பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார், நம்புங்கள்! - நெடுமாறன் மீண்டும் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார், நம்புங்கள். 5-ம் கட்ட ஈழப்போரை நடத்தப் போகிறவர் அவர்தான், என மீண்டும் அறிவித்துள்ளார் பழ நெடுமாறன்.srilanka

பிரபாகன் இறந்துவிட்டதாக புலிகள் இயக்கமே அறிவித்துள்ள நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக பல இயக்கங்கள், இறுதிக் கட்டப் போரில் பங்கேற்ற மூத்த விடுதலைப் புலிகள் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு முன்னணி போராளியும் பிரபாகன் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் இதுபோன்ற செய்திகள் வருவது சரியல்ல என்று புலிகள் இயக்கத்திலிருந்து நிர்மலன் என்பவர் பெயரில் தொடர்ந்து மின்னஞ்சல்கள் பல செய்தியாளர்களுக்கும் மீடியாவுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இப்போதும் மிக வலுவாகவே உள்ளது. அதன் காரணமாகவே பிரபாகரனுக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தாமல், அவர் உயிருடன் இருக்கிறார், அவரே ஈழப்போரை மீண்டும் பெரிய அளவில் நடத்துவார் என தமிழகமெங்கும் பொதுக்கூட்டங்கள் மூலம் பரப்பப்பப்பட்டு வருகிறது. வைகோ, பழ நெடுமாறன், ராமதாஸ், சீமான் போன்றவர்கள் இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் தமிழீழ ஆதரவாளர்கள் சார்பில் தமிழீழமும், நமது இன்றைய கடமையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் திருப்பூர் டவுன் ஹால் அரங்கில் நடந்தது.

கருத்தரங்கில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:

இலங்கையில் போர் நடந்த போது, அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளி உலகுக்கு தெரிவிக்க எவரும் இல்லை. தமிழர்களுக்காக இலங்கை பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கு கூட, தமிழ் எம்.பி.க்கள் அங்கு இல்லை. திட்டமிட்டே இலங்கை அரசு இதை செய்தது.

போர் முடிந்தும் கூட இலங்கையில் சொந்த மண்ணில் தமிழர்கள் பிச்சைக்காரர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் இளம்பெண்களை சிங்கள ராணுவ முகாம்களுக்கு அழைத்து சென்று சொல்ல முடியாத துயரங்களை செய்கிறார்கள். இலங்கையில் உள்ள தமிழ் பெண்கள் வயிற்றில் சிங்கள குழந்தைகள் உருவாகி வருகிறார்கள். தமிழ் இனத்தை அழிப்பதே இதன் நோக்கமாகும்.

போர் முடிந்தும் கூட இலங்கையில் சொந்த மண்ணில் தமிழர்கள் பிச்சைக்காரர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் இளம்பெண்களை சிங்கள ராணுவ முகாம்களுக்கு அழைத்து சென்று சொல்ல முடியாத துயரங்களை செய்கிறார்கள். இலங்கையில் உள்ள தமிழ் பெண்கள் வயிற்றில் சிங்கள குழந்தைகள் உருவாகி வருகிறார்கள். தமிழ் இனத்தை அழிப்பதே இதன் நோக்கமாகும்.

போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்தாக இலங்கை ராணுவம் அறிவித்தது. மரபணு சோதனை நடத்திய பின்பு பிரபாகரனின் உடலை எரித்து விட்டதாகவும் அவர்கள் கூறினார்கள். ஆனால் இலங்கையில் மரபணு சோதனை நடத்த வசதியில்லை. மேலும் மரபணு சோதனைக்காக பிரபாகரனின் ரத்த உறவுகளிடம் சோதனை மேற்கொள்ளவில்லை.

30 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்துக்கு சவால் விட்டு வரும் பிரபாகரன் கொல்லப்பட்டு இருந்தால், அவருடைய உடலை எடுத்துக் கொண்டு இலங்கை மாநகரில் ராணுவத்தினர் ஊர்வலம் நடத்தியிருப்பார்கள். சர்வதேச பத்திரியாளர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்திருப்பார்கள். ஆனால் இப்போது அவசர அவசரமாக பிரபாகரன் உடலை எரித்து விட்டதாகக் கூறுகிறார்கள்.

இதைவைத்து மட்டுமல்ல… மேலும் சில ஆதாரங்கள் இருப்பதாலேயே கூறுகிறேன்… பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று. விரைவில் பிரபாகரன் பேசுவார். அப்போது பலரது முகத்திரை கிழியும்.

கடந்த 1984, 1987, 1989, 2004 என்று 4 முறை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. அதுபோல் இந்த முறையும் அறிவித்துள்ளது. துரதிருஷ்டவசமாக இதனை சில போராளிகளே திரும்பத் திரும்ப கூறிவருகிறார்கள். இதுவரை 4 ஈழப்போர் நடந்து முடிந்துள்ளது. 5 வது ஈழப்போரை பிரபாகரன் விரைவில் முன்னெடுத்து நடத்துவார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தமிழர்கள் உரிமை பெறவும், உலக தமிழர்கள் உரிமை பெறவும் உலகில் உள்ள 10 கோடி தமிழர்கள் ஒன்று பட்டு போராட வேண்டும்”, என்றார் நெடுமாறன்.

Comments

Anonymous said…
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்