறிந்த கதையைச் சொன்னார்கள். தியேட்டர் முகாமையாளர் வாள் வெட்டுக்கு ஆளாகியிருந்தார்.
இப்போது வீடு வந்து விட்டேன். எனது மனைவி தம்பி தங்கை மூவரையும் ஒரு சிங்களவர் காப்பாற்றி அடைக்கலம் கொடுத்திருந்தார். எனது வீட்டையும்காடையர்கள் தாக்க முற்பட்டபோது அவரே பாதுகாத்துள்ளார். சிங்களவர் மத்தியிலும் மனிதநேயமுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அந்த பெர்னாண்டோவும் உதாரணமாவார். 23 நள்ளிரவும், 24ம் திகதி முழு நாழும் தீவிரம் பெற்ற வன்முறை 25ம் திகதி மேலும் தீவிரம் பெற்று இலங்கை பூராகவும் பரவியது.
வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரின் படுகொலைகள் 25ம் திகதி நடைபெற்ற போது எமக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டது. வெள்ளவத்தையிலுள்ள தமிழர்கள் கோவில்கள் பாடசாலைகளில் அடைக்கலம் புகுந்த போது எனது குடும்பம் வீட்டில் தனியாக இருப்பது புத்திசாலித்தனமாக இருக்காது என எண்ணினேன். எனது பாதுகாப்பு நிமித்தம் புறக்கோட்டை செல்வது எனத் தீர்மானித்தேன்.
ஆடிக்கலவரம் தொடங்கி (23, 24, 25, 26.) நான்கு நாட்களாகி விட்டன. எங்களுக்கு இருப்பது வானொலி மட்டுமே. இதுவே எங்களுக்கு ஓரளவு செய்தி தெரிவிக்கும் நண்பனாக இருந்தது. இலங்கை வானொலியைவிட இந்திய வானொலியை நம்பினோம். இச் செய்திகளின் படி நாடு பூராகவும். வன்முறை வெடித்திருப்பது தெரிந்தது. சிங்கள அரசே இவ் வன்முறையை வளர்த்திருப்பது எளிதில் புரிந்தது. எனவே நாங்கள் அங்கிருந்து வெளியேறுவது என முடி செய்தேன்.
27ம் திகதி காலையில் ஒருவருக்கும் தெரியாதவகையில் புறப்படுவதற்கு வாடகைக் காரை அமர்த்தினோம். அதனையும் அந்த சிங்கள நண்பரே செய்து தந்தார். அவரும் கூடவே புறக் கோட்டை வந்தார். எனது தாடி மீசையை எடுத்து ஒரு சிங்களவனைப் போல தயார்படுத்தினேன். எனது மனைவி, சகோதரி ஆகியோரும் சிங்கள பெண்கள் போன்று ஆடை உடுத்தினர்.
காலை 6 மணியளவில் புறப்பட்டோம். பல இடங்களில் இராணுவம் நின்றது. பல இடங்களில் மறித்து விசாரணை செய்தனர். ஆனாலும் சிங்கள நண்பர் எங்களுடன் வந்தது நல்லதாகப் போய் விட்டது. யாரிடமும் நாம் மாட்டடிக்கொள்ளவில்லை. புறக் கோட்டைக்கு வந்து விட்டோம். இப்போது ஒரு பெரு மூச்சு வந்தது. நாங்கள் பிழைத்து விட்டோம் என்ற உணர்வு ஏற்பட்டது.
ஆனாலும் அன்றும், நிலமை மோசமாகியது. பல இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. 27ம் திகதி செட்டித்தெருவில் இராணுவத்தினர் மீது கைக் குண்டு வீசப்பட்டதாக ஒரு செய்தி வந்ததுடன். பதட்டம் அதிகரித்தது. அப்போது தொண்டமானின் செல்வாக்கு இருந்ததால் செட்டித்தெருவிலுள்ள மலையக தமிழ் இளைஞர்கள் வன்முறைக்கும்பலுடன் மோதவும் தயாராக நின்றனர். செட்டித்தெருவில் உள்ள பிரபல நகைக் கடையன்றை சிங்கள காடையர் கும்பல் உடைக்க முற்பட்ட போது, அங்கு பாதுகாப்பு பேணி வந்த இளைஞர் கைக்குண்டை வீசிக் கும்பலைக் கலைக்க முற்பட்டதை அது இராணுவத்திற்கு வீசப்பட்டது என்று சோடிக்கப்பட்ட உண்மை தெரியவந்தது. அதனைக் காரணம் காட்டி செட்டித்தெரு கடை முழுவதிலும் உள்ள அனைவரும் இராணுவத்தினரால் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டு ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த செய்தி எனக்குக் கிட்டியபோது நானும் பயந்து போனேன். நாங்கள் செக்கட்டித்தெரு என்ற கதிரேசன் வீதியில் இருந்தோம். இது பக்கத்து வீதி. சில வேளை எங்களுக்கும் இந்த கதி வரலாம் என எண்ணினோம். இந்நிலையில் 28ம் திகதி எங்கள் தெருவில் ஒரு சிங்களக் காடையர் கும்பல் மண்ணெண்ணெயை ஊற்றிச் சென்றது. இங்கு தீவைக்கப் போகின்றோம் என்றது. ஒரே பதட்டம். செட்டித் தெரு, செக்தட்டித் தெரு முழுக்க முழுக்க தமிழரின் இருப்பிடம் சில தமிழ் இளைஞர் கத்திகளை வால்களை தூக்கினர்.
'வீசட்டும் பார்ப்பம் இரண்டிலொன்று பார்த்து விடுவம்' எனத் துணிந்து நின்றனர். இப்போதும் புல்லரிக்கிறது. அந்த நிலையில் சிங்களக் காடையர் நுழைந்திருந்தால் பலர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். பயத்தினால் அந்தக் காடையர் கூட்டம் வரவில்லை. அதேவேளை ஐ£எல, வத்தளை, எலகந்த போன்ற பகுதிகளில் தமிழர் அடித்து விரட்டப்பட்டு ?ந்துப் பிட்டி முருங்கன் கோவிலில் அடைக்கலம் புகுந்தனர்.
நாடு பூராகவும் வன்முறையை வளர்த்து தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட «ஐ.ஆரின் தந்திரத்தை புரிந்து கொண்ட இந்திராகாந்தி எச்சரித்தார். தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ கொழும்பு வந்து «ஐ.ஆருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, பின்னர் «ஐ.ஆர் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்தார். ஆடிக் கலவரம் அல்லது கறுப்பு யூலை என்று நாங்கள் எதிர் கொண்ட அந்த இன்னல் நிறைந்த சம்பவங்கள் ஒரு செய்தியை தெளிவாகச் சொன்னது.
தமிழனுக்கு ஒரு தனிநாடு இருபப்பதுவே பாதுகாப்பு என்பதை 83 அடிக் கலவரம் அறுதியிட்டுச் சொன்னது. 29ம் திகதி அன்று இந்திய வெளியுறவு அமைச்சரின் கொழும்பு வரவுடன் ஆடிக் கலவரம் ஓய்ந்து போனதும், தென்னிலங்கை பூராகவும் அகதி முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் தங்கள் தாயகம் நோக்கி பயணிக்கத் தயாராகினர்.
தொடர்ந்து, பேருந்துகளில் பயணிப்பது பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்டதால், கப்பல்களில் ஏறிப் புறப்பட்டனர். கொழும்பு துறைமுகத்தில் இருந்து அந்தக் கப்பல்கள் காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தன. கொழும்பில் எனது நண்பர்களை விட்டுப் பிரிந்து 83 யூலை 5 அன்று பேருந்து மூலம் யாழ்ப்பாணம் வந்தேன். வழியில் பல இடங்களைப் பார்வையிட விரும்பியதால் நான் அவ்வாறு வர நேர்ந்தது.
கொழும்பு தொட்டு நீர் கொழும்பு வரையான பிரதான பாதைகளில் தமிழருடைய கடைகள் எரிக்கப்பட்டதும். அநுராதபுரம் அதிகம் அழிவைச் சந்தித்தும் சாட்சியாக நின்று எங்களை வழியனுப்பியது.
வீடு வந்த போது ஒருவித மகிழ்ச்சிதான். ஆனால் ஆடிக் கலவரம் ஏற்படுத்திய பாதிப்பு மட்டும் மனங்களில் ஆழமாக நின்றது. வீடு வந்தது போதுதான் தெரிய வந்தது எனது உறவினர் பலர் தென்னிலங்கையில் கொல்
லப்பட்டமை. 25 வருடங்களை கடந்தும் அந்த நினைவுகள் இன்னுமிருக்கின்றன நீறுபுத்த நெருப்பாய். இப்போது அவை விடுதலை தொடர்பான ஓர்மத்தையும் வளர்த்து விட்டுள்ளன.
ஈழமுரசு(24.07.09)
Comments