பாராளுமன்றக் குழு
30-06-2009
ஊடக அறிக்கை
உள்ளுராச்சி சபை தேர்தலில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கட்சிளை புறக்கணிக்க கோரிக்கை- த.தே.கூ யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கு எதிரான கட்சிகளை புறக்கணித்து தமிழ் தேசியத்தின் வெற்றிக்காக ஒற்றுமையுடன் குரல் கொடுத்து வரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினை(தமிழ் தேசியக் கூட்டமைப்பு) வெற்றியடைய வைத்து தமிழ் மக்களின் இலட்சியப் பற்றினையும் ஒன்றுமையையும் உலகுக்கு வெளிப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பி;ன் கரங்களை பலப்படுத்தும் படி வேண்டுகின்றோம். துமிழ் தேசியத்தின் வெற்றியை உறுதிப்படுத்த புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பினையும் வேண்டி நிற்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வெல்லப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் நின்று ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றது. தமிழ் தேசத்தின் தனித்துவம் அதன் சுயநிர்ணய உரிமை, தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பனவற்றை அங்கீகரிக்கப்படும் வகையிலான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக விட்டுக் கொடுப்புக்கள் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டும் முயற்சியில் அற்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்றது.
அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தினை இலங்கை அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தி தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிரந்தரமான கௌரமான அரசியல் தீர்வு ஒன்றினை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தேவை.
இலங்கை அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளால் தமிழ் மக்களுக்கு ஓர் கௌரவமான அரசியல் தீர்வை ஒருபோதும் பெற்றுத்தர முடியாது. மாறாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் இருந்து அவலப்படுவதற்கும் இனத்துவ அடையாளங்களை இழந்து அடிமை வாழ்வு வாழ்வதற்குமே அவர்களால் வழிவகுக்க முடியும்.
தமிழ் இனம் என்றும் இல்லாத நெருக்கடியையும் அவலத்தினையும் அழிவினையும் சந்தித்து நிற்கின்றது. வன்னியில் கௌரவமாக வாழ்ந்த மக்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டியக்கப்பட்டு மூன்று இலட்சம் மக்கள் அடிமைகளாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வந்த போருக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியதுடன் போருக்கு ஆதரவான அவசர காலச்சட்டத்திற்கும் முழுமையான ஆதரவினை வழங்கி வன்னி மக்களின் அழிவுக்கு முழுமையாக உடந்தையாக இருந்தவர்கள் வன்னி மக்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட போரை சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி உலக நாடுகளின் அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை காப்பாற்றி போருக்கு முண்டு கொடுத்து மக்களை அழித்து அடிமைகளாக்கி முகாம்களுக்கு வாழும் நிலையை ஏற்படுத்தியவர்கள் இன்று யாழ் குடா நாட்டிலும் வவுனியாவிலும் உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடுகின்றனர்.
இன்றும் இலங்கை அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் துணை போகின்றனர். இலங்கை அரசாங்கம் வன்னியில் மேற்கொண்;ட இனப் படுகொலைக்கு ஆதரவாக தமிழ் மக்களின் ஆணையை பெற்றுக் கொடுக்க தமிழ் அரசியல் கட்சிகள் சில முயற்சி செய்கின்றனர்.
தமிழ் மக்களது அவல வாழ்வுக்கு துணை நிற்கும் துணை இராணுவக் குழுக்களையும், ஏனைய அரசுக்கு முண்டு கொடுத்து நிற்கும் கட்சிகளையும், பேரினவாதக் கட்சிகளையும் நிரகரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து ஒற்றுமையினையும் சிங்கள தேசத்திற்கு அடிமைகளாக வாழ தயாராக இல்லை என்ற சுதந்திர உணர்வினையும் வெளிப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்தும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.
ஏதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற புலம் பெயர்ந்த தமிழ் மக்களையும் ஒத்துழைக்கும் படி வேண்டுகின்றோம். தமிழ் மக்கள் சிங்கள படைகளின் அடக்கு முறைக்குள் சிங்கள தேசத்திற்கு பணிந்து வாழத் தயாராக இல்லை என்பதனையும், கௌரவமாக சுதந்திரமான அரசியல் தீர்வு ஒன்றினை பெறுவதே தமிழ் மக்களின் அவா என்பதனை சர்வதேச சமூகத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் உணர்த்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து அதன் கரங்களை பலப்படுத்தும் படியும் உங்கள் உறவுகளை உச்சாகப்படுத்துங்கள் என்றும் வேண்டுகின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்றக் குழு
Comments