புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கையில் இராணுவ ரீதியாக ழுமையாகத் தோற்கடித்து விட்டதாக அரசாங்கம் சொல்கிறது. ஆனால் அவர்கள் மீண்டும் தலையெடுத்து விடுவார்களோ என்ற பயம் அரசாங்கத்துக்கு இன்னம் இல்லாமல் போகவில்லை.

விடுதலைப் புலிகளால் மீண்டும் இலங்கைக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என சிங்கப்பூல் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அரசியல் வன்றை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச

மையத்தின் தலைவரான ரொஹான் குணரட்ண எச்சத்துள்ளார்.

"விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தவாறு ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளுடன் இலங்கை அரசு தொடர்பு கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தாத வரையில், இலங்கைக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்க்க டியாது' என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் "விடுதலைப் புலிகள் ழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூற முடியாது. அவர்கள் மீளவும் தலையெடுக்க மாட்டார்கள் என்று கூறவும் டியாது' என்று தெவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் பற்றிய இத்தகைய தகவல்களின் மத்தியில் அரசாங்கத்துக்கு அச்சத்தைக் கொடுக்கும் வகையிலான ஓர் அறிக்கை கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக இருந்து வந்த நெருக்கடி நிலை தீர்ந்து, புதிய தொரு கட்டமைப்பு அவர்களால் உருவாக்கப் பட் டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் அறிக் கையே அது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போன் போது நந்திக்கடலின் வடக்குப் புறம் வழியாகத் தப்பிச் செல்ல முயன்றபோது, புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படையினருடனான மோதலில் கொல்லப்பட்டிருந்தார்.

அவரது உடலைக் கைப்பற்றிய படையினர் அதை பின்னர் எரித்து விட்டனர். ஆனால் அது பிரபாகரனின் உடல் அல்ல, அவர் இன்னம் உயிரோடு தான் இருக்கிறார் என்று புலிகளின் வெளிநாட்டுக் கிளை அலுவலகங்கள் பிரசாரம் செய்து வந்தன. புலிகளின் வெளிநாட்டுக் கிளை அலுவலகங்கள் புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மணிவண்ணன் அல்லது கஸ்ரோ என்பவன் கட்டுப்பாட்டில் இருந்தன. அதேவேளை பிரபாகரனால் கடந்த ஜனவ மாதம் நியமிக்கப்பட்ட வெளிவிவகார செயலகத்தின் பணிப்பாளரான கே.பி எனப்படும் செல்வராஜா பத்மநாதன் பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதை மே 22ஆம் திகதியே அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவின.
இருதரப்பும் அறிக்கைகள் வாயிலாகவும், கட்டுரைகள் வடிவிலும் இணையங்களிலும் பத்திகைகளிலும் மோதி வந்தன.

இதன் ஒரு கட்டமாக கே.பி.யை துரோகி என்று கூட மறுதரப்பு வர்ணித்தது. ஆனால் அவரே கடைசி வரைக்கும் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகப் புலிகள் இயக்கத்தால் பிரபாகரனின் மரணம் பற்றிய உறுதியான டிவை அறிவிக்க முடியாது போனதுடன், அதுபற்றி வெளியிடப்பட்ட சில அறிக்கைகளின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளும் எழுப்பப்பட்டன.

இந்த நெருக்கடியின் காரணமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்மக்களிடத்தில் இருந்து போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை உருவானது. புலிகள் இயக்கத்துக்குள் இருந்து வந்த இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பெரும் யற்சிகளில் பல்வேறு தரப்புகளும் ஈடுபட்டதாகத் தெகிறது.

இதையடுத்து கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையை நிறைவேற்றுச் செயற்குழுவின் சார்பாக சுரேஷ் (அதன்) மற்றும் ராம் ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.

புலிகளின் அம்பாறை கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் ராம் மற்றும் தயாமோகன் போன்றோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், நிறைவேற்றுச் செயற்குழுவின் சார்பில் அவர் அறிக்கை வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த அறிக்கையில் புலிகள் இயக்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை கே.பி எனப்படும் செல்வராஜா பத்மநாதன் வழிநடத்துவார் என்றும், புதிதாக ஒரு தலைமைச்செயலகம் நிறுவப்பட்டிருப்பதோடு துறைசார் பிவுகளும் உருவாக்கப்பட்டிருப்பதாக தெவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கம் மீளவும் புதிய கட்டமைப்புகளை உருவாக்கிச் செயற்பட ஆரம்பித்திருப்பதான இந்த நகர்வு இலங்கை அரசாங்கத்துக்கு நிச்சயம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

காரணம் புலிகள் இயக்கம் இலங்கையில் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் வெளிநாடுகளில் இரண்டுபட்டிருந்ததை இலங்கை அரசு வெகுவாக ரசித்தது. தனது தலைவலி தீர்ந்து விட்டதாகவும் நம்பியிருந்தது.

இப்போது அவர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கின்ற இந்த இணக்கத்தினால், அரசாங்கத்துக்கு எதிரான நகர்வுகளில் அவர்கள் இறங்குவார்கள் என்றே தெகிறது.

புலிகள் எந்த வடிவில் அரசாங்கத்துக்கு தொல்லை கொடுக்கப் போகிறார்கள் என்பது தான் கேள்வியாக இருக்கிறது.

தாம் இனிமேல் ஆயுதப்போராட்டத்தில் இறங்குவதில்லை என்பதை இந்த அறிக்கையில் மீளவும் புலிகள் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதுடன் அரசியல் வழியில் ,இராஜதந்திர வழிகளில் போராடப் போவதாகக் கூறியுள்ளனர்.

இது தான் அரசாங்கத்துக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது.

ஆயுதப்போர் என்றால் அதைச் சமாளிக்க அரசுக்குப் போதிய படைப்பலம் இருக்கிறது.

ஆனால் புலிகள் அரசியல் வழியிலோ இராஜதந்திர வழியிலோ எப்படி அணுகப் போகிறார்கள், அதன் தாக்கம் எத்தகையதாக இருக்கும் என்பதை அனுமானிக்க முடியாதிருக்கிறது.

அதேவேளை அரசாங்கமோ கே.பியை எப்படியாவது பிடித்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

அவரைக் கைது செய்ய உதவுமாறு பல்வேறு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தும் வருகிறது.

அத்துடன் புலிகளை ஒடுக்குதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. "இராணுவ தியாக இலங்கையில் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளில் அவர்களின் செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருகின்றன.

புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை அழித்தொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்காவிட்டால் நிலைமை பாரதூரமாக மாறக் கூடும். ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் வம்சாவளியினர் மீது ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்' என்று கோக்கை விடுத்திருக்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆயசிங்க.

அதுமட்டுமன்றி கே.பி.யைக் கைது செய்ய இன்ரபோல் மூலம் விடுக்கப்பட்ட பிடியாணையை மீளவும் நினைவூட்டிக் கொள்ளும் பிரசாரத்திலும் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

எனினும் கே.பி. தற்போது வெளிநாடுகள் பலவற்றுடன் தொடர்பில் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகின்றன. அதாவது புலிகள் ஆயுதங்க ளைக் கைவிட்டு அரசியல் வழியில் போராடப் போவதாக அறிவித்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேசம் எப்படிக்கையாளும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமெக்கா அண்மையில் கூடப் புலிகள் மீதான தடையை நீடித்திருந்தது. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைகளும் நீடிக்கின்றன.
கனடாவும் தடையைத் தொடர்கிறது.

இந்த நிலையில் புலிகளின் எதிர்காலம் என்பது தனியே வெளியுலகோடு மட்டுப்படுத்தப்படுமா அல்லது அவர்கள் அரசியல் வழியில் செயற்பட இலங்கையில் இடமளிக்கப்படுமா என்பதெல்லாம் தற்போதைக்கு மர்மம் நிறைந்த கேள்விகளாகவே உள்ளன.

இரண்டு ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்திய பின்னரும் அரசியல் வழியில் செயற்பட ஜே.வி.பி.க்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று புலிகளுக்கு அரசியல் வழியில் செயற்பட வாய்ப்பளிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெயவில்லை.

முப்பதாண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட, அவர்களால் ஆதக்கப்பட்ட இயக்கம் என்ற வகையில் புலிகளின் அரசியல் வழிச் செயற்பாடுகளுக்கு அனுமதி கொடுக்க அரசாங்கம் தயக்கம் காட்டவே செய்யும்.

ஆனால் அது சரியான முடிவாக இருக்குமா என்பதைக் காலப்போக்கிலேயே உணர்ந்து கொள்ளடியும். அதேவேளை புலிகளை இலகுவாக அழித்து விடுவதோ மக்களிடத்தில் இருந்து மறக்கச் செய்து விடுவதோ சுலபமான காயமாக இருக்காது

நன்றி:வீரகேசரி

Comments

Anonymous said…
//அதேவேளை அரசாங்கமோ கே.பியை எப்படியாவது பிடித்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.//

I pray god to send this SOB to hell. He cheated thalaivar. I know abt him very well. I am waiting to stone this bastard.

he is a betrayer.

P.S:- Hope you wont cowardly remove my comment.