சிறிலங்காவின் போர் குற்றவாளிகள் மீது ஜனநாயாக நாடுகளிலும், சர்வதேச நீதி மன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்
இந்த அடிப்படையில், தமிழ் மக்களின் தாயாக பூமியான வடக்கு கிழங்கு பிதேசங்களின் தற்போதைய யாதார்தம் என்னவேனில் - சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலை புலிகள் மீது ஓர் இராணுவ வெற்றியை அடைந்துள்ளது. சிறிலங்கா அரசும், தெற்கில் உள்ள பெரும்பான்மையான மக்களும், இவ் இராணுவ வெற்றியை “பயங்கரவாதத்தின் மீதான” வெற்றியாக தீவு முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளில் கொண்டாடுகிறார்கள். இவை மட்டுமல்லாது சில வெளிநாட்டு அரசாங்கங்களும், அமைப்புக்களும், ஓரு சில தனி நபர்களும் இவ் சிறிலங்கா அரசின் வெற்றியை “பயங்கரவாதத்தின் மீதான” வெற்றியாகவே கருதுகின்றனர்.
இங்கு முக்கியமான வினா என்னவெனில், வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்கள், புலம் பெயர்ந்து வாழ் தமிழ் மக்கள் அல்லது பொதுவாக சர்வதேச ரீதியாக வாழும் தமிழ் மக்கள், இவ் சிறிலங்கா அரசின் வெற்றியை என்ன கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதை, நாம் யாதர்த்த ரீதியாக ஆராய்வது மிக அவசியம்;. காரணம், தற்போதைய நிலையில், சிறிலங்கா அரசினால் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் உண்மைக்கும், சரித்திரத்திற்கும் பிறம்பான தமிழ் மக்களின் யாதார்த் நிலையை பற்றிய பரப்புரைகள், நிரந்தரமாக இல்லாவிடில் தற்காலிகமாக தன்னும் மற்றைய இனத்தவர்கள் தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது என்பதுவே முக்கியம்.
விடுதலைப் புலிகளின் உதயம்
வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் 1970ம் ஆண்டின் முற்பகுதியில் எப்படியாக உதயமானர்கள் என்பதை நாம் யாதர்த்த ரீதியாக ஆராயும் பொழுது - இவர்கள் தமிழ் மக்கள் மீது சிங்கள அடக்கு முறையாளரினால் மேற்கொள்ளப்பட்ட பல இனக்கலவரங்கள், வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களுடனான பௌத்த மாத வலோத்கார புகுத்தல்;, தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முப்பதைந்து ஆண்டுக்கால சாத்வீகப் போராட்டங்கள் வன்முறையில் அடக்கப்பட்டு தமிழ் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைச்சாத்தான ஓப்பந்தங்கள் கீழித்தெறியப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டது போன்ற பல இருளியல் சம்பவங்களின் சாம்பலிருந்தே உதயமானார்கள் என்பது மறுக்க முடியாத சரித்திரம்.
இந்த அடிப்படையில் உதயமான தமிழீழ விடுதலைப் புலிகள் பல தவறுகளை செய்தார்களென குற்றச்சாட்டப்பட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் இவர்களே தாம் சில தவறுகளை செய்துள்ளதாக ஓப்புக்கொண்டுள்ள அதேவேளை, காலப் போக்கில் பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவுடன் வடக்கு கிழக்கில் ஏறக்குறைய எண்பது வீதமான பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை தமது நிர்வாகத்தின் கீழ், ஓர் அரசிற்குரிய கட்டமைப்புகளுடன் கடந்த மே மாதம் 18ம் திகதி வரை நடத்தியுள்ளார்கள் என்பதும் சரித்திரம்.
இவ்வேளையில் மாறுபட்ட சிறிலங்க அரசுகள,; தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பல உடன்படிக்கைகள் செய்தும், பேச்சுவார்த்தகைகள் நடத்தியும், போரையும் மேற்கொண்டார்கள். அதேவேளை, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் - கைது, கொலை, காணமல்போதல், பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுதல் போன்ற கொடூரமான சம்பவங்களுடன், தமிழ் மக்களது குடிமனைகள, பாடசாலைகள, கோயில்கள், தேவலயங்கள் போன்றவையும் அழிக்கப்பட்டன.
இப்படியான கொடூரச் சம்பவங்களை தமிழ் மக்கள் மீது இலங்கைதீவில் மேற்கொண்ட சிங்கள அரசுகள், சர்வதேச ரீதியான தமது பரப்புரையின் போது, ஓவ்வொரு அரசுகளும் தமக்கு முன்பு ஆட்சியிலிருந்த அரசுகள, தமிழ் மக்களுக்கு பெரும் தீங்கு செய்துள்ளார்கள் என்ற ஓர் அனுதாபக் குரலில் தமது பரப்புரைகளை மிகப் புத்திசாலீத்தனமாக மேற்கொண்டார்கள். ஆனால் யாவரும் இறுதியில் உள்நாட்டில் ஓர் பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தையே தாம் மேற்கொள்வதாக கூறத்தவறவில்லை. இக் கபடத்தனமான பரப்புரையை ஏற்றுக்கொண்ட சில பலம் வாய்ந்த அரசுகள், இலங்கை தீவில் தமிழ் மக்களின் சோகச் சரித்திரத்தை கவனத்தில் கொள்ளாது தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்தார்கள்.
இதில் முக்கிய விடயம் என்னவெனில், சிங்கள அரசுகளின் கபடத்தனமான பரப்புரையை ஏற்க மறுத்த சில ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் திருமதி கொண்டலீசா றயிஸ் போன்ற செல்வாக்குபெற்ற அதிகாரிகள் மூலம் அளுத்தங்கள் கொடுக்கப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பியா யூனியானல் 2007ம் ஆண்டில் தடைசெய்ய வைத்தார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறக்குறைய நான்கு சிறிலங்காவின் ஜனதிபதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர் - ஜனதிபதி ஜே. ஆர். ஜெயவார்தனா (1986), ஜனதிபதி ரணசிங்கா பிறேமதாசா (1989), பிரதமரும் பின்னர் ஜனதிபதியுமான சந்திரிக்கா குமரதுங்கா (1994), ஜனதிபதி மகிந்த ராஜபக்ஷா (2005).
இவ் நான்கு ஜனதிபதிகளுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த கட்டங்களில,; தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் யாவும், “சிங்களத் தலைவர்கள் யாரும், தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைகளையோ அரசியல் அபிலசைககளையோ பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளவில்லை” எனக் கூறியிருந்தார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் இக் கூற்றை, பெரும்பான்மையான வெளிநாட்டு அரசாங்கங்கள் ஏற்க தயங்கியதற்கு பல யாதர்த்த ரீதியான உண்மைகள் உறங்கிக்கிடந்தன. முக்கியமாக, கடற்படை, ஆகாயப்படை போன்றவற்றை உள்ளடக்கிய மிக பலம் பொருந்திய இராணுவ கட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளி;கள் கொண்டிருந்தமையும், வல்லாரசுகளின் கற்பனைக்கு அப்பாற்பட்ட பாரீய இராணுவ வெற்றிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்தமையும் காரணிகளாகும்.
உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளி;கள் அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போது ஏதும் கபடத்தனமான திட்டங்களை கொண்டிருந்தால் - ஒன்று அல்லா அடுத்தடுத்து நான்கு சிறிலங்காவின் ஜனதிபதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளி;களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்க மாட்டார்கள்.
தேசிய அரசு போன்று காட்சி
எது எப்படியானலும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த கட்டங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறியது போல், சிறிலங்கா அரசு வேறுபட்ட வெளிநாட்டு அரசுகளின் உதவியுடன், இன்று ஓர் இராணுவ ரீதியான வெற்றியை அடைந்துள்ளது. தற்போதைய அரசில் அங்கம் வாகிக்கும் ஐக்கிய தேசிய காட்சியின் முன்னாள் முக்கிய உறுப்பினர்களும் அமைச்சர்களும், ஜே.வி.பி, ஜதிகாகல, சம சமஜ கட்சியின் ஒரு பகுதியினர், சில தமிழ் குழுக்களின் நியமன பிரதிநிதிகள் சேர்ந்து ஒத்துமொத்தமாக சிறிலங்காவில் ஓர் தேசிய அரசாங்கம் உள்ளது போன்ற காட்சி வெளி உலகிற்கு காட்டப்படுகிறது. ஐக்கிய தேசிய காட்சி, ஜே.வி.பியின் அரசுடனான உறவு சர்வதேசத்தை திருப்தி படுத்துவம் அடிப்படையில் ஓர் நாடகம் போன்று நட்பும் பகைமையும் தினமும் மறுகின்றன.
மாறுபட்ட சிங்கள அரசுகளின் மிகச் சுருக்கமான சிந்தந்தம் என்னவெனில், தமிழ் மக்களுக்கு தாயாகபூமி என்று ஒன்று இல்லை, வடக்கு கிழக்கு யாவும் சிங்களமாயப்படுத்தப்பட வேண்டுமென்பதே. தற்போதைய அரசும் இதன் அடிப்படையிலேயே தமது காய்களை நகர்த்துகின்றது என்பது தெட்டத் தெளிவான உண்மை. பழைய கால கசப்பான நிகழ்வுகளின் அடிப்படையில் இவர்கள் யாரும் எதையும் தமிழ் மக்களுக்கு ஏதும் உருப்படியாக செய்ய எண்ணுவதாக தென்படவில்லை.
இந்த அடிப்படையில் இராணுவ வெற்றியை கொண்டாடும் தற்போதைய அரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதுவாக பெரும்பான்மையனா தமிழ் மக்களின் பகைமையை சம்பாதித்துள்ளதே தவிர, எந்தவித நட்பையும் சம்பதிக்கவில்லையென்பதற்கு பல உதரணங்கள் உள்ளன. தற்போது தெற்கில் கதாநாயகர்களாக திகழும் ஜனதிபதியும் குடும்பத்தினரும், நண்பர்களும் அடுத்துவரும் ஆட்சியாளர்களினால், இவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் தமிழ் மக்களிடையேயான நட்புக்கும் பெரும் தீங்கு விளைவித்த பிராஜைகளாக வர்ணிக்கப்படலாம்.
அவ்வேளையில் அடுத்து ஆட்சிக்கு வரும் சிங்கள அரசு தனது சர்வதேச ரீதியான பரப்புரையின் போது, முன்பு ஆட்சியிலிருந்த மகிந்த ராஜப்ஷா அரசு தமிழ் மக்களுக்கு பெரும் தீங்கு செய்துள்ளார்கள் என்றும், தமது புதிய அரசு தமிழ் மக்களின் பிரச்சனையை அனுதாபத்துடன் அனுகப்போவதாக கூறி தமிழ் மக்களை தொடர்ந்து பகடை காய்களாக பாவிக்கப்பார்கள். தமிழ் மக்களின் சோகச் சரித்திரத்திரம் இலங்கை தீவில் தொடரும் அதேவேளை, தற்போது நடைபெற்று முடிந்த யுத்தத்தின் மூலம்; சிறிலங்கா எதிர்காலத்தில் மிக மோசமான அரசியல் பொருளாதர பிரச்சனைகளுக்கு வித்திட்டுள்ளது என்பதே யாதார்த்த உண்மை.
ஆர்மேனிய மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பு
இன்று நடைபெற்று முடிந்த யுத்தத்தின் போர் குற்றங்களிலிருந்து பலர் தற்பொழுது தற்காலிகமாக தப்பிவிடலாம், ஆனால் சரித்திரத்தை ஆராயும் பொழுது, போர் குற்றங்களை புரிந்தவர்கள் யாரும் உலகில் தண்டனையிலிருந்து தப்பியதாக இல்லை. இதற்கு நல்ல உதாரணமாக, துருக்கியில் ஓட்டமன் ஆட்சிக் காலத்தில் (1915-1917) நடைபெற்ற ஆர்மேனிய மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பு அமைகிறது. ஆர்மேனிய மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பை உலக நாடுகள் ஏற்கப்படதென வருடக் கணக்கில் துருக்கி கடும் பிரச்சாரம் செய்து வந்த பொழுதிலும், பல ஆண்டுகளின் பின்னர், பெரும்பான்மையான உலக நாடுகள் - துருக்கி ஆர்மேனிய மக்கள் மீது இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டார்கள் என்ற முடிவை ஏற்றுக்கொணடது மட்டுமல்லாது, இவ் இனச் சுத்திகரிப்பை மறுத்த துருக்கியர் சிலரையும் வெளிநாடு ஒன்றில் நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனையும் வழங்கினர்
ஆகையால் அரசாங்கங்கள் தமது வெளிநாட்டு கொள்கைகளில் மற்றங்களை கொண்டுவரும் வேளைகளில், ஓர் இனச் சுத்திகரிப்பை மேற்கொண்ட நாடு, காப்பாற்றப்பட்ட நாடுகளினாலேயே அவர்களே மீது இனச் சுத்திகரிப்பை மேற்கொண்ட குற்றத்திற்காக நடவடிக்கை எடுப்பதற்கு முன்வருவார்கள் உதவுவார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
ஜனநாயாக நாடுகளில் வழக்கு தாக்கல்
ஜனதிபதி சந்திரிக்கா குமரதுங்கா 1990ன் இறுதியதியில் ஓல்லாந்திற்கு விஜயம் செய்திருந்த வேளையில்;, அங்கு ஒரு வழங்கறிஞர்;, அவ்வேளையில் சிறிலங்காவில் தமிழ் மக்கள் மீது நடைபெற்றுக் கொண்டிருந்த இனச் சுத்திகரிப்பை எதிராக ஜனதிபதி சந்திரிக்கா குமரதுங்கா மீது வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். துர்அதிஷ்டவசமாக இவ் வழக்கு நீதிபதியினால் சாட்சியம் போதாது என்ற காரணத்திற்காக நிரகாரிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனதிபதி சந்திரிக்கா குமரதுங்கா தனது பயணத்தை ஓல்லாந்திலிருந்து தொடர முடிந்தது. அவ்வேளையில் போதிய சாhட்சிகள் இருந்திருக்குமேயனால், இன்று சிறிலங்காவின் சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் தற்பொழுது இலங்கைதீவில் தமிழ் மக்கள் மீது நடந்தேறிய இனச் சுத்திகரிப்புக்கு சாட்சியங்கள் பெருமளவில் உள்ளன. எதிர்காலத்தில் இப்படியான வழக்குகள் தாக்குதல் செய்யப்படும் வேளையில், சாட்சியங்கள் போதமை என்ற பேச்சிற்கே இடமிராது.
புலம் பெயர்வாழ் தமிழ் மக்கள் தாம் இளைத்த போர் குற்றங்களுக்கு மேற்கு நாடுகளில் பரிகாரம் காண முற்பட்டுவிடுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, முன்கூட்டியே புலம் பெயர்வாழ் தமிழ் மக்களின் வாய்களை மூடவும், செயற்பாடுகளை கட்டுப்படுதவும,;; சிறிலங்காவின் வெளிநாட்டு தூதுவர்கள,; இவர்கள்; மீதான வேறுவிதப்பட்ட மிரட்டல்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர்.
யாரும் இவ் மிரட்டல்களுக்கு அஞ்சாது, தாம் வாழும் ஜனநாயாக நாடுகளிற்கு சிறிலங்காவின் போர் குற்றவழிகள் விஜயம் செய்யும் வேளைகளில,; இவர்கள் மீது அவ் நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைய, அங்குள்ள நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய தாயாராக வேண்டும். இதற்கு அந்த நாடுகளில் உள்ள வழங்கறிஞர்களுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்தி, தேவையான சாட்சியங்கள் ஆவணங்களை தயார் செய்ய வேண்டும்.
இவ் வழக்கு தாக்கல் சிறிலங்காவில் இராணுவ கட்டமைப்புடன் தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமல்லாது, சிறிலங்காவின் தூதுவர்கள் தவிர்ந்த அனைந்து அரச பிரதிநிதிகளுக்கும் ஜனநாயாக நாடுகளில் அவ் நாட்டுச் சட்டங்களை பொறுத்து வழக்கு தாக்கல் செய்ய முடியும். இதே போன்று சர்வதேச நீதி மன்றங்களிலும் இவர்கள் மீதான வழக்கு தாக்கல் உரியவர்கள் மேற்கொள்வதற்கு புலம் பெயர்வாழ் தமிழ் மக்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும்.
தமிழ் மக்கள் சமனாக நடந்தப்படவில்லை
ஆகையால், நாம் யதார்த்த ரீதியாக பார்க்கும்பொழுது – தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தற்கலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, மிக மோசமான அழிவுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது. இப்போராட்டத்தை ஆதரித்த பெரும்பான்மையான மக்கள் - கிற்லரின் வதை முகம்கள் போன்ற முகாம்களிலும்;@ போரட்டத்தை முன்னின்று நடத்திய போரளிகள் பலர் கொல்லப்பட்டும், காணமல் போயும், பெரும்பான்மையானோர் பாதுகாப்பு படைகளின் விசாரணையிலும் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்
கடந்த ஆறு சகப்தங்களாக தமது அரசியல் உரிமைக்காக போரடிய மக்களில் பெரும்பான்மையானோர், அகதி முகமென கூறப்படும் வதை முகாம்களில் வர்ணிக்க முடியாத கஷ்டங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கொலை, காணமல் போதல், பலியல் வன்முறைகள் யாவும் தினமும் அங்கு ஓர் சாதரண சம்பவமாக உள்ளது. காயப்பட்டோரும் முதியோரும் இறப்பின் விழிம்பிலும், உணவு, மருந்து, தரிப்பிட வசதிகள் யாவும் மிக மோசமாக அங்கு காணப்படுகிறது. அத்துடன் சிறுபிள்ளைகள் கல்வியின்றி இராணுவ சிற்பாய்களின் துன்புறுத்தலுக்கு ஆழகியுள்ளனர்.
அங்கு எந்த சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளோ, சுதந்திர ஊடகவியலாளர்களோ அரசினால் அனுமதிக்கபடவில்லை. இவர்களது மீள் குடீயேற்றம் என்பது தற்பொழுது பகற் கனவாகவுள்ளது. கண்ணிவெடி அகற்றுதல் என்ற சாட்டுபோக்கு சொல்லி – சிங்கள மயப்படுத்தலும், புத்தர் சிலைகளும் அங்காங்கே நிறுவப்படுகிறது.
சிறிலங்கா அரசு உண்மையில் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் யாதர்த்த ரீதியாக சமனாக நடத்தவில்லையென்பதற்கு அகதி முகமென கூறப்படும் வதை முகாம்கள் நல்ல உதரணமாக அமைகிறது. காரணம், இன்று எப்படியாக தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க முற்பட்டார்களோ, இதே போன்று தெற்கில,; ஜே.வி.பி என்ற சிங்கள மிதவாத அமைப்பை 1989ம் ஆண்டு சிறிலங்கா அரசு அழித்தது. அவ்வேளையில் அங்கு எந்த சிங்கள மக்களும் இடம்பெயரவுமில்லை, முகாம்களில் அடைபடவுமில்லை. ஆனால் இங்கு தமிழ் மக்கள் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் அகதி முகமென கூறப்படும் வதை முகாம்களில் மிருகங்கள் போல் அடைக்கப்பட்டு மிக கொடூமைப்படுத்தப்படுகின்றனர்.
முன்பு “தமிழ் மக்கள் தான் விடுதலைப் புலிகள், விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்கள்” என்ற கூற்றை ஏற்க மறுத்த சிங்கள அரசு, தற்பொழுது இக்கூற்றை யாதார்த்த ரீதியாக ஏற்று, வதைமுகம்களில் உள்ள மக்களை கடும் விசாரணக்கும் கண்கணிப்புக்கு ஆழக்கியுள்ளது. காரணம் இம் மக்கள் யாவரும் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்ற ஓரே காரணத்திற்காகவே.
ஜனதிபதி உரையும் அரசியல் தீர்வும்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஓர் இராணுவ வெற்றியை மேற்கொண்ட சிறிலங்காவின் ஜனதிபதி, கடந்த மே மாதம் 19ம் திகதி பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையில்; இரு முக்கிய செய்தியை மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளார். ஓன்று, “சிறிலங்காவில் இனிமேல் - தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலே என்று ஒரு சிறுபான்மை இனம் இல்லை”;;;. அடுத்து கூறுகிறார் “இந்நாட்டில் இரு மக்களே உள்ளனர் - நாட்டை நேசிப்பவர்கள், நாட்டை நேசிக்கதோர்”;.
ஜனதிபதியின் உரையில் மிக ஆழமான செய்தி உள்ளதை நாம் இங்கு அவதானிக்ககூடியதாகவுள்ளது. ஓன்று, “எதிர்காலத்தில் சிறிலங்காவில் யாவரும் சிங்களவர்”; மற்றையது “நாட்டை நேசியாதோர் - அதாவது துரோகிகள்”;. ஜனதிபதி மே 19ம் திகதியே இப்படியாக உரையாற்றுவரானால், எதிர்காலத்தில் இவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன அரசியல் தீர்வை முன் வைக்கப்போகிறர்கள் என்பதை நாம் இங்கு அவதானிக்க முடிகிறது.
அரசியல் தீர்வு பற்றி, ஜனதிபதி பதவி ஏற்ற காலத்திலிருந்து கூறியவை பின்வருமாறு : பதவி ஏற்றதும், இராணுவ நடவடிக்கை முற்றுப் பெற்றதும் உடன் அரசியல் தீர்வு முன் வைக்கபடும் என்றார். பின்னர் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத் திட்டம் தாயராகவுள்ள நிலையில் உள்ளது என்றார், இராணுவ வெற்றியின் பின்னர் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு கைவிடப்பட்டு, அரசியல் தீர்வுடன் எந்த தொடர்பும் அற்ற ‘அபிவிருத்தியும் ஓருமைப்பாடும்’ என்ற ஓர் புதிய குழுவை தற்பொழுது உருவாக்கியுள்ளதுடன், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு ஓர் புதிய ஆணை மக்களிடமிருந்து பெறப்படவேண்டும் என்கிறார். அதற்கு ஜனதிபதி தனது பதவியின் இரண்டாவது தவணையே உகந்தது என்கிறார். இதேவேளை 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்பாவில் ஆற்றிய உரை ஒன்றில், “இனப் பிரச்சனை என்று ஒன்று சிறிலங்காவில் இல்லை” என்றும் கூறியுள்ளார்.
மாறுபட்ட சிங்கள அரசுகள், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு அபிலாசைகளுக்கும் தீர்வு காணுவதைவிட, இதை தவிர்த்து கொள்வதற்காக கூறும் சாட்டுப் போக்குகளே அதிகம். கடந்த மூன்று சாகப்தங்களாக சிறிலங்கா அரசிற்கு சமானாக இருந்து, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும் அபிலாசைக்கும் பேரம் பேசிய தமிழீழ விடுதலைப் புலிகள் தற்பொழுது வடக்கு கிழக்கில் இல்லாத இவ் நிலையில், சிறிலங்கா அரசிற்கு சமானாக நின்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக பேரம் பேச யாரும் இல்லாத நிலையில் அரசு ஏன் இவ் விடயத்தில் அக்கறை கொள்ளப் போகிறார்கள்? இவ் வேளையில் தன்னும் வெளிநாட்டு அரசாங்கங்கள் சிறிலங்காவின் கபடத் தன்மையை புரிந்து, தமிழ் மக்களுக்கு உதவ முன் வருவார்களா?
ச. வி. கிருபாகரன்
பொதுச் செயலாளர்
தமிழர் மனித உரிமைகள் மையம்
பிரான்ஸ்
Comments