உலக வரலாற்றில் விடுதலைப் போராட்டத்தில் புதிய அத்தியாயங்களை எழுதிய இயக்கம் – விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை உலக நாடுகளின் பல்வேறு விடுதலைப் போராளிகள் இயக்கங்களே பெருமையுடன் கூறுகின்றன. உலகத்தின் எந்த ஒரு நாட்டின் ஆதரவுமின்றி – எந்த ஒரு நாட்டின் உதவியை எதிர்பாராமல் தங்களுக்கான ராணுவ கட்டமைப்புகளை அவர்களே உருவாக்கிக் கொண்டு தங்களது சுய சார்பில் உறுதியாக நின்றார்கள். தெற்காசியப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் உரிமை கோருவதற்கு 47 நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு நிற்கும் போது ஒரு போராளி இயக்கம் கடற்பரப்பின் ஒரு பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்ததை எந்த ஒரு ‘அரசும்’ – ஏற்கத் தயாராக இல்லை. உலகில் விமானப் படை வைத்திருந்த ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் தான். அந்த விமானப் படையின் செயலாற்றலை முறியடித்திட துடித்த இந்திய பார்ப்பனிய ஆட்சி, ஓடோடிச் சென்று – ராடார் கருவிகளையும், அதனை இயக்கும் தொழில்நுட்ப வியலாளர்களையும் இனப்படுகொலை நடத்தும் சிங்களப் பேரினவாத ஆட்சிக்கு வழங்கி உதவியது இந்தியப் பார்ப்பனிய ஆட்சி.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வலிமையான ராணுவ கட்டமைப்பும் எந்த ஒரு நாட்டையும் சார்ந்திடாத சுயசார்பும் தான் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விட்டது. தமிழர்க ளாகிய நாம் – இதில் பெருமையடைந்தோம்; உணர்வு பெற்றோம்; உதவிட துடித்தோம்; இயக்கங்கள் நடத்தினோம்; இந்திய அரசே, இனப் படுகொலைக்கு துணை போகாதே என்று போராடினோம்.
ஆனால், இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி – தமிழர்களின் குரலை திரும்பிப் பார்க்கக்கூட தயாராக இல்லை.
நம்மை – இந்தியா அந்நியர்களாகவே கருதியது. நாமும் இந்தியக் குடிமக்கள் என்பதை இந்திய தேசிய ஆட்சி அங்கீகரிக்கத் தயாராக இல்லை.
நம்முடைய உணர்வுகளை அவமதித்தது; புறக்கணித்தது. இந்த அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் அங்கீகாரம் தேடித் தரவே தி.மு.க.வும் அதனுடன் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகளும் முயற்சித்தன. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்த அதே நேரத்தில் ஈழத்தில் தமிழினம் இருந்த பகுதி கொலைக்களமாகியது. இங்கே தேர்தல் முடிவுகள் துரோக காங்கிரசுக்கும் அதன் கூட்டணிகளுக்கும் வெற்றிகளை அறிவித்த அதே காலகட்டத்தில் அங்கே தமிழினப் படு கொலையை நடத்தி முடித்த சிங்களம் வெற்றிப் பரணி பாடியது. காலம் உள்ளவரை இந்த இனத்துரோகத்தை அதற்கு துணை நின்ற சக்திகளை வரலாறு மன்னிக்கவே போவதில்லை. எல்லாமுமே முடிந்துவிட்டது. இப்போது என்ன நிலைமை? மறந்து விடாதீர்கள்!
இனத்துக்கான விடுதலைப் போராட்டம் எப்போதுமே ஓய்ந்துவிடாது. விடுதலைப் போராட்டத்துக்கான நியாயங்கள் உயிர்த்துடிப்புடன் இருக்கும்வரை, விடுதலைப் போராட்டமும் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும். அணுகுமுறைகள் மாறலாம் போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் – இலக்கு நோக்கிய பயணம் மாறாது.
இப்போது ஆயுதப் போராட்டம் அங்கே தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டது. உண்மைதான். ஆனால், ஆயுதப் போராட்டத்தின் விளைவால் மேலெழுந்த அரசியல் – அரசில் நகர்வை நோக்கி நகர்த்தக்கூடிய சூழலை, அதற்கான அடித்தளத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை தங்களது நிர்வாகப் பகுதியாக விடுதலைப்புலிகள் இயக்கம் – மக்கள் பேராதரவோடு வைத்திருந்த காலத்தில்கூட சர்வதேசத்தின் அரசியல் கவனம் ஈழப் பிரச்சினையில் திரும்பவில்லை. அய்.நா.மன்றத்தின் விவாதத்துக்கும் உள்ளாக்கப்படவில்லை.
ஆனால், எல்லாவற்றையும் இழந்த நிலையில் அய்.நா.வில் ஈழத் தமிழர் பிரச்சினை விவாதத்துக்கு வந்துவிட்டது. உலக நாடுகள் சிங்களத்தின் மனித இனப்படுகொலையைக் கண்டிக்கத் தொடங்கி விட்டன. மேற்கு உலக நாடுகள் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களத்தை வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இடதுசாரி கொள்கையாளர்களாக நாம் மதித்த நாடுகள் – கியூபாவானாலும், சீனாவானாலும் அவை எல்லாம் இந்தியா, பாகிஸ்தானோடு கைகோர்த்துக் கொண்டு இனப்படுகொலை நடத்தும் சிங்களத்துக்கு ஆதரவாகவே நிற்கும் அவலத்தைப் பார்க்கிறோம்.
இந்த நிலையில் நல்ல சேதிகள் வருகின்றன. உலகம் முழுதும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வலிமையோடு ஒன்று திரளத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் ஈழத்துக்கு ஆதரவான அமைப்புகள் வலிமையான கட்டமைப்புகளோடு செயல்பட்டு வருகின்றன.
அந்தந்த நாடுகளில் இயங்கிய தலைமையகங்கள் தமிழ் ஈழத்துக்கான தூதரகங்களாகவே கருதப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் மீது இப்போது ஒரு வரலாற்றுக் கடமை சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் ஈழ லட்சியத்தை நகர்த்திச் செல்லக்கூடிய வரலாற்றுக்கடமையை, முன்னெடுத்தாக வேண்டும்.
தோழர்களே! தமிழ் ஈழ தேசியத் தலைவர், வரலாற்று நாயகன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?இல்லையா என்ற வாதத்துக்குள் நம்மை முடக்கி கொண்டு விடக்கூடாது.
இதில் நாம் எச்சரிக்கையாக விழிப்புடன் செயலாற்ற வேண்டிய தருணம் இது.அந்த வாதங்களின் வலைகளுக்குள் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும் என்பதே. இந்திய சிங்கள உளவு நிறுவனங்கள் விரும்புகின்றன.
எனவே தான் உளவு நிறுவனங்கள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாகக் கூறியதோடு மட்டுமல்ல; மரணத்தைப் பற்றி அவ்வப்போது புதிய புதிய கற்பனைகளைகதைகளாக உருவாக்கிப் பரப்பி வருகின்றன.
தலைவர் பிரபாகரன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத செய்தியைத்தான் நாட்டுக்கு நமக்கு விடுத்துள்ளார். அதே வேளையில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று பரப்பப்பட்டு வரும் கருத்துக் களத்தின் ஊடாக நாம் பயனளிக்க வேண்டியுள்ளோம். இந்தப் பின்னணியில் தமிழ் ஈழ விடுதலையை முன்னெடுக்கக்கூடிய செயல் உத்திகளை வகுக்க வேண்டிய அவசியமிருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பற்றிய கருத்து ஒன்று சர்வதேச அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைநாம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். பல நாடுகள் தன்னிச்சையாக தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்து, நிழல் அரசுகளை நடத்தியதை வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. ஸ்காட்லாந்து, லத்தீன், அமெரிக்க நாடுகள், மத்திய அமெரிக்க நாடுகள், எஸ்தோனியா, பின்லாந்து, கினியா பிசாவு, ஹைட்டி,அமெரிக்கா, இந்தோனேசியா, கொரியா, லிதுவேனியா – இப்படிப் பல நாடுகள் தன்னிச்சையாகதங்கள் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தன. இவை அய்.நா. மன்றம் உருவாவதற்கு முன்பே வெளிவந்த பிரகடனங்கள். அய்.நா. உருவான பிறகு, வியட்நாம், இஸ்ரேல், பாலஸ்தீனம், கிழக்கு திமோர் போன்ற நாடுகள், ஒரு சார்பாக தங்கள் விடுதலையை அறிவித்தன. பிறகு, அய்.நா.வில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இப்போது, விடுதலையை அறிவித்துவிட்டு அங்கீகாரத்துக்காக காத்திருக்கக்கூடிய நாடுகளும் இருக்கின்றன. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திபெத் – தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்துள்ளது. ஆனால், இப்படி ஒரு சார்பு சுதந்திரப்பிரகடனத்துக்கு ஏதேனும் ஒரு நாட்டின் ஆதரவு அவசியமாகிறது.
இந்த நிலையில் ஒரு சார்பு சுதந்திர பிரகடனம் என்பதற்கு பதிலாக, ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ (Trans national Government) என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, அதற்காக சட்ட நிபுணர்கள் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சார்பாக சுதந்திரப் பிரகடனம் செய்து,நிழல் அரசு அமைப்பதிலிருந்து (Govt. in Exile) மாறுபட்டது. இரண்டும் வெவ்வேறானவை; நாடு கடந்த தமிழீழ அரசு பிரகடனத்துக்கு எந்த ஒரு நாட்டின் ஆதரவு வேண்டும் என்ற அவசியமில்லை.
இப்படி ஒரு அரசு அறிவிப்பு என்பது – இதுவே முதல்முறை. இதற்கு முன் உலகில் முன் உதாரணம் இல்லை. தமிழர்களுக்கு என்று ஒரு அரசு இல்லை என்றாலும் கூட – இன்று சர்வதேசம் தமிழர்கள் தனித் தேசிய இனம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறது. சிங்களம் – இந்தியா, சீன உதவியோடு நடத்திய இனப்படுகொலையை சர்வதேச சமூகம் உணர்ந்து, சிங்களத்துக்கு எதிராக அய்.நா.வில் தீர்மானம் கொண்டு வரும் நிலை கூட வந்துவிட்டது. சர்வதேச சமூகம் முழுமையான நியாயங்களையோ, நியாயத்திற்கான செயல்பாடுகளையோ தமிழர்களுக்கு வழங்கிடவில்லை என்பது உண்மைதான்.என்றாலும் – ஒரு தனித்த தேசிய இனத்தை சிங்களப்பேரினவாதம் அழித்தொழிக்கும் செயல்பாடுகளிலிருந்து சர்வதேசம் – கண்களை முழுமையாக மூடிக்கொண்டு விடவில்லை. இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினையாக கைகழுவிடவும் இல்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச நாடுகளுக்குஅந்தந்த நாட்டின் புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்ச்சியான அழுத்தத்தைத் தந்து, அந்தநாடுகளை செயல்படுத்த வைக்க வேண்டிய நிலையில்தமிழினம் இருக்கிறது.
இந்த செயல்பாட்டுக்கான அரசியல் தளத்தை‘நாடு கடந்த தமிழீழ அரசு’ உருவாக்கித் தருவதாகவே நாம் கருதுகிறோம். இந்த தனித்துவமான புதிய யுக்தியைப் பயன்படுத்தி, தமிழர்களின் அடையாளம்,மாண்பு, உணர்வுகள், நலன்களைக் காப்பாற்றும் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். தமது ராணுவ வலிமை மூலம் தமிழர்கள் அடையாளத்தை முற்றாக ஒழித்து, சிங்கள அடையாளத்துக்குள் திணிக்க முயற்சிக்கும் சிங்களத்தையும், அதற்கு துணை போகும் பார்ப்பனிய இந்தியாவையும் சர்வதேச சமூகத்தின் முன் அம்பலப்படுத்த வேண்டும்.
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களின் அமைப்புகளுக்கு இணையாக ‘தமிழ் ஈழ அரசு’ உருவாக்கத்தை படிப்படியாக வளர்த்தெடுக்கவேண்டும். (உதாரணமாக இப்போது பிரான்சிலுள்ள 35க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் தங்களின் அமைப்புப் பிரதிநிதிகளைக் கொண்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, ஈழத் தமிழர்களுக்கு, தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று அறிவித்திருக்கிறது) புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொரு நாட்டிலும் ‘தமிழ் ஈழ அரசை’ உருவாக்கிடும்போது அதன் வழியாகக் குரல் கொடுப்பதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையை சிங்களமோ, பார்ப்பனிய இந்தியாவோ, தனது மைதானத்தில் பந்தாக உருட்டி விளையாடிக்கொண்டிருக்கவும் முடியாது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுக் கரங்களாக பல்வேறு தளங்களில் ஊக்கத்துடன் செயல்பட்ட அனுபவங்களைக் கொண்டுமிளிருகின்றன. புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள். இதற்கான உத்வேகத்தையும், செயலாற்றலையும், நிர்வாகத் திறனையும் வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறது விடுதலைப்புலிகள் இயக்கம். இந்த அனுபவங்களும்,ஆற்றல்களும் ஒருங்கிணைப்பும், உந்தும் சக்தியும் வீணாகிப் போய்விடக் கூடாது.
உலகின் பல நாடுகளில் விடுதலைப்புலிகள் தடை செடீநுயப்பட்ட நிலையிலும், அந்தத் தடைகளைக் கடந்தும் இந்த தமிழர் அமைப்புகள் செயல்பட்டபோது, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாக்குவது என்பது இயலாத ஒன்றும் அல்ல.
ஏற்கனவே 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டையில் தமிழர் தலைவர்கள் தமிழ் ஈழத்தைப் பிரகடனம் செய்து, அந்த ஒற்றைக் கோரிக்கையை மட்டுமே முன் வைத்து, தமிழர் பிரதேசமான வடக்கு கிழக்குப் பகுதியில் தேர்தல் களத்தில் நின்று, அந்தக் கோரிக்கைக்கு மக்களின் பேராதரவை வாக்குகளாகப் பெற்று, இலங்கை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த வரலாற்றுப் பதிவு இப்போதும் அப்படியே நீடிக்கிறது. அதே கோரிக்கையை இப்போது சர்வதேச சமூகத்துக்கு ‘நாடு கடந்த தமிழீழ அரசுகள் வழியாகக் கொண்டு செல்வதற்கான நியாயமான உரிமைகள் இருக்கின்றன. இந்த முயற்சிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்த முடியாது; பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் படையணிகளைத் திரட்டி, இன அழிப்பை நடத்த முடியாது. இந்த கோரிக்கை வலிமை பெறும் போது, எதிரிகளை அது குலை நடுங்கச்செய்யும். எதிரியின் இனவாத இனஒழிப்பு நடவடிக்கைகளின்
முகத்திரையும் கிழித்தெறியப்படும். நாம் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
நிழல் அரசு அமைத்துள்ள திபேத்தியர்களுக்கு இந்தியாவில் அகதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உலகம் முழுதும் திபேத்திய அகதிகள் கவுரவத்துடன் நடத்தப்படுகிறார்கள். தங்களுக்கான கூட்டுறவு சங்கங்களை நடத்துகிறார்கள். சீனா – திபேத்தியர் நிழல் அரசை எதிர்த்தாலும், உலக நாடுகள் -திபேத்தியர்களை கவுரவத்துடன் அங்கீகரிக்கிறார்கள். அதே நேரத்தில் திபேத்திய அகதிகளுக்கு வழங்கும் கவுரவத்தையோ, மரியாதையையோ, இந்தியா ஈழத் தமிழ் அகதிகளுக்கு வழங்குகிறதா என்றால் இல்லை.
‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாகும் போது, ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழர்கள் சர்வதேச தமிழர் சமூகம் என்ற அடையாளத்தைத் தழுவுகிறார்கள். ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ ஒன்று உருவாகும் போதே நாடு கடந்த தமிழினம் என்ற உருவாக்கமும் நிகழ்கிறது. இனத்தின் அடையாளத்தோடு எல்லைகளைக் கடந்து நிற்கும் இந்த இனத்தின் ஒருமைப்பாடு தமிழினத்தின் குரலுக்கு உலக அரங்கில் வலிமை சேர்க்கும்; வலிமையை சேர்க்க வைப்போம். அதற்கான உறுதி ஏற்போம். எல்லைகளைக் கடந்த – எல்லைகளைப் பற்றி கவலைப்படாத கலைஞர்கள்,
இது போல் சர்வதேச கலைஞர்களுக்கான குடியரசு ஒன்றை 1996 இல் ஜெர்மன் மூனிச் நகரில் அறிவித்தனர். ஒத்த சிந்தனை, ஒத்த உணர்வு என்ற அடித்தளத்தில் நாட்டின் எல்லைகளைப் புறந்தள்ளி உருவாக்கப்பட்டஇந்த நாடு கடந்த கலைஞர் குடியரசில் 4300 பேர் குடிமக்களாக பதிவு செடீநுதுள்ளனர். இந்த அமைப்பு, சர்வதேச நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாடுகளைக் கடந்த தொண்டு நிறுவனங்கள், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் பலவும் செயல்படுகின்றன. அடீநு.நா.வின் பல்வேறு தளங்களில் இவைகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்பது இனத்தின் அடையாளத்தோடு – ‘தமிடிந ஈழம்’ என்ற தேசியத்தை, தேசிய இனத்துக்கான சுயநிர்ணய உரிமையின் கீழ் முன் வைக்கிறது.
யூதர்கள் மீது நமக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு; பாலத்தீனர்களின் தாயகத்தை அவர்கள் ஆக்கிரமித்து, இ°ரேல் நாட்டை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனாலும்கூட, உலக நாடுகளில் வாடிநந்த யூதர்களின் ஒற்றுமையை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். உலகத்திலே நாடற்ற இனங்களாக இருந்தவர்கள் யூதர்களும், பார்ப்பனர்களும் தான். யூதர்கள் இஸ்ரேலை உருவாக்கிக் கொண்டார்கள்.
ஆனால் பார்ப்பனர்களோ, இந்தியா என்ற தேசியத்தை தனது அதிகாரத்தின் கீடிந கொண்டு வந்து, இந்தியாவில் திணிக்கப்பட்டுள்ள தேசிய இனத்தின் உரிமைகளை அதன் வழியாக நசுக்கிக் கொண்டு, அண்ணா சொன்னது போல் ‘விதைக்காது விளையும் கழனிகளாக’உழைக்காது சுரண்டும் சக்திகளாக, பன்னாட்டு ஏகபோக சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
அதே பார்ப்பனிய இந்திய தேசியம் தான் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாத ஈழத் தமிழர் தேசிய இனத்தின் வலிமையை, அதன் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நசுக்கியிருக்கிறது. தமிடிநநாட்டின்பார்ப்பனரல்லாத தமிழர்களுக்கு வலிமை சேர்த்து விடும் என்ற அச்சத்தில், ஈழத்தமிழினப் படுகொலைக்கு உதவிடும் சக்தியாக செயல்பட்டுள்ளார்கள்.
ஈழத் தமிழர்களும் இந்தப் படிப்பினையை நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் அரசியல் முன் நகர்த்தலில் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
– விடுதலை இராசேந்திரன்
Comments