இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற, நடைபெற இருக்கின்ற திரைமறைவு இனஅழிப்பு மற்றும் அரசியல் காய்நகர்த்தல் நடவடிக்கைகளை இங்கிலாந்தின் பல ஊடகங்கள் தற்போது வெளிப்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே.
இவ்வாறான தருணத்தில் நாம் இவ்வூடகங்களோடு இணைந்து பணியாற்றுவது மிகவும் அவசியமாகின்றது. இப்பணி மிகவும் விசாலமானது. இதற்கு ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் இத்துறையில் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகின்றது.
இப் பாரிய பணியை செவ்வனே செய்வதற்கு பல தேர்ச்சி பெற்ற ஊடகவியளார்களையும் ஆர்வம் உள்ளவர்களையும் அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1) உள்ளூர் மற்றும் பிரதான ஊடங்களுடன் உறவை வளர்ப்பது.
2) தமிழ் , ஆங்கில மற்றும் சகலமொழி ஊடகங்களிற்க்கு செய்தி வழங்குவது.
3) தமிழ் ஆங்கில மற்றும் சகல மொழிகளில் மொழிபெயர்த்தல் மற்றும் தட்டச்சு செய்தல்.
4) தமிழ், ஆங்கில மற்றும் சகல மொழிகளிலும் உள்ள ஊடகவியளார்களுடன் நட்புறவை வளர்த்தல்.
5) தமிழ், ஆங்கில மற்றும் சகலமொழி ஊடகங்களில் வரும் தகவல்களுக்கு அபிப்பிராயம் எழுதுவது.
6) தமிழ், ஆங்கில மற்றும் சகலமொழி ஊடகங்களிற்க்கு கட்டுரை வரைவது.
7) இணையத்தளத்தில் பதிவேற்றுதல்.
8) உங்களுக்கு தெரிந்த ஊடகவியளார்களின் தொடர்பை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்.
9) இளம் ஊடகவியளாளர்களை வளர்த்தெடுக்குமுகமாக பயிற்சிப்பட்டறைகளை நடாத்தக்குடியவர்கள்
மேற்குறிப்பிட்டவற்றில் எத்துறையிலேனும் தேர்ச்சி மற்றும் ஆர்வம் உள்ளோர் உங்கள் சுயவிபர கோர்வையுடன் (curriculum vitae) உடனே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்புகட்க்கு:- media@tamilsforum.com , 020 8808 0465
நன்றி
ஊடகத்துறை
பிரித்தானிய தமிழர் பேரவை
Comments